Latest Movie :

FAVOURITE CULT MOVIES IN ENGLISH..!!

                      இன்னிக்கி இங்கிலீஷ்ல இருக்குற எனக்கு புடிச்ச 10 Cult Films In English படங்கள பத்தி பார்க்கலாம்... சினிமாவுடைய வெறித்தனமான ரசிகர்களுக்கு இந்த வார்த்தை முன்னாடியே பரிச்சியம் ஆனதா தான் இருக்கும்.. இல்லாதவங்களுக்கு எனக்கு தெரிஞ்சத வெச்சி புரியவைக்க முயற்சி பண்றேன்.. இப்பவே சொல்லிடுறேன் இது என்னோட ரசனைக்கு புடிச்ச படங்கள்.. கண்டிப்பா இத விட இன்னும் சிறந்த படங்கள்லாம் இருக்கும்.. அது ஏன் என் லிஸ்ட்ல இல்லனா.. ஒன்னு அந்த படத்த நான் பார்த்து இருக்க மாட்டேன்.. இல்ல அந்த படம் எனக்கு புடிச்சி இருக்காது.
                      'Cult' - இந்த வார்த்தைக்கான பொதுவான அர்த்தம் என்னன்னா ஒரு விஷயத்த பயங்கரமா ( வெறியா ) வழிபடுறது..
                       சரி இப்ப Cult Movies-ன என்னன்னு பாப்போம்.. ஒரு படத்த அது ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் கழிச்சியும்.. அந்த படத்துல வர காட்சியை ,வசனத்தை ,இசையை ரசிகர்கள் கொண்டாடி ரசிச்சிட்டே இருந்தாங்கனா ,அந்த படத்த Cult Movieன்னு சொல்லுவாங்க.. அந்த படங்கள் வெளியான நேரத்துல ,அந்த படங்கள் பொருளாதரத்தில் பெரிய புரட்சி உண்டு பண்ணாமல் இருந்து இருக்கலாம்.. ஆனா மக்கள் மனதுல பயங்கரமான புரட்சி உண்டு பண்ணி இருக்கும்.. அப்போ ஏன் படம் ஹிட் ஆகலன்னு யோசிக்கிரிங்களா..?? இதற்கான பதில தான் நானும் தேடிட்டு இருக்கேன்.. 'மான் கராத்தே' மாதிரி படம் ஹிட் ஆகும் போது ஏன் 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி படம் ஹிட் ஆகுல..? இது என்ன மாத்திரம் உறுத்துற கேள்வி இல்ல.. எல்லா சினிமா வெறியர்களுக்குமே இருக்குற ஒரு ஆதங்கம்.. ஆனா அதுக்கு நிறைய காரணங்கள் சொல்லுவாங்க.. படம் மக்களுக்கு புரியல ,பெண்கள் பார்க்க முடியாது , குடும்பங்களுக்கான படம் கிடையாது ,சரியான நேரத்துல ரிலீஸ் ஆகல.. இதுமாதிரி என்னனவோ காரணங்கள் சொல்லுவாங்க.. எனக்கு எதுமே சரியாய் படல.. அதுக்கான விடையை தேடிட்டே தான் இருக்கேன்.. என்னிக்குமே தேடிட்டே தான் இருப்பேன்.. ஏன்னா அந்த விடையை பெரிய பெரிய டைரக்டர்ஸ் ,தயாரிப்பாளர்கள்னாலயே கண்டுபுடிக்க முடில.. நாம எங்க..? அட Cult பத்தி பேச ஆரம்பிச்சு ,topic எங்கங்கயோ போகுது.. சரி மறுபடியும் Cultக்கு வருவோம்.. இந்த படங்கள் ரிலீஸானா சமயத்துல ,இந்த படங்கள் பெரிய சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கும்.. காரணங்கள் நிறைய இருக்கலாம்.. வன்முறை ,மதம் ,பாலியல் பிரச்சனை ,gore ,nudity இதுல எது வேணும்னாலும் இருக்கலாம்.. இந்த மாதிரி சர்ச்சையான படங்களும் Cult வகையில சேரும்.. சரி இந்த மாதிரி Cult படங்களில் எனக்கு புடிச்ச 10 படங்கள் பத்தி பார்க்கலாம்... இந்த படங்களில் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சது.. என்னால இந்த படங்கள Top 10-ah வரிசை படுத்த முடியல.. அதுனால IMDB rating மூலமா வரிசைப்படுத்திறேன் ...



10.Evil Dead - Sam Raimi 


                இந்த படம் Horror ,Genre வகையை சார்ந்தது.. இந்த படம் மொத்தம் 3 பார்ட் வெளியாச்சு..

  • Evil Dead 1 - 1981
  • Evil Dead 2 - 1987
  • Evil Dead 3 - 1992

                படத்தோட கதை என்னன்னா, எல்லா பேய்கதை மாதிரி தான்.. 5 பேர் ஒரு விடுமுறைக்கு ஒரு வீட்டுக்கு போறாங்க.. அங்க அமானுஷயமான விஷயங்கள் சிலது நடக்குது.. அப்ப ஒரு நாள் , அவங்க ஒரு புஸ்தகத்த கண்டுபிடிக்கிறாங்க.. அதுல இருக்குறத படிக்கும் போது, அங்க இருக்குற பேய் எல்லாமே பூமியிலிர்ந்து வெளியவருது.. அதுக்கு அப்புறம் அந்த பேய்கள் கிட்ட இருந்து அவங்க தப்பிச்சாங்கலா இல்லையான்றது தான் கதை..
இந்த படத்தோட முதல் பார்ட் பயங்கரமான ஹிட்.. ஆனா ரெண்டாவது ,மூணாவது பார்ட் பொருளாதாரத்துல பெரிய ஹிட் இல்லனாலும்.. அது ரெண்டுமே 'Cult Movies' வகையில சேர்ந்திடிச்சி..இந்த படம் வந்த நேரத்துல.. horror படத்துல இந்த படம் ஒரு புரட்சின்னு எல்லாரும் பேசிக்கிடாங்கலாம்.. நம்ம சென்னைல கூட இந்த படம் நல்ல ஓடிச்சின்னு எங்க அப்பா சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்..


9.Mulholland Drive - David Lynch 


                இந்த படம் Neo-noir ,Genre வகையை சார்ந்தது.. படம் 2001-ல ரிலீஸ் ஆன படம்..படத்தோட கதைய கண்டிப்பா சின்னதா சொல்லி முடிக்க முடியாது.. கூடிய சீக்கிரத்துல இந்த படத்தோட முழு விமர்சனம் பாக்கலாம்.. இப்பதிக்கு சின்னதா சொல்றேன்.. படத்தோட கதை ரெண்டு பாகமா பிரிக்க பட்டு இருக்கும்.. படத்தோட ஹீரோயின் ஓட கனவு ( Hallucination ) வாழ்க்க ஒரு பார்ட் ஆகவும்.. அவளுடைய உண்மையான வாழ்க்க ஒரு பார்ட் ஆகவும் பிரிக்க பட்டு இருக்கும்.. படம் கண்டிப்பா 2 ,3 வாட்டி பார்த்த தான் புரியும்.. David Lynch ஓட சிறந்த படம்னு இந்த படத்த சொல்லுறாங்க.. 'Cult Movie'-ல சேருற அத்தன தகுதியும் இந்த படத்துக்கு இருக்கு.. படம் பாக்கும் போது உணருவிங்க..


8.Donnie Darko - Richard Kelly 


                  இந்த படம் Fantasy ,Genre வகையை சார்ந்தது.. படம் 2001-ல ரிலீஸ் ஆச்சு...இந்த படம் Time Travel-ஐ அடிப்படையா கொண்டது.. நம்ம ஹீரோ பேரு Donnie Darko ,அவன் கண்ணுக்கு ஒரு பெரிய மனுஷன் மாதிரி இருக்குற முயல் தெரியும்.. அது பேரு Frank..அது அவன் கிட்ட உலகம் இன்னும் 28 நாள்ல அழிய போகுதுன்னு சொல்லுது.. அன்னிக்கி Donnie வெளிய போய்ட்டு வரும் போது ,அவன் ரூம்ல ஜெட் என்ஜின் விழுந்து இருக்குது.. அதுல இருந்து அவன் Frank சொல்றத எல்லாத்தையும் கேட்டு அப்படியே நடக்குறான்.. Frank சொன்ன 28 நாள்க்கு அப்புறம் என்ன ஆச்சு.? உலகம் அழிஞ்சிதா.? இத டைம் travel , vortex இது மாதிரி விஷயங்கள் வெச்சி சொல்லி இருப்பாங்க.. அருமையான படம்.. பாக்க தவற விடாதீங்க..


7.The Big Lebowski - Coen brothers


                    இந்த படம் Comedy ,Genre வகையை சார்ந்தது..படம் ரிலீஸ் ஆனது 1998ல.. எனக்கு ரொம்ப புடிச்ச படம்.. படம் ஆரம்பத்துல இருந்து சிரிசிட்டே இருப்பீங்க..கதையே எனக்கு ரொம்ப புடிக்கும்.. படத்தோட ஆரம்பத்துல நம்ம ஹீரோ Dude ( அவர எல்லாரும் அப்படித்தானே கூப்புடும்னு ஆசப்படுவார்..நாமளும் அப்படியே கூப்பிடுவோம்..) அவரு உண்மையான பேரு Lebowski.. ஒரு நாள் ரெண்டு பேர் வந்து அவர் பொண்டாட்டி வாங்குன காச திருப்பி தரணும்னு மிரட்டிட்டு.. அவருடைய carpet-ல urine போய்ட்டு போறாங்க.. அப்புறம் தான் நம்ம Dude யோசிக்கிறாரு.. அவருக்கு பொண்டாட்டியே இல்லன்னு.. அவருடைய பேர வெச்ச இன்னொரு Lebowskiக்கு பதிலா தான் ,நம்ம dude-ah மிரட்டிட்டு போய் இருக்காங்க.. உடனே நம்ம dude ,அந்த lebowski-ah பார்க்க போறாரு.. அவரு பாத்த பெரிய பணக்காரன்.. இதுல தான் ரெண்டு பெரும் சந்திக்கிறாங்க.. அப்புறம் நம்ம பணக்கார Lebowski ஓட பொண்டாட்டிய யாரோ கடத்திடுறாங்க.. அப்போ அவரு நம்ம Dude ஓட help கேக்குறாரு.. அங்க இருந்து என்ன ஆச்சுன்னு படத்த பார்த்து தெரிஞ்சிகோங்க.. Climax-லாம் சிரிசிட்டே இருப்போம்.. ஒரு படத்த சிரிச்சி ரசிச்சி பார்க்கணும்னா ,இந்த படம் சமையான Choice..!!

                

6.A Clockwork Orange - Stanley Kubrick


                     Cult Movieக்கான அத்தனை விஷயங்களும் உள்ள படம்.. இந்த படம் வெளியான சமயம் 1971 ,படம் வெளிவந்த பிறகு பெரிய சர்ச்சையை கிளப்பிச்சு.. இந்த படத்த நிறைய நாட்டுல தடை பண்ணிட்டாங்க.. ஏன் அவருடைய சொந்த நாட்டுலயே படம் 27 வருஷம் தடை பண்ணி இருந்தாங்க.. அதுக்கு அப்புறம் தான் படம் அவருடைய நாட்டுலயே ரிலீஸ் ஆச்சு.. இன்னிக்கும் சில நாட்டுல இந்த படத்த தடை செஞ்சி இருக்காங்க.. படத்துல nudity & violence கொஞ்சம் நிறைய இருக்கும்.. எனக்கு படம் புடிச்சி இருந்திச்சி.. உங்களுக்கு புடிக்குமான்னு தெரில..பாக்குறதுனா பார்க்கலாம்.. படத்தோட இசை ரொம்ப நல்ல இருக்கும்..    


5.Requiem for a Dream - Darren Aronofsky


                       எனக்கு ரொம்ப புடிச்ச படங்களுள் இது ஒரு முக்கியமான படம்.. ரொம்ப அற்புதமான படம்..படம் ரிலீஸ் ஆனது 2000-ல .. இந்த படம் ஒரு psychological drama ,Genre வகையை சேர்ந்தது.. ஒரு நாலு பேரோட வாழ்க்கைய போதை எப்படி அழிக்கிதுன்றது தான் படம்.. படத்தோட மியூசிக் soundtrack மாதிரி ஒரு soundtrack என்ன வசியப்படுதுனது இல்ல..படத்தோட எடிட்டிங்.. ஒளிப்பதிவு எல்லாமே சமயா இருக்கும்.. என்ன பொறுத்த வரைக்கும் எல்லாரும் கண்டிப்பா பாக்க வேண்டிய திரைப்படம்..     




4.Reservoir Dogs - Quentin Tarantino


                        இந்த படம் Crime ,Genre வகையை சார்ந்தது.. இந்த படம் என் தலைவர்  Quentin Tarantino ஓட முதல் படம்.. ஒரு கடைல இருந்து ஒரு பொருள்  (அந்த திருடுன பொருள் என்னன்னு தான் இன்னிக்கி வரைக்கும் எல்லாருமே யோசிச்சிட்டு இருக்காங்க ) திருடரதுக்காக ஒரு கும்பல் ஒண்ணு சேருது.. திருட்டு நடந்து முடிஞ்ச உடனே போலீஸ் வந்திடுது.. அதுக்கு அப்புறம்.. அவங்களுக்குலாம் என்னாச்சின்றது தான் மீதி கதை.. ஒரு low budget படத்த இத விட சிறப்பா எடுக்க முடியுமான்னு எனக்கு தெரில.. இந்த படத்த பத்தி detail-ah கூடிய விரைவில் பார்க்கலாம்.. படம் ரிலீஸ் ஆனது 1992-ல.. இன்னிக்கு வரைக்கும் இந்த படத்துக்கு இருக்குற புகழ் குறையவே இல்ல.. அப்போ படம் ரிலீஸ் ஆன போது பெருசா ஹிட் ஆகுல.. ஆனா கண்டிப்பா படம் இப்போ ரிலீஸ் ஆனா பயங்கரமா ஹிட் ஆகும்.. அத நான் உறுதியா சொல்லுவேன்..படத்த தவறாம பாருங்க...


3.Fight Club - David Fincher 


                   இந்த படம் Psychological drama ,Genre வகையை சார்ந்தது..இன்னிக்கும் சினிமா வெறியர்களால் தூக்கி வெச்சி கொண்டாடப்படுற மிகச்சிறந்த படம்..படத்தோட ஒவ்வொரு வசனமும்.. இன்னிக்கும் ரொம்ப புகழ் பெற்றது.. நம்ம வடிவேலு வசனத்திற்கு அப்புறம் , நம்ம நாட்டுல சில படங்களோட வசனங்கள கொண்டடுராங்கனா , அதுல இந்த படத்துக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கும்...நம்ம ஹீரோக்கு Insomnia ( தூங்காம இருக்குற வியாதி ).. ஒரு நாள் வேலை விஷயமா வெளியூர் போகும் போது.. விமானத்துல அவரு பக்கத்துக்கு சீட்-ல ஒருத்தன மீட் பண்றாரு.. அவன் பேரு Tyler .. திரும்ப ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் சில பல காரணங்களுகாக Tyler-ah திரும்பவும் சந்திக்கிராறு.. ரெண்டு பெரும் Fight Club தொடங்குறாங்க ( ஒருத்தர ஒருத்தர் அடிச்சிகிறது ).. அங்க இருந்து படம் சம ஸ்பீடா போகும்..  இந்த படத்தையும் பத்தி detail-ah கூடிய விரைவில் பார்க்கலாம்..


2.Pulp Fiction - Quentin Tarantino 


                        இந்த படம் Crime ,Genre வகையை சார்ந்தது..என்ன பொறுத்த வரைக்கும் என் தலைவர் Quentin Tarantino இயக்குன ,எழுதுன எல்லா படங்களுமே Cult வகையில தான் சேரும்.. அதற்க்கு காரணம் அவருக்குன்னு இருக்குற ரசிகர்கள் கூட்டம் ,அவர ரசிக்கிற கூட்டம்.. அவருடைய படத்துல இருக்குற எல்லா வசனங்களும்.. அவருடைய கேரக்டர்ஸ் இது எல்லாத்தையுமே மக்களால ஒரு தடவ பார்த்தாங்கனா.. கண்டிப்பா மறக்கவே முடியாது..  படத்துல மொத்தம் 7 sequence... எல்லா sequenceக்குமே ,எதாவது ஒரு connection இருக்கும்.. என்னோட favourite list-ல இந்த படம் தான் கண்டிப்பா முதல இருக்கும்... இதுக்கு முன்னாடி நீங்க Quentin Tarantino படம் பார்த்து இல்லன்னு வெச்சிக்கோங்க.. இந்த படத்த ஒருதடவ பார்த்துடிங்கனா. அதுக்கு அப்புறம் அவருடைய ஒவ்வொரு படத்தையும் தேடி பார்பீங்க.. அதுக்கு நான் guarantee..



1.The Shawshank Redemption - Frank Darabont 


                            IMDB rating-ல முதல்ல இருக்குற படம்.. இந்த படம் Drama ,Genre வகையை சார்ந்தது.. ஒரு ரொம்ப அற்புதமான படம்.. படம் பார்த்து முடிக்கும் போது ,மனசு அப்படியே இளகுன மாதிரி இருக்கும்.. A Light-hearted movie.. நம்ம ஹீரோ ஒரு பெரிய பேங்க் ஆபீசர்.. அவரு பொண்டாட்டிய கொலைப்பண்ண Caseக்காக.. அவர Shawshank ஜெயில்ல போடுறாங்க.. அந்த ஜெயில்ல அவருடைய வாழ்கை எப்படி மாறுதுன்றது தான் கதை.. Climax-ல ஒரு பெரிய Twist இருக்கு.. அத படத்த பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. இந்த படம் வெளியான நேரத்துல படம் பொருளாதாரத்துல பெரிய வெற்றி அடையில.. அதற்க்கு காரணம் அந்த நேரத்துல வெளியான Forrest Gump மற்றும் வேற சில படங்கள்..( Pulp Fictionக்கூட அப்ப தான் ரிலீஸ் ஆச்சுன்னு கேள்விப்பட்டேன் ).. ரொம்ப சிறந்த படம்.. படம் slow-வ தான் போகும்.. ஆனா படம் ரொம்ப அழகா இருக்கும்.. ஒரு ஜெயில்ல நடக்குற விஷயங்கள ரொம்ப நல்லா காமிச்சி இருப்பாங்க..

OTHER CULT MOVIES

                 
                      இத தவிர எனக்கு புடிச்ச Cult Movies-லாம் கீழ போட்டோவா போடு இருக்கேன்..


                         இது மாதிரி Cult movies நிறைய இருக்கு.. இன்னும் சில படங்கள் வேணும்னா Google பண்ணி பார்த்து கொள்ளவும்.. இல்ல கமெண்ட்ஸ்ல கேளுங்க.. நான் சொல்றேன்..

பி.கு : எனக்கு புடிச்ச தமிழ் Cult Movies பத்தி படிக்கணும்னா அதை கிளிக் செய்யவும்....

Minimalistic Photo Courtesy : Arun Prasad ( Bro Once Again Thanks Fa letting me use your works..!! )
Share this article :

Post a Comment