Latest Movie :

2 STATES..!! ( 2014 )

                 ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கி ஒரு ஹிந்தி படம் தியேட்டர்ல பாத்தேன்.. சென்னை எக்ஸ்பிரஸ்க்கு ( Chennai Express ) அப்புறம்.. பொதுவா இந்தி படம் நாம யாருமே prefer பண்ண மாட்டோம்.. நாம நம்ம பிரெண்ட்ஸ் ஓட போய் இருந்தா Rio 2 , Amazing Spiderman 2 இந்த மாதிரி படங்கள தேர்ந்து எடுப்போம்.. குடும்பத்தோட போன தெனாலிராமன் ,வாயை மூடி பேசவும் இந்த மாதிரி படங்கள தேர்ந்து எடுப்போம்.. ஆனா girlfriend ஓட போனா மட்டும் தான் , இந்த மாதிரி படங்கள பாக்குற நிலைமை வரும். அதுனால இந்த படத்த நான் என் பார்த்தேன்னு நீங்க கண்டுபுடிச்சிட்டு இருப்பிங்க.., ஹிந்தி தெரிலனாலும் பார்த்தே ஆகா வேண்டுமென்ற கட்டாயம் ,இன்னிக்கி நாம பாக்க போற படம் புதுசா ரிலீஸ் ஆகி இருக்குற 2 STATES...!!

                  
                   இந்த படம் Chetan Bhagat எழுதிய 2 States நாவலை தழுவி எடுக்கப்பட்டது... Chetan Bhagat எழுதினாலே பெரிய வெற்றிதான்னு ஆயிடுச்சி.. அவர் எழுதிய எல்லா நாவலுமே சரியான ஹிட்..இந்த நாவலை அவர் அவருடைய சொந்த கதையோட கொஞ்சம் மசாலாவையும் சேர்ந்து எழுதி இருக்காரு..இந்த நாவலை படிக்கணும்னு ஆசைப்படுறவங்க CLICK HERE... இந்த கதைய நம்ம வெள்ளித்திரைக்கு ஏத்த மாதிரி நல்லா மாத்தி இருக்காங்க..
                   இந்த படம் Rom-Comனு சொல்ற Romantic Comedy என்ற Genre வகையை சேர்ந்தது..படத்தோட கதைய ஒரே வரில சொல்லிரலாம் ,"ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கிறாங்க ,காதலிக்கிறாங்க ,பெற்றோர் எதிர்கிறாங்க ,அப்புறம் சம்மதம் சொல்லுறாங்க , அதோட சுபம்..!"  அட என்னங்க 100 வருட இந்திய சினிமாவோட காதல் கதைகள் எல்லாமே இதுதானேன்னு யோசிக்கிரிங்களா.. இந்த படத்தோட வித்தியாசம் என்னன்னா நம்ம ஹீரோ ஒரு பஞ்சாபி.. நம்ம ஹீரோயின் தமிழ் பொண்ணு.. அட இதையும் எங்கயோ பாத்த மாதிரி இருக்குன்னு யோசிக்கிரிங்களா.. நம்ம பிரகாஷ் ராஜ் நடிச்ச அபியும் நானும் படத்தோட கதை தாங்க..!!
                    சரி படத்துக்கு வருவோம்.. படத்தோட ஆரம்பத்துல நம்ம ஹீரோ க்ரிஷ் ஒரு மனநோய் மருத்துவர் ( Psychiatrist ) கிட்ட அவுருடைய கதைய சொல்ல ஆரம்பிக்கிறாரு..நம்ம க்ரிஷ் ஒரு பஞ்சாபி பையன் , IIT Delhi-ல படிப்ப முடிச்சிட்டு IIM Ahmedabad-ல MBA படிக்குறார்..அங்க தான் நம்ம ஹீரோயின் அனன்யாவ சந்திக்கிராறு.. அவ ஒரு தமிழ் ஐயர் பொண்ணு.. முதல் சந்திப்புலையே ரெண்டு பேரும் ரொம்ப சகஜமா பழக ஆரம்பிக்குறாங்க.. ஒன்னா வெளிய போறாங்க, ஒன்னா படிக்கிறாங்க , எப்பவுமே ஒன்னாவே இருக்கிறாங்க.. இப்படியே போற இவங்க வாழ்கைல Krish ரொம்ப அழகா அவக்கிட்ட அவனுடைய காதல வெளிப்படுத்துறான்.. அனன்யாவும் அவளுடைய சம்மதத்த முத்தத்தால வெளிப்படுத்துறா.. இதுக்கு அப்புறம் அந்த ரெண்டு பட்டாம்பூச்சிகளும் செம்பருத்தி பூக்குள்ள போய் சென்சார் கட் பண்ற அளவுக்கு கஜ கஜா ,குஜ குஜான்னு சந்தோஷமா 2 வருஷமும் வாழுறாங்க..அதுக்கு அப்புறம் தான் அவங்க பிரச்சினையே ஆரம்பம் ஆகுது.. அனன்யா , க்ரிஷ் கிட்ட அவங்க கல்யாணம் நடந்தா , அது ரெண்டு பேர் குடும்பத்தோட மனப்பூர்வமான சம்மதமோட தான் நடக்கனும்னு சொல்லுறா.. ஆனா ரெண்டு பேரோட குடும்ப மொழி ,கலாச்சாரம் ,பழக்கவழக்கம் அப்படியே வேற வேற.. ரெண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்க்கணும்னு முயற்சி பண்றாங்க...அவங்களோட பட்டம் அளிப்பு விழாவுல க்ரிஷ் ஓட அம்மாவும் ,அனன்யாவோட குடும்பமும் சந்திக்கும் போது ரெண்டு குடும்பத்துக்கும் வாய் தகறாரு ஏற்படுது.. அதனால ரெண்டு குடும்பமும் இன்னொருத்தங்கள வெறுக்குறாங்க.. க்ரிஷ் ஓட அப்பா என் வரலைன்ற கதைய பாப்போம்...
                  க்ரிஷ் ஓட அப்பா கதை : க்ரிஷுக்கும் அவங்க அப்பாக்கும் ரொம்ப நாளா பேச்சு வார்த்தை இல்ல.. ( காரணத்தை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்..) க்ரிஷ் ஓட அப்பாவும் ,அம்மாவும் காதல் கல்யாணம் தான் ,ஆனா ரெண்டு பேரும் சண்ட போடுற நேரத்த தவிர மத்த நேரத்துல பேச கூட மாட்டாங்க..வேலைக்கு போறதும் குடிக்குறதும் மட்டும் தான் அவரோட முக்கியமான வேலையா இருக்கு..இதனால குடும்ப விஷயங்கள் எதுலயுமே அவர் பங்கு எடுத்துக்க மாட்டாரு.. 
                   இப்ப Main கதைக்கு திரும்ப வருவோம் : அனன்யாக்கு சென்னைல வேல கிடைக்குது.. க்ரிஷ் சென்னைல போஸ்டிங் வேணும்னு apply பண்றாரு.. சென்னைல வேலையும் கிடைக்குது.. இத சாக்கா வெச்சு.. அனன்யா குடும்பத்தோட மொத்த சம்மதத்தையும் வாங்கிடுராறு.. இதே மாதிரி அனன்யா க்ரிஷோட வீட்டுக்கு போய் க்ரிஷ் அம்மாவோட சம்மதத்தையும் வாங்கிடுறாங்க.. ஆனா முக்கியமான பிரச்சன என்னன்னா ரெண்டு குடும்பத்துக்கும் மத்தவங்கள புடிக்கணும்.. அதுனால அனன்யா ஓட அப்பா அம்மாவையும் , க்ரிஷ் ஓட அம்மாவையும் மும்பைக்கு vacationக்கு கூட்டிட்டு போறாங்க.. அங்கயும் ரெண்டு குடும்பமும் சண்ட போட்டுக்குது.. அந்த பிரச்சனைனால அனன்யாவும் கிரிஷும் பிரிஞ்சிடுறாங்க..அதுக்கு அப்புறம் அவங்க சேர்ந்தாங்களா இல்லையா..? அப்படின்னு நான் முடிக்க மாட்டேன்.. ஏன்னா எப்படியும் அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா சேர்ந்திடுவாங்க ,அது உங்களுக்கும் தெரியும்... ஆனா எப்படி சேர்ந்தாங்க..?? ரெண்டு பேர் குடும்பத்தோட முழு சம்மதத்தோட கல்யாணம் நடந்துச்சா..?? க்ரிஷ் ஏன் மனநோய் மருத்துவர் கிட்ட போய் இருக்காருன்ற ?? விடைகளை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்..
                    படத்தோட முழு கதைக்கான வசனம் இதுதான் .." இந்தியாவுல ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு 3 stage தாண்டி ஆகணும்..
  • Stage 1 : பையனுக்கு பொண்ண புடிக்கணும் ,பொண்ணுக்கு பையன புடிக்கணும்...
  • Stage 2 : பையன் குடும்பத்துக்கு பொண்ண புடிக்கணும் ,பொண்ணு குடும்பத்துக்கு பையன புடிக்கணும்...
  • Stage 3 : இது தான் ரொம்ப முக்கியமான rule ,பையன் குடும்பத்துக்கு பொண்ணு குடும்பத்த புடிக்கணும் ,பொண்ணு குடும்பத்துக்கு பையன் குடும்பத்த புடிக்கணும்..
                   இந்த 3 stage-ah வெற்றிகரமா தாண்டுனா தான்.. ஒரு பையனும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க முடியும்.. ( *Conditions Apply ) இதுதான் படத்தோட மொத்த layout...
                   படத்தோட ஹீரோ க்ரிஷா நடிச்சி இருக்குறது அர்ஜுன் கபூர் ( Arjun Kapoor )...பையன் பாக்க சம ஸ்மார்டா இருக்கான்.. நல்லவும் நடிக்கிறான்..அனன்யாவா நடிச்சி இருக்குறது ஆலியா பட்  ( Alia Bhatt ).. சம அழகா இருக்கா.. ஆனா படம் பாக்கும் போது கொஞ்சம் கூட தமிழ் பொண்ணா பாக்க முடியல.. ஏன் பா டைரக்டர்ஸ் உங்களுக்கு தமிழ் பொண்ணே கிடைக்கிலையா..? எங்க ஊரு பொண்ணுங்களும் அழகு தான் பா.. சரி அத விடுவோம் இந்த படத்துல நம்ம தமிழ் நாட்டுல இருந்து ஒரு பெரிய ஹீரோயின் , அனன்யாவுக்கு அம்மாவா நடிச்சி இருக்காங்க.. அட நம்ம ரேவதி தான் பா... படத்தோட டைரக்டர் அபிஷேக் வர்மன் ( Abhishek Varman )... படத்தோட Visuals ரொம்ப அழகா இருக்கும்.. படம் முழுக்க ரொம்ப colourfull-ah இருக்கும்.. அதுக்கு காரணமான ஒளிப்பதிவாளர் பினோத் பிரதன் ( Binod Pradhan )... படத்தோட பாட்டு எல்லாமே ரொம்ப நல்ல இருந்திச்சி.. அந்த மியூசிக்கு காரணமானவங்க Shankar-Ehsaan-Loy...


                   ஆனா உண்மையா சொல்லணும்னா , தமிழ் பொண்ணு பஞ்சாபி பையன லவ் பண்ற கதைய நாம ஏற்கனவே அபியும் நானும் படத்துல பாத்து இருப்போம்.. அந்த படத்த நான் ரசிச்ச அளவுக்கு ,நான் இந்த படத்த ரசிக்கல .. ஒத்துக்கிறேன் அபியும் நானும் ஓட கதையும் ,2 states ஓட கதையும் வேற வேற தான்.. ஆனா 2 states-ல இன்னும் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்து இருக்கலாம்...ஏன்னா பொதுவாவே ரெண்டு கலாச்சாரம் ஒன்னு சேரும் பொது பிரச்சனைய விட ,காமெடி தன அதிகமா இருக்கும்.. அத இந்த படத்துல சரியாய் காமிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.. அந்த விஷயத்துல  அபியும் நானும் சமயா இருந்திச்சி...
                    படம் கண்டிப்பா பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்..ஏன்னா பொதுவாவே பொண்ணுங்களுக்கு Cinematic-ah லவ் பண்றவங்கள புடிக்கும்... இந்த சினிமால cinematic-ah நம்ம க்ரிஷ் லவ் பண்றதுனால.. அவங்களுக்கு கண்டிப்பா இந்த படம் புடிக்கும்.. ஆனா எனக்கு என்ன ஒரே கடுப்புனா.. இந்த பொண்ணுங்க இருக்காங்களே.. யாரு கிட்டயோ 2 states கதைய கேட்டு இருப்பாங்க.. உடனே மத்தவங்க கிட்ட போய்.. " ஹேய் நேத்து chetan bhagat ஓட 2 ஸ்டேட்ஸ் படிச்சேன் டா... என்னா லவ் தெரியுமா இந்த அனன்யா க்ரிஷ் ஓட லவ்" அப்படின்னு சொல்லுவாளுங்க.. ஆனா போய் கேட்டிங்கன்னு வெச்சிங்கனா க்ரிஷ் நம்ம ஊரு பையனும் , அனன்யா பஞ்சாபி பொண்ணுனும் தப்பு தப்பா அடிச்சி விடுவாளுங்க ( இது நிஜமா எனக்கு நடக்கலைங்க)... இதுல என்ன பெருமையோ..? 
                    படத்துல எனக்கு கடுப்பு என்னன்னா நல்லா தமிழ் தெரிஞ்ச பொண்ணுங்கள ஒண்ணு நடிக்க வெக்கணும்.. இல்ல dubbing ஆகுது நல்லா தமிழ் பேச தெரிஞ்ச பொண்ணா பார்த்து பேச வெக்கணும்.. இந்த ஹிந்தி டைரக்டர்ஸ் அத பத்திலாம் கவலை படுறதே இல்ல.. சென்னை  எக்ஸ்பிரஸ்லையும் சரி இந்த படத்தலையும் சரி ஹீரோயின் தமிழ் பேசுறது எனக்கு சம காண்டாகுது...என்ன கொடும சார் இது..!!
                     கண்டிப்பா படம் உங்களுக்கு புடிக்காம இருக்காது... நல்லா தான் இருக்கும்... ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ரொம்ப அற்புதமாலாம் இல்ல.. நல்லா இருக்கு.. ரசிச்சி பாக்கலாம் ,சிரிச்சி பாக்கலாம்..

MY RATING - 3.5/5

பி.கு : இந்த படத்தோட சேர்த்து , Chetan Bhagat க்கு இது நாளாவுது நாவல் , படமாகுறது ..

          BOOK                                             MOVIE
1.Five Point Someone                      -  3 Idiots ( Nanban )
2.One Night @ the Call Center      -  Hello
3.The 3 Mistakes Of My Life             -  Kai Po Che !
4.2 States                                            -  2 States
Share this article :

+ comments + 1 comments

10 May 2014 at 12:12

hahahahha...gud sense of humor...n i d best part was dose 3 conditions,.....way to go buddy

Post a Comment