Latest Movie :

FAVOURITE CULT MOVIES IN TAMIL..!!

                      இன்னிக்கி தமிழ் movies-ல எனக்கு புடிச்ச 'Cult Movies' பத்தி பார்க்கலாம்.. 'Cult Movies'னா என்னன்னு இதுக்கு முன்னாடி போஸ்ட்லையே நான் எனக்கு தெரிஞ்சத வெச்சி சொல்லிட்டேன்.. பரவால அத பத்தி திரும்பவும் சொல்றேன்..
                      'Cult' - இந்த வார்த்தைக்கான பொதுவான அர்த்தம் என்னன்னா ஒரு விஷயத்த பயங்கரமா ( வெறியா ) வழிபடுறது..
                       சரி இப்ப Cult Movies-ன என்னன்னு பாப்போம்.. ஒரு படத்த அது ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் கழிச்சியும்.. அந்த படத்துல வர காட்சியை ,வசனத்தை ,இசையை ரசிகர்கள் கொண்டாடி ரசிச்சிட்டே இருந்தாங்கனா ,அந்த படத்த Cult Movieன்னு சொல்லுவாங்க.. அந்த படங்கள் வெளியான நேரத்துல ,அந்த படங்கள் பொருளாதரத்தில் பெரிய புரட்சி உண்டு பண்ணாமல் இருந்து இருக்கலாம்.. ஆனா மக்கள் மனதுல பயங்கரமான புரட்சி உண்டு பண்ணி இருக்கும்.. அப்போ ஏன் படம் ஹிட் ஆகலன்னு யோசிக்கிரிங்களா..?? இதற்கான பதில தான் நானும் தேடிட்டு இருக்கேன்.. 'மான் கராத்தே' மாதிரி படம் ஹிட் ஆகும் போது ஏன் 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி படம் ஹிட் ஆகுல..? இது என்ன மாத்திரம் உறுத்துற கேள்வி இல்ல.. எல்லா சினிமா வெறியர்களுக்குமே இருக்குற ஒரு ஆதங்கம்.. ஆனா அதுக்கு நிறைய காரணங்கள் சொல்லுவாங்க.. படம் மக்களுக்கு புரியல ,பெண்கள் பார்க்க முடியாது , குடும்பங்களுக்கான படம் கிடையாது ,சரியான நேரத்துல ரிலீஸ் ஆகல.. இதுமாதிரி என்னனவோ காரணங்கள் சொல்லுவாங்க.. எனக்கு எதுமே சரியாய் படல.. அதுக்கான விடையை தேடிட்டே தான் இருக்கேன்.. என்னிக்குமே தேடிட்டே தான் இருப்பேன்.. ஏன்னா அந்த விடையை பெரிய பெரிய டைரக்டர்ஸ் ,தயாரிப்பாளர்கள்னாலயே கண்டுபுடிக்க முடில.. நாம எங்க..? அட Cult பத்தி பேச ஆரம்பிச்சு ,topic எங்கங்கயோ போகுது.. சரி மறுபடியும் Cultக்கு வருவோம்.. இந்த படங்கள் ரிலீஸானா சமயத்துல ,இந்த படங்கள் பெரிய சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கும்.. காரணங்கள் நிறைய இருக்கலாம்.. வன்முறை ,மதம் ,பாலியல் பிரச்சனை ,gore ,nudity இதுல எது வேணும்னாலும் இருக்கலாம்.. இந்த மாதிரி சர்ச்சையான படங்களும் Cult வகையில சேரும்.. சரி இந்த மாதிரி Cult படங்களில் எனக்கு புடிச்ச 10 படங்கள் பத்தி பார்க்கலாம்... இந்த படங்களில் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சது.. என்னால இந்த படங்கள Top 10-ah வரிசை படுத்த முடியல..
                       தமிழ் படங்களுல 'Cult Movies'-ah கண்டுப்புடிக்கிறது ரொம்ப சுலபம்.. உங்களுக்கு ஒரு படம் புடிச்சி இருந்து அந்த படம் ஹிட் ஆகலைன்னு வெய்ங்க.. அந்த படம் கண்டிப்பா 'Cult Movie' தான்.. எனக்கு தெரிஞ்சி தமிழ்ல Cult Moviesன்னு சொல்ற ஒருசில படங்கள தவிர எல்லாமே பொருளாதாரத்துல பெரிய வெற்றியடையில..



10.Kattradhu Thamizh - Ram


                      தியேட்டர்ல இந்த படம் சரியாய் போகலைனாலும்.. Facebookல படம் ரொம்ப நல்லா போச்சு.. ரொம்ப நல்லா பேச்சு.. படத்தோட ஒவ்வொரு வசனமும் ,ரொம்ப நல்லா இருக்கும்.. மனசாட்சிய தட்டி கேக்குற மாதிரி இருக்கும்.. படம் பிரபாகருக்கும் ,ஆனந்திக்கும் இருக்குற அழகான காதல சொல்லும்... சின்ன வயசுல ஆரம்பிச்சி ,இருதி காட்சி வரைக்கும் அவங்களுடைய காதல் ரொம்ப அழகா இருக்கும்..படம் முடியும் போது.. கண்டிப்பா உங்க கண்ணு கலங்கும்..


9.Virumaandi - Kamal Haasan


                      கமல் ஓட நிறைய படங்கள் கண்டிப்பா தமிழ் 'Cult Movies'-ல சேரும்.. என்னதான் அவரு இங்கிலீஷ் படங்கள பார்த்து காப்பி அடிக்கிறாரு என்ற வாதங்கள் இருந்தாலும். தமிழ் சினிமாவ அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லுற ஆட்களில் முதல் நாயகன் நம் உலக நாயகன்.. இந்த படத்த Rashomon effect  ( இதைப்பற்றி தெரிந்து கொள்ள அதை கிளிக் செய்யவும் ) அப்படின்னு சொல்ற கான்செப்ட் வெச்சி எடுத்து இருப்பாங்க.. இந்த படத்தோட மெயின் தீம் தூக்கு தண்டனையா நம்முடைய நாட்டுல இருந்து நீக்கணும் என்பது தான்.. அதுக்கு ஒரு அற்புதமான கதை அமைச்சி.. அந்த ஒரே கதைய ரெண்டு பேரோட கோணத்துல ரொம்ப நல்லா காமிச்சி இருப்பாங்க.. இந்த படம் சரியாய் ஓடல.. ஆனா நிறைய பேருக்கு புடிச்சி இருந்திச்சி.. இது போதும் ,இந்த படத்த Cult வகையில சேக்குறதுக்கு..


8.Aadukalam - Vetrimaran


                     பொல்லாதவனுக்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம்னால , இந்த படத்துக்கு சம எதிர்பார்ப்பு இருந்திச்சி.. கோழி சண்டைய மையமா வெச்சி வந்த இந்த படம்.. மனுஷங்களோட சண்டைய ரொம்ப வெளிப்படையா காமிச்சி இருக்கும்.. ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்குமான சண்ட தான் படம்.. படத்துல அந்த கோழி சண்ட Graphicsனாலும் ரொம்ப தத்ரூபமா இருக்கும்.. இந்த படத்த நிறைய வாட்டி டிவி-ல போட்டுடாங்க.. பார்க்க தவறி இருந்திங்கனா.. மறக்காம அடுத்த வாட்டி பாருங்க.. இந்த படத்துக்கு நம்ம தனுஷ் நடிப்புக்கு தேசிய விருது வாங்குனாரு..அதோடு சேர்ந்து படம் மொத்தம் 6 தேசிய விருது வாங்கிச்சி.. இந்த படத்துக்கு வெற்றிமாறன் 3 கிளைமாக்ஸ் எடுத்து வெச்சி இருந்தாருன்னு கேள்விப்பட்டேன்...


7.Anbe Sivam - Sundar.C


                        எனக்கு மிகவும் புடிச்ச படங்களுள் இதுவும் ஒன்று ,ஏன் ஒரு முக்கியமான ஒன்று.. முன்னப்பின்ன தெரியாத ரெண்டு பேர் ,ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையினால ஒன்னா சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தம்.. அதுனால அவங்க ரெண்டு பேர் வாழ்கைலயும் நடக்குற விஷயங்கள் தான் கதை.. இந்த படம் ஏன் தோல்வி அடஞ்சிச்சின்னு இன்னிக்கு வரைக்கும் தெரில.. அப்படி என்ன அந்த படத்துல நல்லா இல்லைன்னு தெரிஞ்சிக்க  நானும் ஒரு 30 முறை பார்த்து இருப்பேன்.. ஆனால் ஒவ்வொரு வாட்டியும் அந்த படத்து மேல இருந்த ஈடுப்பாடு தான் அதிகம் ஆச்சு.. ரொம்ப சிறந்த படம்.. என்ன பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமால வந்த சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று..!!


6.Moodar Koodam - Naveen 


                என்னுடைய நண்பர்கள் இந்த படத்துக்கு போய்ட்டு வந்து ,யாரும் போய்டாதீங்கன்னு சொன்னங்க ,ஆனா படத்தோட trailer-ah முன்னாடியே பார்த்த காரணத்துனால நான் அவங்க பேச்சை மீறி அந்த படத்துக்கு போனேன்.. படம் என்ன ஒரு நிமிஷம் கூட ஏமாத்துல.. அப்புறம் தான் உணர்ந்தேன்.. நம்ம மக்கள்ள நிறைய பேர் இன்னும் மாறவே இல்லைன்னு.. இன்னும் அவங்களுக்கு 5 பாட்டு ,8 சண்ட கொண்ட படங்கள் தான் பிடிக்குது.. இது என்னிக்கு மாறுமோ..? சரி அத விடுவோம்.. ஒரு 4 பேரு போலீஸ் ஸ்டேஷன்ல சந்திக்கிறாங்க.. அதுல ஒருத்தனோட மாமா வீட்டுல கொள்ளை அடிக்க போறாங்க.. அங்க இருந்து ஆரம்பிக்குதுங்க comedy.. படத்த ரொம்ப ரசிச்சி ரசிச்சி பார்த்தேன்.. படத்துல நாய்ல இருந்து பொம்மை வரைக்கும் எல்லாருக்குமே ஒரு அருமையான flashback.. படத்தோட type Guy Ritchie படம் மாதிரி இருந்தாலும்.. ஒரே வீட்டுல நடக்குற கதைய போர் அடிக்காம சொன்னதுக்கு நவீன்க்கு பெரிய பாராட்டுகள்..       


5.Heyram - Kamal Haasan


                    இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்துல படம் படுதோல்வி அடஞ்சிச்சி.. அப்போ நான் சின்ன பையன்.. இந்த படம் நீ பாக்க கூடாதுடான்னு என் வீட்டுல சொல்லிட்டாங்க.. படத்துல ஏதோ தப்பான விஷயம் இருக்குது போல ,அதுனால தான் இப்படி சொல்ராங்கன்னு நினைச்சிக்கிட்டேன்.. எல்லாம் புரியுற வயசு வந்த அப்புறம் ,இந்த படத்த உட்கார்ந்து பார்த்த தான் புரியுது படத்துல வர அந்த முத்தகாட்சிகாக என்ன படத்தையே பார்க்க வேணாம்னு சொல்லிட்டாங்கன்னு.. அப்படியே படத்த பார்த்து இருந்தாலும்.. ஒன்னும் புரிஞ்சி இருக்காது அந்த வயசுல..,இந்த படத்த semi-Fictionalன்னு  சொல்லுவாங்க.. ஏன்ன படம் உண்மை சம்பவங்கள அடிப்படையா கொண்டு உருவாக்கப்பட்டது.. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிஞ்ச சமயத்துல ஏற்படுற கலவரத்துனால பாதிகப்படுற ஒரு மனிதனுடைய பார்வையும் வலியும் தான் இந்த படம்.. இந்திய சினிமால ரொம்ப முக்கியமான படம்.. அறிவுக்கும் சரி ,மனசுக்கும் சரி...


4.Aayirathil Oruvan - Selvaraghavan


                    இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருந்திச்சி.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. இந்த படத்துக்கு அடிச்சி புடிச்சி FDFS டிக்கெட் வாங்கிட்டு படத்த பார்த்தேன்.. 1st half முடிஞ்சா அப்புறம் வேற உலகத்துல இருந்திட்டு வந்த மாதிரி இருந்திச்சி... கண்டிப்பா இதுதான் selva ஓட masterpiece என்ன பொறுத்தவரைக்கும்.. ஒரு சோழர்கள் வாந்த இடத்த கண்டுபுடிக்க சென்ற  ஆராய்ச்சியாளர தேடி போற பயணம் ,7 தடைகள தாண்டி, சோழர்கள் வாழ்ந்த இடத்த கண்டுபுடிக்கிறாங்க.. அதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு தெரியுது சோழ  வம்சம் இன்னும் இருக்காங்கனு .. அதுக்கு அப்புறம் என்ன நடந்துது என்பத Fantasy-ah சொல்லி இருப்பாரு.. இந்த மாதிரி படத்த செலவானால மட்டும் தான் எடுக்க முடியும்... தமிழ் சினிமால இருக்குற சிறந்த Cult Movieல இந்த படம் கண்டிப்பா முக்கியமானதா இருக்கும்..


3.Pudhupettai - Selvaraghavan


                    என்ன பொறுத்த வரைக்கும் செல்வராகவன் genius என்பதுக்கு ஆயிரத்தில் ஒருவன் அப்புறம் புதுபேட்டை.. இந்த ரெண்டு படமே போதும் .. இது வரைக்கும் நான் பார்த்த gangster சினிமாலையே.. ஒரு உண்மையான முயற்சி இந்த படம் தான்.. படத்துல ஒவ்வொரு வசனமும் ரொம்ப அற்புதமா இருக்கும்.."நெருப்பு மாதிரி வேல செய்யணும் குமாரு" , "தியாகம் தான் உன்னை உயர்த்தும்" , "உயிரோடிருக்கணும் கண்ணு" , ஒவ்வொரு வசனமும் எனக்கு மனப்பாடமா தெரியும்.. ஒரு சாதாரண பையன் எப்படி பெரிய தாதா ஆகுறான்றது தான் கதை.. ஆனா அத ரொம்ப தத்ரூபமா காமிச்சி இருப்பாரு.. இந்த படத்தோட பெரிய சறுக்கலா சொன்னது தனுஷ் ஹீரோவா நடிச்சததான்.. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் குமார் கேரக்டர்ல தனுஷ தவிர வேற யாரு நடிச்சி இருந்தாலும் ,இந்த அளவுக்கு நல்லா இருந்து இருக்குமான்னு எனக்கு தெரில.. படத்தோட BGM அதுக்காகவே படத்த இன்னும் சில வாட்டி சேர்த்து பார்க்கலாம்..அதுவும் கிளைமாக்ஸ்ல மூர்த்திய வெட்டும் போது ஒரு BGM வரும் பாருங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.. ஒரு வேல இந்த படத்த தவற விட்டு இருந்திங்கனா.. தயவு செய்து முதல் வேலையா இந்த படத்த பாருங்க..!! 


2.Aaranya Kaandam - Thiagarajan Kumararaja


                 தமிழ் சினிமாவோட முதல் neo-noir ,Genre வகையை சார்ந்த படம் இதுதான்.. சில நல்ல படங்கள் தோல்வி அடைஞ்சி இருக்கு.. ஆனா அது கொஞ்ச நாளாவது தியேட்டர்ல ஓடி பார்த்து இருக்கேன்..ஆனா இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆன ஞாபகம் நிஜமா எனக்கு இல்ல.. இந்த படத்த பத்தி நான் கேள்வி பட்டேன்.. அதுனால மொக்க பிரிண்ட் ஆகுது டவுன்லோட் பண்ணி பார்த்தேன்.. ஆனா நிறைய பேருக்கு விஜய் அவார்ட்ஸ்ல இந்த படம் நிறைய விருது  வாங்குன அப்புறம் தான் ,இப்படி ஒரு படம் இருக்குனே நிறைய பேருக்கு தெரிஞ்சிச்சி.. ஒரு வேல இந்த படத்துக்கு சரியான விளம்பரம் குடுத்து இருந்த படம் நல்ல ஓடி இருக்குமோ என்னவோ..? எப்படி இருந்தாலும் இந்திய சினிமாலையே இந்த படம் ஒரு மைல் கல்.. படத்தோட திரைக்கதை ரொம்ப அற்புதமா இருக்கும்.. 6 பேரோட வாழ்க்கைல நடக்குற கதை தான் இந்த படம்.. படத்துல ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப தனித்துவமா இருக்கும்.. எல்லாரும் படத்துல ரொம்ப நல்லா நடிச்சி இருப்பாங்க.. தமிழ் சினிமாவ உலக அரங்குல தலை நிமிர செய்த படம்.. படத்தோட BGM படத்துக்கு பெரிய பிளஸ்.. படத்துல பாட்டுலாம் கிடையாது.. படம் போறதே தெரியாது.. அவ்ளோ ஸ்பீடா போகும்.. தவறாம பார்க்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று..!!


1.Onaayum Aattukkuttiyum - Myskkin       


                     தமிழ் சினிமால அடுத்து நான் ரொம்ப ரசிக்கிற டைரக்டர் ,மிஸ்கின்.. மனிதர்கள் உணர்வ ,அவங்க பயத்த ,அவங்களுடைய கோவத்த ரொம்ப நுட்பமா வெளிப்படுத்துற டைரக்டர்.. சித்திரம் பேசுதடில இருந்து இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வரை அவருடைய எல்லா படங்களும் எனக்கு ரொம்ப புடிக்கும் ( முகமூடி தவிர ).. தமிழ் சினிமால Crime/Thriller படம் எடுக்குறவங்க ரொம்ப கம்மி.. பொதுவாவே எனக்கு அந்த Genre படங்கள்னா ரொம்ப புடிக்கும்.. அதுனால இவர ரொம்ப புடிக்கும்.. இந்த படத்தோட கதை என்னன்னா ஒரு மருத்துவ கல்லூரி பையன் ,ரோட்ல குண்டடி பட்டு இருக்குற ஒருத்தர ,வேற வழி இல்லாத காரணத்துனால அவனே operation பண்ணி காப்பாதுறான்.. அடுத்த நாள் காலைல அந்த குண்டடி பட்டவன் எஸ்கேப் ஆய்டுறான்... அதுக்கு அப்புறம் அந்த பையன போலீஸ் கைது பண்ண வருது .. அப்புறம் தான் தெரியுது ,அவன் காப்பாத்துனது ஒரு மிகபெரிய கொலை குற்றவாளியன்னு.. போலீஸ் அந்த பையன் தான் அந்த குற்றவாளிய சுட்டு கொல்லணும்னு சொல்றாங்க.. அதுல இருந்து படம் பயங்கர ஸ்பீடா போகும்.. படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச சீன் அந்த கல்லறைல கதை சொல்ற சீன்.. அந்த சீனுக்காகவே படத்த 3 தடவ நான் தியேட்டர்ல பார்த்தேன்.. தமிழ் 'Cult Movies'னு யாரு போஸ்ட் போட்டாலும் முதல் 10 இடங்களில் இந்த படம் கண்டிப்பா வந்துரும்.. அதுனால படத்த பார்க்கலைனா , தவறாம பாருங்க.. ரொம்ப அருமையான படம்.. 

OTHER MOVIES

                       எனக்கு புடிச்ச வேற சில tamil Cult Movies ஓட போட்டோஸ்ஸ கீழ போட்டு இருக்கேன்.. பார்த்து தெரிந்து கொள்ளவும்.. இதுல சில படங்கள் வசூல் ரீதியா பெரிய சாதனையும் பண்ணி இருக்கு.. சில படங்கள் சுத்தமா ஓடாமையும் இருந்து இருக்கு.. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ,இது எல்லாமே எனக்கு புடிச்ச cult movies  



 பி.கு :எனக்கு புடிச்ச English Cult Movies பத்தி படிக்கணும்னா அதை கிளிக் செய்யவும்....

Minimalistic Photo Courtesy : Arun Prasad ( Bro Once Again Thanks Fa letting me use your works..!! )

Share this article :

Post a Comment