Latest Movie :
Recent Movies

DRISHYAM..!! ( 2013 )

                 பொதுவாவே Thriller வகை படங்கள்னா எனக்கு ரொம்ப புடிக்கும்.. அதுக்கு முக்கியமான காரணம் அந்த படம் கொடுக்கிற த்ரில்.. ஒரு வெற்றிகரமான thriller படம் கொடுக்கணும்னா , ரசிகர்கள படம் இறுதி வரைக்கும் படத்தோட ஒன்ற வைக்கணும்.. ஒரு thriller படத்துக்கு ரொம்ப  முக்கியமான விஷயம் என்னன்னா , படம் முழுக்க நிறைய முடிச்சி போடணும்.. அப்புறம் இறுதியில எல்லா முடிச்சிகளையும் தெளிவா அவுக்கணும்.. அதுல முக்கியமான விஷயம் என்னன்னா மக்களுக்கு அது தெளிவா புரியணும் ,அதுக்கான காரணங்கள் நம்புற மாதிரி இருக்கணும்.. ஒரு சாதாரண படம் எடுக்குறத விட இந்த Thriller வகை படங்கள் எடுக்கிற டைரக்டர்க்கு தான் ,இன்னும் கஷ்டம்.. ஏன்னா ஒரு thriller படம் எடுக்கும் போது ,அடுத்து நடக்க போறத யாரும் கண்டுபிடிச்சுட கூடாது.. முக்கியமான விஷயம் அது எல்லாமே எதுக்கு நடக்குதுன்ற காரணத்த கண்டுபுடிக்க கூடாது..
                    இன்னிக்கு நாம பாக்க போற படம் "DRISHYAM".. இந்த படம் ஒரு மலையாள மொழி படம்.. Drishyam என்பதுக்கு Visual ( பார்க்குற காட்சி ) என்பது பொருள்..இந்த படம் thriller ,genre வகையை சேர்ந்தது...போன வருஷம் ரிலீஸ் ஆன இந்த படம் தான் மலையாளத்துலையே அதிகம் வசூல் செஞ்ச திரைப்படம்.. ஏன் Mollywood-ல இந்த படம் வசூல்ல பெரிய புரட்சி உண்டு பண்ணி இருக்குன்னு கூட சொல்லலாம்.. படம் ரொம்ப பெரிய ஹிட்.. படம் ரிலீஸ் ஆன நேரத்துல இருந்து இந்த படத்த பார்க்கணும்னு நான் ரொம்ப ஆச பட்டேன்..ஆன முடியல.. ரொம்ப நாளைக்கு படம் நெட்லயும் வரல.. ஒரு வழியா நேத்து என் Facebook நண்பர், இந்த படத்தோட torrent-ah facebook க்ரூப்ல போட்டார்.. அவசர அவசரமா படத்த டவுன்லோட் பண்ணி பார்த்தேன்...பார்த்துட்டேன்..
                     

                     நம்ம ஹீரோ பேரு ஜார்ஜ் குட்டி.. அவர் ஒரு கேபிள் டிவி operator .. அவருக்கு ஒரு மனைவி , 2 மகள்.. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்.. நம்ம ஜார்ஜ் வெறும் 4ஆம் கிளாஸ் வரைக்கும் தான் படிச்சி இருக்காரு.. ஆனா உலக நடப்புகள் எல்லாமே தெரிஞ்சி வெச்சி இருப்பாரு.. அதுக்கு காரணம் சினிமா.. ஆமாங்க நம்ம ஜார்ஜ்க்கு சினிமா தான் எல்லாம்.. படம் பார்க்கிறதுக்காக வீட்டுக்கு கூட போகாம ஆபீஸ்லையே இரவு தங்குற அளவுக்கு சினிமா மேல பைத்தியம்.. அவர சுத்தி இருக்குறவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா சினிமால இருந்து அவங்களுக்கு அந்த பிரச்சனைய தீர்க்க வழி சொல்லுவாரு.. ரொம்ப அழகான குடும்பம் அவருது ,அந்த குடும்பத்துக்கு ஒரு பெரிய பிரச்சனை வருது.. அத நம்ம ஜார்ஜ் எப்படி  புத்திசாலித்தனமா தீர்க்குறார் என்பது தான் மீதி கதை..

                       படத்தோட டைரக்டர் பேரு Jeethu Joseph..முதல்ல ஒரு thriller படத்த இவ்ளோ thrilling-ah குடுத்ததுக்கு முதல்ல படத்தோட டைரக்டர் ஒரு பெரிய பாராட்டுகள்.. இவ்ளோ புத்திசாலித்தனமா ஒரு படத்த உருவாக்கனதுக்கு டைரக்டர்க்கு ரெண்டாவது பெரிய பாராட்டுகள்.. கண்டிப்பா இந்தியாவோட சிறந்த டைரக்டர்கள்ல இவருக்கு கண்டிப்பா ஒரு முக்கியமான இடம் இருக்கும்..படத்துல 'அந்த பிரச்சனை' ஆரம்பிச்சிட்ட அப்புறம் நடக்குற ஒவ்வொரு சீனும் ரொம்ப அபாரம்.. நாம எதிர்ப்பார்க்காத திரைக்கதை.. அதுவும் கிளைமாக்ஸ்ல ஜார்ஜ் போலீஸ் கிட்ட "இந்த போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸும் தான் என்ன காப்பாதுரவங்கன்னு" சொல்லிட்டு போகும் போது , அதுல ஒரு காரணம் இருக்குனு காமிக்கிற சீன்லாம் அபாரம்..இந்த டைரக்டரோட இன்னொரு சிறந்த thriller படம் Memories .. அதையும் மறக்காம பாருங்க..

                      நம்ம ஜார்ஜ் குட்டியா நடிச்சி இருக்குறது நம்ம மோகன்லால்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் மலையாளத்துல அவரோட ஹிட் படம்.. சில வருடங்களா அவருடைய படங்கள் எல்லாமே சுமார் ,படு சுமார் ,சுத்த போர் இந்த மாதிரி தான் இருந்திச்சி.. மோகன்லால் ஓட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிச்சி.. ஆனா இந்த படத்து மூல்யமா ஒட்டு மொத்த மலையாள திரையுலகமே இப்ப அவர தூக்கி வெச்சி கொண்டாடிட்டு இருக்காங்க.. லால் சேட்டன் படத்துல பட்டய கிளப்பி இருப்பாரு.. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஆள் .. தன் குடும்பத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யுற அந்த கேரக்டர்க்கு அப்படியே பொருந்தி இருக்காரு.. இப்ப இந்த கேரக்டர்ல வேற யார் நடிச்சாலும் இவ்ளோ சிறப்பா இருக்குமான்னு எனக்கு தோனல.. தெரியல..


                      படத்துல ஹீரோயின் கேரக்டர்ல நடிச்சி இருப்பது நம்ம தில்லான தில்லான 'மீனா'.. வெகுளியான மனைவி கேரக்டர்ல ரொம்ப நல்ல நடிச்சி இருப்பாங்க.. ரெண்டு பொண்ணுங்களா நடிச்சி இருக்குறது அன்சீபா மற்றும் எஸ்தர்... அதுல அந்த சின்ன பொண்ணு எஸ்தர் ரொம்ப நல்லா  நடிச்சி இருக்கும்.. கடைசி வரைக்கும் அவங்க அப்பா சொன்னத வைராக்கியமா காப்பாத்த நினைக்குறதும் ,கடைசியில அடிவாங்குறதுக்கு பயந்து உண்மைய சொல்லுவதாகட்டும்.. பாப்பா ரொம்ப நல்ல நடிச்சி இருக்கும்.. படத்தோட முக்கிய கேரக்டர் அன்சீபா.. அந்த பொண்ணும் ரொம்ப நல்லா நடிச்சி இருப்பா.. இவங்கள தவிர படத்துல 2 முக்கியமான கேரக்டர் இருக்கு.. ஒன்னு constable சஹாதேவன் (சஹாதேவனா நடிச்சி இருக்குறது Kalabhavan Shajon ).. இன்னொன்று IG கீதா ( கீதாவா நடிச்சி இருக்குறது Asha Sarath )... படத்துல எல்லாருமே அவங்கவங்க கேரக்டர்-ah ரொம்ப சிறப்பா செஞ்சி இருப்பாங்க..
                        படத்துல ஒரு வசனம் வரும் "ஒரு Visuals ( கண்ணால பார்க்கும் காட்சி ) நம்ம மூலையில பதியிர அளவுக்கு வேற எந்த விஷயமும் நமக்கு அவ்ளோ நல்லா பதியாது " , அந்த விதத்துல இந்த படத்தோட டைரக்டர் அவோரோட Visual-ah ( த்ரிஷியத்த ) நம்ம மனசுலையும் சரி மூலையிலையும் சரி நல்லா பதிச்சிட்டாறு...
                       முதல் வேலையா மத்த எல்லா படத்தையும் ஏறக்கட்டி வெச்சிட்டு.. இந்த படத்த பாருங்க...MUST WATCH FOR ALL...!!

MY RATING -4/5


பி.கு : இந்த படத்த Jeethu Joseph ,தமிழ்ல நம்ம உலகநாயகன வெச்சி எடுக்குறாரு.. கூடிய விரைவில் ,த்ரிஷியத்த தமிழ்ல எதிர்பார்க்கலாம்.. இப்பதிக்கு இந்த படத்த தெலுகுலையும் , கன்னடத்தலையும் வேற டைரக்டர்ஸ் ரீமேக் பண்ண ஆரம்பிச்சிடாங்க..!


FAVOURITE CULT MOVIES IN TAMIL..!!

                      இன்னிக்கி தமிழ் movies-ல எனக்கு புடிச்ச 'Cult Movies' பத்தி பார்க்கலாம்.. 'Cult Movies'னா என்னன்னு இதுக்கு முன்னாடி போஸ்ட்லையே நான் எனக்கு தெரிஞ்சத வெச்சி சொல்லிட்டேன்.. பரவால அத பத்தி திரும்பவும் சொல்றேன்..
                      'Cult' - இந்த வார்த்தைக்கான பொதுவான அர்த்தம் என்னன்னா ஒரு விஷயத்த பயங்கரமா ( வெறியா ) வழிபடுறது..
                       சரி இப்ப Cult Movies-ன என்னன்னு பாப்போம்.. ஒரு படத்த அது ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் கழிச்சியும்.. அந்த படத்துல வர காட்சியை ,வசனத்தை ,இசையை ரசிகர்கள் கொண்டாடி ரசிச்சிட்டே இருந்தாங்கனா ,அந்த படத்த Cult Movieன்னு சொல்லுவாங்க.. அந்த படங்கள் வெளியான நேரத்துல ,அந்த படங்கள் பொருளாதரத்தில் பெரிய புரட்சி உண்டு பண்ணாமல் இருந்து இருக்கலாம்.. ஆனா மக்கள் மனதுல பயங்கரமான புரட்சி உண்டு பண்ணி இருக்கும்.. அப்போ ஏன் படம் ஹிட் ஆகலன்னு யோசிக்கிரிங்களா..?? இதற்கான பதில தான் நானும் தேடிட்டு இருக்கேன்.. 'மான் கராத்தே' மாதிரி படம் ஹிட் ஆகும் போது ஏன் 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி படம் ஹிட் ஆகுல..? இது என்ன மாத்திரம் உறுத்துற கேள்வி இல்ல.. எல்லா சினிமா வெறியர்களுக்குமே இருக்குற ஒரு ஆதங்கம்.. ஆனா அதுக்கு நிறைய காரணங்கள் சொல்லுவாங்க.. படம் மக்களுக்கு புரியல ,பெண்கள் பார்க்க முடியாது , குடும்பங்களுக்கான படம் கிடையாது ,சரியான நேரத்துல ரிலீஸ் ஆகல.. இதுமாதிரி என்னனவோ காரணங்கள் சொல்லுவாங்க.. எனக்கு எதுமே சரியாய் படல.. அதுக்கான விடையை தேடிட்டே தான் இருக்கேன்.. என்னிக்குமே தேடிட்டே தான் இருப்பேன்.. ஏன்னா அந்த விடையை பெரிய பெரிய டைரக்டர்ஸ் ,தயாரிப்பாளர்கள்னாலயே கண்டுபுடிக்க முடில.. நாம எங்க..? அட Cult பத்தி பேச ஆரம்பிச்சு ,topic எங்கங்கயோ போகுது.. சரி மறுபடியும் Cultக்கு வருவோம்.. இந்த படங்கள் ரிலீஸானா சமயத்துல ,இந்த படங்கள் பெரிய சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கும்.. காரணங்கள் நிறைய இருக்கலாம்.. வன்முறை ,மதம் ,பாலியல் பிரச்சனை ,gore ,nudity இதுல எது வேணும்னாலும் இருக்கலாம்.. இந்த மாதிரி சர்ச்சையான படங்களும் Cult வகையில சேரும்.. சரி இந்த மாதிரி Cult படங்களில் எனக்கு புடிச்ச 10 படங்கள் பத்தி பார்க்கலாம்... இந்த படங்களில் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சது.. என்னால இந்த படங்கள Top 10-ah வரிசை படுத்த முடியல..
                       தமிழ் படங்களுல 'Cult Movies'-ah கண்டுப்புடிக்கிறது ரொம்ப சுலபம்.. உங்களுக்கு ஒரு படம் புடிச்சி இருந்து அந்த படம் ஹிட் ஆகலைன்னு வெய்ங்க.. அந்த படம் கண்டிப்பா 'Cult Movie' தான்.. எனக்கு தெரிஞ்சி தமிழ்ல Cult Moviesன்னு சொல்ற ஒருசில படங்கள தவிர எல்லாமே பொருளாதாரத்துல பெரிய வெற்றியடையில..



10.Kattradhu Thamizh - Ram


                      தியேட்டர்ல இந்த படம் சரியாய் போகலைனாலும்.. Facebookல படம் ரொம்ப நல்லா போச்சு.. ரொம்ப நல்லா பேச்சு.. படத்தோட ஒவ்வொரு வசனமும் ,ரொம்ப நல்லா இருக்கும்.. மனசாட்சிய தட்டி கேக்குற மாதிரி இருக்கும்.. படம் பிரபாகருக்கும் ,ஆனந்திக்கும் இருக்குற அழகான காதல சொல்லும்... சின்ன வயசுல ஆரம்பிச்சி ,இருதி காட்சி வரைக்கும் அவங்களுடைய காதல் ரொம்ப அழகா இருக்கும்..படம் முடியும் போது.. கண்டிப்பா உங்க கண்ணு கலங்கும்..


9.Virumaandi - Kamal Haasan


                      கமல் ஓட நிறைய படங்கள் கண்டிப்பா தமிழ் 'Cult Movies'-ல சேரும்.. என்னதான் அவரு இங்கிலீஷ் படங்கள பார்த்து காப்பி அடிக்கிறாரு என்ற வாதங்கள் இருந்தாலும். தமிழ் சினிமாவ அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லுற ஆட்களில் முதல் நாயகன் நம் உலக நாயகன்.. இந்த படத்த Rashomon effect  ( இதைப்பற்றி தெரிந்து கொள்ள அதை கிளிக் செய்யவும் ) அப்படின்னு சொல்ற கான்செப்ட் வெச்சி எடுத்து இருப்பாங்க.. இந்த படத்தோட மெயின் தீம் தூக்கு தண்டனையா நம்முடைய நாட்டுல இருந்து நீக்கணும் என்பது தான்.. அதுக்கு ஒரு அற்புதமான கதை அமைச்சி.. அந்த ஒரே கதைய ரெண்டு பேரோட கோணத்துல ரொம்ப நல்லா காமிச்சி இருப்பாங்க.. இந்த படம் சரியாய் ஓடல.. ஆனா நிறைய பேருக்கு புடிச்சி இருந்திச்சி.. இது போதும் ,இந்த படத்த Cult வகையில சேக்குறதுக்கு..


8.Aadukalam - Vetrimaran


                     பொல்லாதவனுக்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம்னால , இந்த படத்துக்கு சம எதிர்பார்ப்பு இருந்திச்சி.. கோழி சண்டைய மையமா வெச்சி வந்த இந்த படம்.. மனுஷங்களோட சண்டைய ரொம்ப வெளிப்படையா காமிச்சி இருக்கும்.. ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்குமான சண்ட தான் படம்.. படத்துல அந்த கோழி சண்ட Graphicsனாலும் ரொம்ப தத்ரூபமா இருக்கும்.. இந்த படத்த நிறைய வாட்டி டிவி-ல போட்டுடாங்க.. பார்க்க தவறி இருந்திங்கனா.. மறக்காம அடுத்த வாட்டி பாருங்க.. இந்த படத்துக்கு நம்ம தனுஷ் நடிப்புக்கு தேசிய விருது வாங்குனாரு..அதோடு சேர்ந்து படம் மொத்தம் 6 தேசிய விருது வாங்கிச்சி.. இந்த படத்துக்கு வெற்றிமாறன் 3 கிளைமாக்ஸ் எடுத்து வெச்சி இருந்தாருன்னு கேள்விப்பட்டேன்...


7.Anbe Sivam - Sundar.C


                        எனக்கு மிகவும் புடிச்ச படங்களுள் இதுவும் ஒன்று ,ஏன் ஒரு முக்கியமான ஒன்று.. முன்னப்பின்ன தெரியாத ரெண்டு பேர் ,ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையினால ஒன்னா சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தம்.. அதுனால அவங்க ரெண்டு பேர் வாழ்கைலயும் நடக்குற விஷயங்கள் தான் கதை.. இந்த படம் ஏன் தோல்வி அடஞ்சிச்சின்னு இன்னிக்கு வரைக்கும் தெரில.. அப்படி என்ன அந்த படத்துல நல்லா இல்லைன்னு தெரிஞ்சிக்க  நானும் ஒரு 30 முறை பார்த்து இருப்பேன்.. ஆனால் ஒவ்வொரு வாட்டியும் அந்த படத்து மேல இருந்த ஈடுப்பாடு தான் அதிகம் ஆச்சு.. ரொம்ப சிறந்த படம்.. என்ன பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமால வந்த சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று..!!


6.Moodar Koodam - Naveen 


                என்னுடைய நண்பர்கள் இந்த படத்துக்கு போய்ட்டு வந்து ,யாரும் போய்டாதீங்கன்னு சொன்னங்க ,ஆனா படத்தோட trailer-ah முன்னாடியே பார்த்த காரணத்துனால நான் அவங்க பேச்சை மீறி அந்த படத்துக்கு போனேன்.. படம் என்ன ஒரு நிமிஷம் கூட ஏமாத்துல.. அப்புறம் தான் உணர்ந்தேன்.. நம்ம மக்கள்ள நிறைய பேர் இன்னும் மாறவே இல்லைன்னு.. இன்னும் அவங்களுக்கு 5 பாட்டு ,8 சண்ட கொண்ட படங்கள் தான் பிடிக்குது.. இது என்னிக்கு மாறுமோ..? சரி அத விடுவோம்.. ஒரு 4 பேரு போலீஸ் ஸ்டேஷன்ல சந்திக்கிறாங்க.. அதுல ஒருத்தனோட மாமா வீட்டுல கொள்ளை அடிக்க போறாங்க.. அங்க இருந்து ஆரம்பிக்குதுங்க comedy.. படத்த ரொம்ப ரசிச்சி ரசிச்சி பார்த்தேன்.. படத்துல நாய்ல இருந்து பொம்மை வரைக்கும் எல்லாருக்குமே ஒரு அருமையான flashback.. படத்தோட type Guy Ritchie படம் மாதிரி இருந்தாலும்.. ஒரே வீட்டுல நடக்குற கதைய போர் அடிக்காம சொன்னதுக்கு நவீன்க்கு பெரிய பாராட்டுகள்..       


5.Heyram - Kamal Haasan


                    இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்துல படம் படுதோல்வி அடஞ்சிச்சி.. அப்போ நான் சின்ன பையன்.. இந்த படம் நீ பாக்க கூடாதுடான்னு என் வீட்டுல சொல்லிட்டாங்க.. படத்துல ஏதோ தப்பான விஷயம் இருக்குது போல ,அதுனால தான் இப்படி சொல்ராங்கன்னு நினைச்சிக்கிட்டேன்.. எல்லாம் புரியுற வயசு வந்த அப்புறம் ,இந்த படத்த உட்கார்ந்து பார்த்த தான் புரியுது படத்துல வர அந்த முத்தகாட்சிகாக என்ன படத்தையே பார்க்க வேணாம்னு சொல்லிட்டாங்கன்னு.. அப்படியே படத்த பார்த்து இருந்தாலும்.. ஒன்னும் புரிஞ்சி இருக்காது அந்த வயசுல..,இந்த படத்த semi-Fictionalன்னு  சொல்லுவாங்க.. ஏன்ன படம் உண்மை சம்பவங்கள அடிப்படையா கொண்டு உருவாக்கப்பட்டது.. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிஞ்ச சமயத்துல ஏற்படுற கலவரத்துனால பாதிகப்படுற ஒரு மனிதனுடைய பார்வையும் வலியும் தான் இந்த படம்.. இந்திய சினிமால ரொம்ப முக்கியமான படம்.. அறிவுக்கும் சரி ,மனசுக்கும் சரி...


4.Aayirathil Oruvan - Selvaraghavan


                    இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருந்திச்சி.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. இந்த படத்துக்கு அடிச்சி புடிச்சி FDFS டிக்கெட் வாங்கிட்டு படத்த பார்த்தேன்.. 1st half முடிஞ்சா அப்புறம் வேற உலகத்துல இருந்திட்டு வந்த மாதிரி இருந்திச்சி... கண்டிப்பா இதுதான் selva ஓட masterpiece என்ன பொறுத்தவரைக்கும்.. ஒரு சோழர்கள் வாந்த இடத்த கண்டுபுடிக்க சென்ற  ஆராய்ச்சியாளர தேடி போற பயணம் ,7 தடைகள தாண்டி, சோழர்கள் வாழ்ந்த இடத்த கண்டுபுடிக்கிறாங்க.. அதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு தெரியுது சோழ  வம்சம் இன்னும் இருக்காங்கனு .. அதுக்கு அப்புறம் என்ன நடந்துது என்பத Fantasy-ah சொல்லி இருப்பாரு.. இந்த மாதிரி படத்த செலவானால மட்டும் தான் எடுக்க முடியும்... தமிழ் சினிமால இருக்குற சிறந்த Cult Movieல இந்த படம் கண்டிப்பா முக்கியமானதா இருக்கும்..


3.Pudhupettai - Selvaraghavan


                    என்ன பொறுத்த வரைக்கும் செல்வராகவன் genius என்பதுக்கு ஆயிரத்தில் ஒருவன் அப்புறம் புதுபேட்டை.. இந்த ரெண்டு படமே போதும் .. இது வரைக்கும் நான் பார்த்த gangster சினிமாலையே.. ஒரு உண்மையான முயற்சி இந்த படம் தான்.. படத்துல ஒவ்வொரு வசனமும் ரொம்ப அற்புதமா இருக்கும்.."நெருப்பு மாதிரி வேல செய்யணும் குமாரு" , "தியாகம் தான் உன்னை உயர்த்தும்" , "உயிரோடிருக்கணும் கண்ணு" , ஒவ்வொரு வசனமும் எனக்கு மனப்பாடமா தெரியும்.. ஒரு சாதாரண பையன் எப்படி பெரிய தாதா ஆகுறான்றது தான் கதை.. ஆனா அத ரொம்ப தத்ரூபமா காமிச்சி இருப்பாரு.. இந்த படத்தோட பெரிய சறுக்கலா சொன்னது தனுஷ் ஹீரோவா நடிச்சததான்.. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் குமார் கேரக்டர்ல தனுஷ தவிர வேற யாரு நடிச்சி இருந்தாலும் ,இந்த அளவுக்கு நல்லா இருந்து இருக்குமான்னு எனக்கு தெரில.. படத்தோட BGM அதுக்காகவே படத்த இன்னும் சில வாட்டி சேர்த்து பார்க்கலாம்..அதுவும் கிளைமாக்ஸ்ல மூர்த்திய வெட்டும் போது ஒரு BGM வரும் பாருங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.. ஒரு வேல இந்த படத்த தவற விட்டு இருந்திங்கனா.. தயவு செய்து முதல் வேலையா இந்த படத்த பாருங்க..!! 


2.Aaranya Kaandam - Thiagarajan Kumararaja


                 தமிழ் சினிமாவோட முதல் neo-noir ,Genre வகையை சார்ந்த படம் இதுதான்.. சில நல்ல படங்கள் தோல்வி அடைஞ்சி இருக்கு.. ஆனா அது கொஞ்ச நாளாவது தியேட்டர்ல ஓடி பார்த்து இருக்கேன்..ஆனா இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆன ஞாபகம் நிஜமா எனக்கு இல்ல.. இந்த படத்த பத்தி நான் கேள்வி பட்டேன்.. அதுனால மொக்க பிரிண்ட் ஆகுது டவுன்லோட் பண்ணி பார்த்தேன்.. ஆனா நிறைய பேருக்கு விஜய் அவார்ட்ஸ்ல இந்த படம் நிறைய விருது  வாங்குன அப்புறம் தான் ,இப்படி ஒரு படம் இருக்குனே நிறைய பேருக்கு தெரிஞ்சிச்சி.. ஒரு வேல இந்த படத்துக்கு சரியான விளம்பரம் குடுத்து இருந்த படம் நல்ல ஓடி இருக்குமோ என்னவோ..? எப்படி இருந்தாலும் இந்திய சினிமாலையே இந்த படம் ஒரு மைல் கல்.. படத்தோட திரைக்கதை ரொம்ப அற்புதமா இருக்கும்.. 6 பேரோட வாழ்க்கைல நடக்குற கதை தான் இந்த படம்.. படத்துல ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப தனித்துவமா இருக்கும்.. எல்லாரும் படத்துல ரொம்ப நல்லா நடிச்சி இருப்பாங்க.. தமிழ் சினிமாவ உலக அரங்குல தலை நிமிர செய்த படம்.. படத்தோட BGM படத்துக்கு பெரிய பிளஸ்.. படத்துல பாட்டுலாம் கிடையாது.. படம் போறதே தெரியாது.. அவ்ளோ ஸ்பீடா போகும்.. தவறாம பார்க்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று..!!


1.Onaayum Aattukkuttiyum - Myskkin       


                     தமிழ் சினிமால அடுத்து நான் ரொம்ப ரசிக்கிற டைரக்டர் ,மிஸ்கின்.. மனிதர்கள் உணர்வ ,அவங்க பயத்த ,அவங்களுடைய கோவத்த ரொம்ப நுட்பமா வெளிப்படுத்துற டைரக்டர்.. சித்திரம் பேசுதடில இருந்து இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வரை அவருடைய எல்லா படங்களும் எனக்கு ரொம்ப புடிக்கும் ( முகமூடி தவிர ).. தமிழ் சினிமால Crime/Thriller படம் எடுக்குறவங்க ரொம்ப கம்மி.. பொதுவாவே எனக்கு அந்த Genre படங்கள்னா ரொம்ப புடிக்கும்.. அதுனால இவர ரொம்ப புடிக்கும்.. இந்த படத்தோட கதை என்னன்னா ஒரு மருத்துவ கல்லூரி பையன் ,ரோட்ல குண்டடி பட்டு இருக்குற ஒருத்தர ,வேற வழி இல்லாத காரணத்துனால அவனே operation பண்ணி காப்பாதுறான்.. அடுத்த நாள் காலைல அந்த குண்டடி பட்டவன் எஸ்கேப் ஆய்டுறான்... அதுக்கு அப்புறம் அந்த பையன போலீஸ் கைது பண்ண வருது .. அப்புறம் தான் தெரியுது ,அவன் காப்பாத்துனது ஒரு மிகபெரிய கொலை குற்றவாளியன்னு.. போலீஸ் அந்த பையன் தான் அந்த குற்றவாளிய சுட்டு கொல்லணும்னு சொல்றாங்க.. அதுல இருந்து படம் பயங்கர ஸ்பீடா போகும்.. படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச சீன் அந்த கல்லறைல கதை சொல்ற சீன்.. அந்த சீனுக்காகவே படத்த 3 தடவ நான் தியேட்டர்ல பார்த்தேன்.. தமிழ் 'Cult Movies'னு யாரு போஸ்ட் போட்டாலும் முதல் 10 இடங்களில் இந்த படம் கண்டிப்பா வந்துரும்.. அதுனால படத்த பார்க்கலைனா , தவறாம பாருங்க.. ரொம்ப அருமையான படம்.. 

OTHER MOVIES

                       எனக்கு புடிச்ச வேற சில tamil Cult Movies ஓட போட்டோஸ்ஸ கீழ போட்டு இருக்கேன்.. பார்த்து தெரிந்து கொள்ளவும்.. இதுல சில படங்கள் வசூல் ரீதியா பெரிய சாதனையும் பண்ணி இருக்கு.. சில படங்கள் சுத்தமா ஓடாமையும் இருந்து இருக்கு.. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ,இது எல்லாமே எனக்கு புடிச்ச cult movies  



 பி.கு :எனக்கு புடிச்ச English Cult Movies பத்தி படிக்கணும்னா அதை கிளிக் செய்யவும்....

Minimalistic Photo Courtesy : Arun Prasad ( Bro Once Again Thanks Fa letting me use your works..!! )

2 STATES..!! ( 2014 )

                 ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கி ஒரு ஹிந்தி படம் தியேட்டர்ல பாத்தேன்.. சென்னை எக்ஸ்பிரஸ்க்கு ( Chennai Express ) அப்புறம்.. பொதுவா இந்தி படம் நாம யாருமே prefer பண்ண மாட்டோம்.. நாம நம்ம பிரெண்ட்ஸ் ஓட போய் இருந்தா Rio 2 , Amazing Spiderman 2 இந்த மாதிரி படங்கள தேர்ந்து எடுப்போம்.. குடும்பத்தோட போன தெனாலிராமன் ,வாயை மூடி பேசவும் இந்த மாதிரி படங்கள தேர்ந்து எடுப்போம்.. ஆனா girlfriend ஓட போனா மட்டும் தான் , இந்த மாதிரி படங்கள பாக்குற நிலைமை வரும். அதுனால இந்த படத்த நான் என் பார்த்தேன்னு நீங்க கண்டுபுடிச்சிட்டு இருப்பிங்க.., ஹிந்தி தெரிலனாலும் பார்த்தே ஆகா வேண்டுமென்ற கட்டாயம் ,இன்னிக்கி நாம பாக்க போற படம் புதுசா ரிலீஸ் ஆகி இருக்குற 2 STATES...!!

                  
                   இந்த படம் Chetan Bhagat எழுதிய 2 States நாவலை தழுவி எடுக்கப்பட்டது... Chetan Bhagat எழுதினாலே பெரிய வெற்றிதான்னு ஆயிடுச்சி.. அவர் எழுதிய எல்லா நாவலுமே சரியான ஹிட்..இந்த நாவலை அவர் அவருடைய சொந்த கதையோட கொஞ்சம் மசாலாவையும் சேர்ந்து எழுதி இருக்காரு..இந்த நாவலை படிக்கணும்னு ஆசைப்படுறவங்க CLICK HERE... இந்த கதைய நம்ம வெள்ளித்திரைக்கு ஏத்த மாதிரி நல்லா மாத்தி இருக்காங்க..
                   இந்த படம் Rom-Comனு சொல்ற Romantic Comedy என்ற Genre வகையை சேர்ந்தது..படத்தோட கதைய ஒரே வரில சொல்லிரலாம் ,"ஹீரோவும் ஹீரோயினும் சந்திக்கிறாங்க ,காதலிக்கிறாங்க ,பெற்றோர் எதிர்கிறாங்க ,அப்புறம் சம்மதம் சொல்லுறாங்க , அதோட சுபம்..!"  அட என்னங்க 100 வருட இந்திய சினிமாவோட காதல் கதைகள் எல்லாமே இதுதானேன்னு யோசிக்கிரிங்களா.. இந்த படத்தோட வித்தியாசம் என்னன்னா நம்ம ஹீரோ ஒரு பஞ்சாபி.. நம்ம ஹீரோயின் தமிழ் பொண்ணு.. அட இதையும் எங்கயோ பாத்த மாதிரி இருக்குன்னு யோசிக்கிரிங்களா.. நம்ம பிரகாஷ் ராஜ் நடிச்ச அபியும் நானும் படத்தோட கதை தாங்க..!!
                    சரி படத்துக்கு வருவோம்.. படத்தோட ஆரம்பத்துல நம்ம ஹீரோ க்ரிஷ் ஒரு மனநோய் மருத்துவர் ( Psychiatrist ) கிட்ட அவுருடைய கதைய சொல்ல ஆரம்பிக்கிறாரு..நம்ம க்ரிஷ் ஒரு பஞ்சாபி பையன் , IIT Delhi-ல படிப்ப முடிச்சிட்டு IIM Ahmedabad-ல MBA படிக்குறார்..அங்க தான் நம்ம ஹீரோயின் அனன்யாவ சந்திக்கிராறு.. அவ ஒரு தமிழ் ஐயர் பொண்ணு.. முதல் சந்திப்புலையே ரெண்டு பேரும் ரொம்ப சகஜமா பழக ஆரம்பிக்குறாங்க.. ஒன்னா வெளிய போறாங்க, ஒன்னா படிக்கிறாங்க , எப்பவுமே ஒன்னாவே இருக்கிறாங்க.. இப்படியே போற இவங்க வாழ்கைல Krish ரொம்ப அழகா அவக்கிட்ட அவனுடைய காதல வெளிப்படுத்துறான்.. அனன்யாவும் அவளுடைய சம்மதத்த முத்தத்தால வெளிப்படுத்துறா.. இதுக்கு அப்புறம் அந்த ரெண்டு பட்டாம்பூச்சிகளும் செம்பருத்தி பூக்குள்ள போய் சென்சார் கட் பண்ற அளவுக்கு கஜ கஜா ,குஜ குஜான்னு சந்தோஷமா 2 வருஷமும் வாழுறாங்க..அதுக்கு அப்புறம் தான் அவங்க பிரச்சினையே ஆரம்பம் ஆகுது.. அனன்யா , க்ரிஷ் கிட்ட அவங்க கல்யாணம் நடந்தா , அது ரெண்டு பேர் குடும்பத்தோட மனப்பூர்வமான சம்மதமோட தான் நடக்கனும்னு சொல்லுறா.. ஆனா ரெண்டு பேரோட குடும்ப மொழி ,கலாச்சாரம் ,பழக்கவழக்கம் அப்படியே வேற வேற.. ரெண்டு குடும்பத்தையும் ஒன்னு சேர்க்கணும்னு முயற்சி பண்றாங்க...அவங்களோட பட்டம் அளிப்பு விழாவுல க்ரிஷ் ஓட அம்மாவும் ,அனன்யாவோட குடும்பமும் சந்திக்கும் போது ரெண்டு குடும்பத்துக்கும் வாய் தகறாரு ஏற்படுது.. அதனால ரெண்டு குடும்பமும் இன்னொருத்தங்கள வெறுக்குறாங்க.. க்ரிஷ் ஓட அப்பா என் வரலைன்ற கதைய பாப்போம்...
                  க்ரிஷ் ஓட அப்பா கதை : க்ரிஷுக்கும் அவங்க அப்பாக்கும் ரொம்ப நாளா பேச்சு வார்த்தை இல்ல.. ( காரணத்தை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்..) க்ரிஷ் ஓட அப்பாவும் ,அம்மாவும் காதல் கல்யாணம் தான் ,ஆனா ரெண்டு பேரும் சண்ட போடுற நேரத்த தவிர மத்த நேரத்துல பேச கூட மாட்டாங்க..வேலைக்கு போறதும் குடிக்குறதும் மட்டும் தான் அவரோட முக்கியமான வேலையா இருக்கு..இதனால குடும்ப விஷயங்கள் எதுலயுமே அவர் பங்கு எடுத்துக்க மாட்டாரு.. 
                   இப்ப Main கதைக்கு திரும்ப வருவோம் : அனன்யாக்கு சென்னைல வேல கிடைக்குது.. க்ரிஷ் சென்னைல போஸ்டிங் வேணும்னு apply பண்றாரு.. சென்னைல வேலையும் கிடைக்குது.. இத சாக்கா வெச்சு.. அனன்யா குடும்பத்தோட மொத்த சம்மதத்தையும் வாங்கிடுராறு.. இதே மாதிரி அனன்யா க்ரிஷோட வீட்டுக்கு போய் க்ரிஷ் அம்மாவோட சம்மதத்தையும் வாங்கிடுறாங்க.. ஆனா முக்கியமான பிரச்சன என்னன்னா ரெண்டு குடும்பத்துக்கும் மத்தவங்கள புடிக்கணும்.. அதுனால அனன்யா ஓட அப்பா அம்மாவையும் , க்ரிஷ் ஓட அம்மாவையும் மும்பைக்கு vacationக்கு கூட்டிட்டு போறாங்க.. அங்கயும் ரெண்டு குடும்பமும் சண்ட போட்டுக்குது.. அந்த பிரச்சனைனால அனன்யாவும் கிரிஷும் பிரிஞ்சிடுறாங்க..அதுக்கு அப்புறம் அவங்க சேர்ந்தாங்களா இல்லையா..? அப்படின்னு நான் முடிக்க மாட்டேன்.. ஏன்னா எப்படியும் அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா சேர்ந்திடுவாங்க ,அது உங்களுக்கும் தெரியும்... ஆனா எப்படி சேர்ந்தாங்க..?? ரெண்டு பேர் குடும்பத்தோட முழு சம்மதத்தோட கல்யாணம் நடந்துச்சா..?? க்ரிஷ் ஏன் மனநோய் மருத்துவர் கிட்ட போய் இருக்காருன்ற ?? விடைகளை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்..
                    படத்தோட முழு கதைக்கான வசனம் இதுதான் .." இந்தியாவுல ஒரு பையனுக்கும் பொண்ணுக்கும் கல்யாணம் ஆகுறதுக்கு 3 stage தாண்டி ஆகணும்..
  • Stage 1 : பையனுக்கு பொண்ண புடிக்கணும் ,பொண்ணுக்கு பையன புடிக்கணும்...
  • Stage 2 : பையன் குடும்பத்துக்கு பொண்ண புடிக்கணும் ,பொண்ணு குடும்பத்துக்கு பையன புடிக்கணும்...
  • Stage 3 : இது தான் ரொம்ப முக்கியமான rule ,பையன் குடும்பத்துக்கு பொண்ணு குடும்பத்த புடிக்கணும் ,பொண்ணு குடும்பத்துக்கு பையன் குடும்பத்த புடிக்கணும்..
                   இந்த 3 stage-ah வெற்றிகரமா தாண்டுனா தான்.. ஒரு பையனும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க முடியும்.. ( *Conditions Apply ) இதுதான் படத்தோட மொத்த layout...
                   படத்தோட ஹீரோ க்ரிஷா நடிச்சி இருக்குறது அர்ஜுன் கபூர் ( Arjun Kapoor )...பையன் பாக்க சம ஸ்மார்டா இருக்கான்.. நல்லவும் நடிக்கிறான்..அனன்யாவா நடிச்சி இருக்குறது ஆலியா பட்  ( Alia Bhatt ).. சம அழகா இருக்கா.. ஆனா படம் பாக்கும் போது கொஞ்சம் கூட தமிழ் பொண்ணா பாக்க முடியல.. ஏன் பா டைரக்டர்ஸ் உங்களுக்கு தமிழ் பொண்ணே கிடைக்கிலையா..? எங்க ஊரு பொண்ணுங்களும் அழகு தான் பா.. சரி அத விடுவோம் இந்த படத்துல நம்ம தமிழ் நாட்டுல இருந்து ஒரு பெரிய ஹீரோயின் , அனன்யாவுக்கு அம்மாவா நடிச்சி இருக்காங்க.. அட நம்ம ரேவதி தான் பா... படத்தோட டைரக்டர் அபிஷேக் வர்மன் ( Abhishek Varman )... படத்தோட Visuals ரொம்ப அழகா இருக்கும்.. படம் முழுக்க ரொம்ப colourfull-ah இருக்கும்.. அதுக்கு காரணமான ஒளிப்பதிவாளர் பினோத் பிரதன் ( Binod Pradhan )... படத்தோட பாட்டு எல்லாமே ரொம்ப நல்ல இருந்திச்சி.. அந்த மியூசிக்கு காரணமானவங்க Shankar-Ehsaan-Loy...


                   ஆனா உண்மையா சொல்லணும்னா , தமிழ் பொண்ணு பஞ்சாபி பையன லவ் பண்ற கதைய நாம ஏற்கனவே அபியும் நானும் படத்துல பாத்து இருப்போம்.. அந்த படத்த நான் ரசிச்ச அளவுக்கு ,நான் இந்த படத்த ரசிக்கல .. ஒத்துக்கிறேன் அபியும் நானும் ஓட கதையும் ,2 states ஓட கதையும் வேற வேற தான்.. ஆனா 2 states-ல இன்னும் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்து இருக்கலாம்...ஏன்னா பொதுவாவே ரெண்டு கலாச்சாரம் ஒன்னு சேரும் பொது பிரச்சனைய விட ,காமெடி தன அதிகமா இருக்கும்.. அத இந்த படத்துல சரியாய் காமிக்கவில்லை என்பது என்னுடைய கருத்து.. அந்த விஷயத்துல  அபியும் நானும் சமயா இருந்திச்சி...
                    படம் கண்டிப்பா பொண்ணுங்களுக்கு ரொம்ப புடிக்கும்..ஏன்னா பொதுவாவே பொண்ணுங்களுக்கு Cinematic-ah லவ் பண்றவங்கள புடிக்கும்... இந்த சினிமால cinematic-ah நம்ம க்ரிஷ் லவ் பண்றதுனால.. அவங்களுக்கு கண்டிப்பா இந்த படம் புடிக்கும்.. ஆனா எனக்கு என்ன ஒரே கடுப்புனா.. இந்த பொண்ணுங்க இருக்காங்களே.. யாரு கிட்டயோ 2 states கதைய கேட்டு இருப்பாங்க.. உடனே மத்தவங்க கிட்ட போய்.. " ஹேய் நேத்து chetan bhagat ஓட 2 ஸ்டேட்ஸ் படிச்சேன் டா... என்னா லவ் தெரியுமா இந்த அனன்யா க்ரிஷ் ஓட லவ்" அப்படின்னு சொல்லுவாளுங்க.. ஆனா போய் கேட்டிங்கன்னு வெச்சிங்கனா க்ரிஷ் நம்ம ஊரு பையனும் , அனன்யா பஞ்சாபி பொண்ணுனும் தப்பு தப்பா அடிச்சி விடுவாளுங்க ( இது நிஜமா எனக்கு நடக்கலைங்க)... இதுல என்ன பெருமையோ..? 
                    படத்துல எனக்கு கடுப்பு என்னன்னா நல்லா தமிழ் தெரிஞ்ச பொண்ணுங்கள ஒண்ணு நடிக்க வெக்கணும்.. இல்ல dubbing ஆகுது நல்லா தமிழ் பேச தெரிஞ்ச பொண்ணா பார்த்து பேச வெக்கணும்.. இந்த ஹிந்தி டைரக்டர்ஸ் அத பத்திலாம் கவலை படுறதே இல்ல.. சென்னை  எக்ஸ்பிரஸ்லையும் சரி இந்த படத்தலையும் சரி ஹீரோயின் தமிழ் பேசுறது எனக்கு சம காண்டாகுது...என்ன கொடும சார் இது..!!
                     கண்டிப்பா படம் உங்களுக்கு புடிக்காம இருக்காது... நல்லா தான் இருக்கும்... ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ரொம்ப அற்புதமாலாம் இல்ல.. நல்லா இருக்கு.. ரசிச்சி பாக்கலாம் ,சிரிச்சி பாக்கலாம்..

MY RATING - 3.5/5

பி.கு : இந்த படத்தோட சேர்த்து , Chetan Bhagat க்கு இது நாளாவுது நாவல் , படமாகுறது ..

          BOOK                                             MOVIE
1.Five Point Someone                      -  3 Idiots ( Nanban )
2.One Night @ the Call Center      -  Hello
3.The 3 Mistakes Of My Life             -  Kai Po Che !
4.2 States                                            -  2 States

USTAD HOTEL..!! ( 2012 )

                    ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள உறவை பத்தி வருகிற படங்கள் ரொம்ப கம்மி...  இப்போ சமிபத்துல நான் அப்படி பார்த்த படம் பாலுமகேந்திராவின் தலைமுறைகள்.. ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவை ரொம்ப அழகா பிரதிபலிக்கும்... அந்த படம் தேசிய விருது வாங்கினது , என்ன பொறுத்த வரைக்கும் தேசிய விருதுக்கான பெருமை..
                     ஆனா நான் இன்னிக்கி அந்த படத்த பத்தி பேச போறது இல்ல..
இன்னிக்கு நாம பாக்க போற படம்.. தாத்தா பேரனோட உறவை பத்தி வந்த  மலையாள படமான HOTEL USTAD...



                        படத்தோட ஆரம்பத்துல ஒரு முஸ்லிம் தம்பதி தங்களுடைய முதல் குழந்தை பிறப்பதற்காக ரொம்ப ஆவலோட எதிர்பாத்திட்டு இருக்காங்க.. அதுவும் ஆண்பிள்ளைக்காக.... முதல் குழந்தையும் பிறக்குது.. ஆனா அது பெண்குழந்தை.. அதுக்காக ரெண்டாவது குழந்தைக்கும் தயராகுறாங்க ... ரெண்டாவதும் பெண்குழந்தை.. அடுத்ததுக்கும் தயராகுறாங்க கருமம் அதுவும் பெண்குழந்தை.. அந்த பெண்ணோட கஷ்டத்த புரிஞ்சிக்கிட்டு இதோட நிருத்திடுவார்னு பார்த்தா.. அவரு விடாது கருப்பு போல விடவே இல்லையே... ஆனா அவரோட  கேட்ட நேரம் அடுத்ததும் பெண்குழந்தை.. ஒரு வழியா கடைசியாய் அவருக்கு ஆண்பிள்ளை பிறக்குது.. அவுரு தான் நம்ம ஹீரோ Faizi...

                         ஆனா இந்த தொடர்ச்சியான ஆண்பிள்ளைக்கான வேலையினால ஹீரோ ஓட அம்மா இறந்துடுறாங்க.. ஹீரோ ஓட அப்பா அவங்க எல்லாரையும் கூட்டிட்டு துபாய் போயிடுறாரு.. எல்லா பொண்ணுங்களையும் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிடுறாரு.. ஹீரோவ ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கறதுக்காக அவங்க அப்பா அவன சுவிட்சர்லாந்த் அனுப்புறாரு.. ஆனா நம்ம ஹீரோ Chef க்கு படிச்சிட்டு வராரு...லண்டன்ல அவருக்கு வேலையும் கிடைச்சிடித்து  அவருக்கு பொண்ணு பாக்க போகும் போது அவரு பொண்ணுக்கிட்ட அவரு படிச்சது chef க்குனு சொல்றாரு...அவங்க அப்பா அத கேள்வி பட்ட உடனே அவருடைய பாஸ்போர்ட் கிரெடிட் கார்டு எல்லாத்தையும் எடுத்து வெச்சிகிறாரு.. அப்போ நம்ம ஹீரோ வேற வழி இல்லாம அவருடைய தாத்தாக்குட இருக்க கோழிகோடு வராரு..அவங்க தாத்தாவ எல்லாரும் 'கரீம் இக்கான்னு' தான் எல்லாரும் கூப்பிடுறாங்க... அவங்க தாத்தா வெச்சி இருக்குற ஹோட்டல் பேர் தான் ஹோட்டல் உஸ்தாத் ( USTAD HOTEL ).. கோழிகோடுல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச தெரிஞ்ச ஹோட்டல்... தாத்தாவுக்கும் பேரனுக்கும் உள்ள உறவை அழகா சித்தரிச்சி இருப்பாங்க... அவங்க தாத்தா பேரனுக்கு எப்படி சமைக்கணும்னு சொல்லித்தராறு... ஹீரோவ பயங்கரமா வேலை வாங்குறாரு.. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ நம்ம ஹீரோயின மறுபடியும் பாக்குறாரு.. அதே தான் அப்புறம் லவ் தான்..நம்ம ஹீரோ பெரிய ஹோட்டல்ல வேலை செய்யணும்னு ஆச படும் போது.. அவங்க தாத்தா அவுர பக்கத்துல இருக்குற 5 ஸ்டார் ஹோட்டல்ல வேலை சேர வைக்கிறாரு..நம்ம ஹீரோக்கு பிரான்ஸ்ல ஒரு ஹோட்டெல Executive Chef வேலையும் கிடைக்குது..அப்போ தான் அவரோட தாத்தா வெச்சி இருக்குற ஹோட்டெல இடிச்சிட்டு பெரிய ஹோட்டல் கட்ட போற விஷயம் இருக்குறத கேள்வி படுறாரு.. ஹோட்டல்காரங்க எவ்ளோ போராடியும் கரீம் இக்கா அவருடைய ஹோட்டெல தர மறுக்குறாரு.. இதனால ஹோட்டல்காரங்க அவருடைய ஹோட்டெல சுகாதாரம் இல்லன்னு கடைய மூடிடுறாங்க..அப்பறம் நம்ம ஹீரோ கடைய திறந்தாரா இல்லையா ?  பிரான்ஸ்ல கிடைச்ச வேலைக்கு போனாரா இல்லையா?? படத்த பார்த்து தெரிஞ்சிகோங்க..


                         ஹீரோ நம்ம டுல்கெர் சல்மான் ( Dulquer Salman )... அதான் பா நம்ம மம்மூட்டி ஓட பையன்.. அட இப்ப புதுசா வந்து இருக்குற வாயை மூடி பேசவும் பட ஹீரோ.. நல்ல நடிச்சி இருக்குறாரு.. என்னதான் சினிமா வாய்ப்பு easy-ah கிடைச்சாலும் அத தக்கவெச்சிக்கிறது ரொம்ப கஷ்டம்.. ஆனா அத தக்கவெச்சிக்கிற திறமை அவர்க்கிட்ட இருக்கு.. ஹீரோயின் நம்ம 180 பட நித்ய மேனன் ( Nithya Menon )... நல்ல அழகாவும் இருக்காங்க , நல்லவும் நடிக்கிறாங்க...

                  ஆனா படத்த சும்மா ஒத்த ஆளா தூக்கி நிறுத்துனது நம்ம கரீம் இக்காவா பண்ணி இருக்குற திலகன் ( Thilakan ).. 3 தடவ தேசிய விருது வாங்குனவர்..  கடைசி வரைக்கும் கரீம் இக்காவா வாழ்ந்து இருக்காரு... தைரியமானவர்... திறமையானவர்.. அவரு இறந்தது கண்டிப்பா சவுத் இந்தியன் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பு.. அதுக்கு அடுத்து படத்துல 10 நிமிஷம் வந்தாலும் பின்னி பெடல எடுத்தவரு நம்ம ஜெயப்ரகாஷ் ( Jayaprakash ).. மனிஷன் எந்த ரோல் குடுத்தாலும் பயங்கரமா நடிக்கிறாரு.. கண்டிப்பா கூடிய சீக்கிரம் தேசிய விருது கிடைச்சா ஆச்சிர்யபடுரதுக்கு ஒன்னும் இல்ல.. இவரு பண்ணி இருக்குற கேரக்டர் ஒரு உண்மையா ஒருத்தர் ஓட கேரக்டர்.. அவர பத்தி நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் .. அவர பத்தி தெரிஞ்சிக்க CLICK HERE








                          படத்தோட கதை அஞ்சலி மேனன் ( Anjali Menon ).. படத்தோட டைரக்டர் அன்வர் ரஷீத் ( Anwar Rasheed ).. படத்தோட மியூசிக் கோபி சுந்தர் ( Gopi Sunder ).. படத்துல அந்த பார் சாங் சமயா இருந்திச்சி.. படத்தோட ஒளிப்பதிவாளர் லோகநாதன் ( S.Lokanathan ).. அருமையா இருந்திச்சி..
                         இந்த படம் 2012க்கான சிறந்த மலையாள படத்துக்கான தேசிய விருது வாங்கிச்சி.. படம் நீங்க பாக்கும் போது நிஜமாவே உங்களுக்கு எதுமே நெகடிவா தெரியாது... அவ்ளோ அருமையான படம்.. ஒரு வேலை இந்த படத்த நீங்க பாக்க தவறி இருந்திங்கன... மறக்காம பாருங்க...
                         இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச வசனம் " யாரு வேணும்னாலும் வயித்த நிரப்பலாம்... ஆனா ஒரு நல்ல சமையல்காரனால மட்டும் தான் மனசையும் நிரப்ப முடியும் "..

MY RATING - 4/5

பி.கு : இந்த படத்த தமிழ்ல தலப்பாகட்டுன்னு எடுத்திட்டு இருக்காங்க... ஹீரோவா நம்ம விக்ரம் பிரபுவும் , தாத்தாவா ராஜ் கிரணும் பண்றதா கேள்வி பட்டேன்..

ANTAGONISM TOWARDS FRIENDSHIP! - MUMBAI POLICE

                   Everybody in this world longs for companionship. Companionship bridges trust between two people and even helps us to build our own character. Friendship is the brick needed to develop the building called companion ship and so to raise the building to great heights this basic bricks are mandatory. Each and every soul longs for friendship. One loving friend is enough for us to live our lives happily without any hardened problems in this enemity and sorrow struck world. Like how John Watson always sticks to Sherlock Holmes even though Mr.Holmes show off nature is really annoying, We always need atmost one friend like him to be our best pal and be with us in every corner of life and not the one who stabs at your back by sharing your secrets and weakness to others who are waiting for your death by digging your grave slowly and steadily.

                    We always love to share many secrets  to our close friends that includes me too. We may even avoid to share certain things even to our better half but we are so ready to share it with our pals because they are the most trusted people in the world and that's the world renowned fact. We ought  to share our home sick parental problems, our future and about our crush too to our friend. He too believes the fact that we don't hide anything from him and he feels so proud of it. But what happens when he comes to know that you were hiding one secret for many long years and that's the most prominent thing in your life. Surely he will be disappointed. He automatically starts developing many doubts in his own mind that whether his best friend considers him as not the trust-worthy person he wanted to be in his life. He will start maintaining a distance from you. Since he knows your secret you get the enigmatic feeling that he will share that one particular secret to others that you were hiding for many decades. You will start doubting your own friend that you believed for so many years. So the conclusion is a gap starts developing between the two and ultimately ending in seperation and rise of strong enmity between the two

                 Stories apart. Today am gonna share my opinion about a malayalam movie. Honestly, this is the first malayalam movie I ever watched. I have the necessity to confess this at this point of time.

                 Am gonna share my views about  the movie "MUMBAI POLICE" with you guys..



                 The lead role of the movie .is played by Prithviraj. It fits in to the genre crime thriller.Prominent performances are given by Rahman and Jayasurya. The megaphone is handled by Roshan Andrrews and cinematography by R.Diwakar. Back ground score by Gopi Sunder  and editing by Mahesh Narayanan


                  The opening scene of the movie starts with a bewildered introduction of  ACP Antony Moses(Prithiviraj) getting into an accident and as a consequence of it suffering from partial memory loss. Before the accident he hinted that he has found out the culprit behind the assassination of his best friend assistant commissioner  Aaryan John Jacob (Jayasurya) (Assistant Commisioner) who was killed at the gallantry award ceremony at parade ground using a long rifle.He told that he has solved the case to his senior officer Farhan Ashraf (Rahman).Antony Moses after his treatment gets over forgets his past completely and starts facing everything just as a new born child. He is not aware of his past and he doesn't know who were his enemies and friends. He had no clue when he was confronted by the thugs whom he had dealt with before. He even forgets his own sister and brother-in-law Farhan Ashraf. Then Farhan starts explaining Antony Moses's past life of all the sad incidents he faced in his life and he was brought into this crime scene. Antony Moses after hearing his past stories first shows his hesitation but Farhan showed faith in Antony Moses and wanted him to take over the case again.So he decides to take over the case again.. He starts realising how arrogant he was before the accident.. His investigations continue at nice speed.. During Investigation he realises there are lot of changes that needs to be done to the facts and suspects in the investigation report which was reported by him before the accident... Whether he solves the mystery behind his best friend's assassination..?? Who was the killer..?? What was his motive forms the rest of the plot..



                     Performance wise Prithiviraj was at his potential best. He has glued to the character of Antony Moses so well before and after partial memory loss. The performance which was so eye-catching was Jayasurya's role of Aaryan John Jacob. He played the role so delicately and sometimes you will be pushed into the feel that Jayasurya has out smarted Prithiviraj in some scenes too. He has done his role so neatly. Personally loved his characterisation so much. Rahman was at his usual best. His performance towards climax will be so awesome to watch.

                      The thing which I need to mention the most is the climax. I assure you that you may find the culprit behind Aaryan's murder but I guarantee you that you would not have imagined that what provoked him to commit this murder. you will be surely suprised and shocked to see this sort of a climax as you would not have expected this in a south Indian movies.

                       Actually this film cannot be directly remade as Tamil film because our tamil audience wont quite like the reason behind the murder..I am very proud enough to confess that nowadays if you want to watch a good south Indian movie with meaningful content I will surely guide you to watch malayalam movies as they deliver their genius stories with awesome screen play such as this movie to take as an example.

                       This movie is surely a worth to watch and should not be given a miss at any cost. Critically acclaimed with commercial elements added brilliantly.

MY RATING  - 3.5/5.

 P.S: Malayalam Mystery/Thriller movies are at its best nowadays.. So all you crime lovers.. start watching these malayalam thriller flicks..

LUCIA..!! ( 2013 )

                        நாம ஒரு கனவு காணுறோம்.. அது உண்மையா இருக்குற மாதிரி இருக்கும்.. திடிர்னு கண்ணு விழிக்கிறோம்.. அட கனவுதான்யான்னு விட்ருவோம்.. ஆனா கண்ணு விழிக்கிறது கனவாகவும்... கனவு கண்டது உண்மையாகவும் இருந்தா... குழப்பமா இருக்குல..??
                        என் பா இப்படிலாமா நடக்கும்னு நினைக்கிறிங்களா..? அது நடக்குமா இல்லையான்னு எனக்கு தெரியாது..? ஆனா அந்த Concept-ah வெச்சி வந்த இந்த படம்.. இந்தியா முழுக்க சும்மா பட்டய கிளப்பி ஓடிச்சி... அந்த படம்  LUCIA ..


                      அதாவது நாம காணுற கனவ நம்மனால கட்டுப்படுத்த முடிஞ்சா அதுக்கான மருத்துவ பெயர் LUCID DREAMING ... அதை பத்தி தெரிஞ்சிக்க CLICK HERE.. உதாரணத்துக்கு எனக்கு தெரிஞ்சி பல பேரு இத முன்னாடியே அனுபவிச்சி இருப்பிங்க.. விடியற்காலைல எந்திரிச்சி எதாவது வேல செஞ்சிட்டு ஒரு ஒன்னோ ரெண்டு மணி நேரம் கழிச்சி தூங்கும் போது.. நாம காணுற கனவு நம்ம கட்டுப்பாட்டுல இருக்கும்.. அதாவது நம்மனால அத உணர முடியும்.. ( சத்தியமா சொல்லனும்னா எனக்கு அதுலாம் தெரிஞ்சது இல்ல.. இந்த உதாரணம் என் நண்பன் சொன்னது ) இத பத்தி எதுக்கு சொல்றேன்னா.. நம்ம லூசியா இந்த LUCID DREAMING-ah கான்செப்ட்-ah வெச்சி வந்து இருக்குங்க அதுனால தான் சொன்னேன்..
                        படத்தோட ஆரம்பத்துல யாரோ ஒருத்தங்க மருத்துவமனைல உயிருக்கு போராடுற நிலைமைல இருக்காங்க.. அந்த நிகழ்ச்சிய பத்தி ஒரு போலீஸ் விசாரணை வேற போய்கிட்டு இருக்கு .. இப்போ நம்ம ஹீரோ என்ட்ரி ..நம்ம ஹீரோக்கு சினிமா டாக்கீஸ்ல torch அடிச்சி சீட்ட காமிக்கிற வேல..நம்ம ஹீரோ இரவுலாம் தூக்கம் வராம தவிக்கிறாரு.. அப்போ ஒரு நாள் ஒரு ஆள் தூக்கம் வரதுக்கு ஒரு டப்பால நிறைய மாத்திர தராங்க.. அத நம்ம ஹீரோ போடும் போது .. நல்லா தூங்குறாரு.. கனவுல நம்ம ஹீரோ நிஜமாவே ஒரு பெரிய ஹீரோ.. அவருடைய வாழ்க்கைல இருக்குற எல்லாருமே கனவுலயும் எதாவது ஒரு ஆளா வராங்க... அதுக்கு அப்புறம் நம்ம ஹீரோ எந்திரிச்சிடுறாரு.. அதுல இருந்து அந்த மாத்திரைய போடுறத வழக்கமா வெச்சிகிறாரு.. இந்த மாத்திரையோட சிறப்பு என்னன்னா, கனவு , சீரியல் எபிசோட் மாதிரி தொடர்ச்சியா வரும் .. இதுல சீரியல் நடவுல வர Advertisement மாதிரி ,உண்மையான வாழ்கையும் நடுவுல வரும்..ரெண்டு வாழ்கையுளையும் காதலும் இருக்கு  , ரெண்டு வாழ்கையுளையும் பிரச்னையும் இருக்கு... படத்துல ஒரு முக்கியமான ட்விஸ்ட் இருக்கு அத படத்த பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. நம்ம ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்தாங்கலா இல்லையா..? நம்ம ஹீரோவோட வாழ்க்கை என்னாச்சு...? படத்தோட ஆரம்பத்துல மருத்துவமனைல அட்மிட் ஆகி இருந்தது யாரு..? இந்த கேள்விக்கான பதில படத்த பார்த்து தெரிஞ்சிக்கோங்க..
                        படத்துல வர அந்த torch அடிக்கும் ஹீரோ ஓட காதல் அழகா இருக்கும்.. அவரு அந்த பொண்ணு மேல ஆசைப்படுறது... அந்த பொண்ணு இவர ஸ்டைலா மாத்தணும்னு ஆச படுறது.. அந்த வெள்ளைக்காரி கும்பலோட நம்ம ஹீரோயின், ஹீரோ இங்கிலீஷ் கத்துக்கணும்னு அனுப்பும் போது..நம்ம ஹீரோ அவங்கள கன்னடம் கத்துக்க வெக்குறது எல்லாம் சமையா இருந்திச்சி.. படத்துல இந்த TORCH WALA ஹீரோ கேரக்டர் உங்களுக்கு நிஜமாவே ரொம்ப பிடிக்கும்..

               படத்தோட டைரக்டர் பவன் குமார் ( Pawan Kumar ).. லூசிட் dreaming கான்செப்ட்-ah எடுத்து அத பயங்கரமா திரைல காமிச்சதுக்கு.. முதல அவருக்கு  ஒரு பெரிய பாராட்டுகள்.. படத்துல கனவு sequence-ah கருப்பு வெள்ளையா ( Black & White ) காமிச்சி .. அதுக்கு ஒரு அருமையான காரணம் வெச்சதுக்கு இன்னொரு பெரிய பாராட்டுகள்..
                                               
                     LUCIA இந்த படம் மக்களால் தயாரிக்கப்பட்ட முதல் கன்னட  திரைப்படம்.. 110 மக்கள் சின்ன சின்ன தொகையா கொடுத்து தயாரிக்கப்பட்டது.. இந்தியாவிலிருந்து ஆஸ்கார் போட்டியில் பங்கெடுப்பதற்காக இருந்த போட்டியில் , இந்த படம் முக்கியமான இடத்தில இருந்திச்சி..
                       
படத்தோட ஹீரோ சதீஸ் நீநாசம் ( Sathish Neenasam ).. பக்கத்துக்கு வீட்டு பையன் மாதிரி தான் இருக்காறு.. Torch Wala ரோல் இவருக்கு பொருத்தமா இருந்திச்சி.. ஹீரோயின் சுருதி ஹரிஹரன் ( Sruthi Hariharan ) நல்லா அழகா இருக்கா.. எனக்கு ரொம்ப புடிச்சி இருக்கு..
                                           



                       படத்துல எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது ஒளிப்பதிவு...படத்தோட ஒளிப்பதிவாளர் சித்தர்த நுனி ( Siddhartha Nuni ).. மியூசிக் ரொம்ப நல்லா இருந்திச்சி... படத்தோட ஆரம்பத்துல வர முதல் பாட்டு.. ஹலோ சிவா பாட்டும் சரி.. அந்த பாட்டோட நடனமும் சரி.. ஒளிப்பதிவும் சரி.. அற்புதமா இருந்திச்சி.. Jamma Jamma பாட்டும் நல்லா இருந்திச்சி..மியூசிக் டைரக்டர் பூர்ணச்சன்ற தெஜஸ்வி ( Poornachandra Tejaswi )..
ஒருவேள இந்த படத்த நீங்க பார்க்காம இருந்திங்கனா... முதல் வேலையா மத்த படத்தலாம் மூட்டக்கட்டி வெச்சிட்டு இந்த படத்த நீங்க முதல பாக்குறது நல்லது..

MY RATING - 3.5/5

பி.கு : இந்த படத்தோட டைரக்டர் படத்தோட கதை சுருக்கத்த தன்னுடைய ப்ளாக்ல போட்டாறு.. அத பாத்த மக்கள் அவருடைய படத்துக்கு பணம் குடுத்தாங்க.. என் பா தமிழ் directors நீங்களும் இப்படி முயற்சி பண்ணலாமே.. 

THEGIDI..!! ( 2013 )

என்னப்பா ப்ளாக் எழுத ஆரம்பிச்சாச்சு இன்னும் ஒரு தமிழ் படத்த பத்திக்கூட எழுதுலன்னு என் மனசாட்சி என்ன கேட்டதுக்காக.. இன்னிக்கு தமிழ் படம் தான்னு முடிவு பண்ணி எழுத உக்கார்ந்த அப்புறம் தான் ஞாபகம் வருது.. அட கருமமே எந்த படத்த பத்தி எழுதுறதுன்னு யோசிக்கவே இல்லையேன்னு.. எனக்கு நார்மலா mystery/thriller genre ரொம்ப புடிக்கும்.. சரி கடைசியா இந்த genre-ல நான் பாத்த தமிழ் படம்.. தெகிடி ( THEGIDI )..
               தெகிடினா - தாயம் ( DICE ).. இதுக்கு வேற சில அர்த்தங்களும் இருக்கு.. அத தெரிஞ்சிக்கணும்னா CLICK HERE...


               பொதுவாவே எனக்கு சி.வி.குமார் ( C.V.Kumar ) தயாரிக்கிற படங்கள்னா நம்பி பார்க்கலாம்ன்ற எண்ணம் இருக்கு.. அதுக்கு காரணம் அட்டக்கத்தில இருந்து இந்த படம் தெகிடி வரைக்கும்,எல்லா படமும் வித்தியாசமான கதையம்சங்கள் கொண்டதா இருந்திச்சி...அவரு தயாரிச்ச எல்லா படத்தோட டைரக்டர்க்கும் அது தான் முதல் படம்.. வளரும் short- film generation டைரக்டர்கள் இவரோட வீட்டுக்கு தான் மொத்தமா படை எடுத்து கொண்டு இருக்கிறாங்கன்னு கேள்வி பட்டேன்...
                  படம் ரிலீஸ்-ஆன அன்னிக்கு என் நண்பர்கள் 10 பேரோட போய் இந்த படத்துல உக்காந்தேன்.. பாதி பேருக்கு மேல வல்லினம் போலாம்னு சொன்னாங்க.. நான் முன்னாடியே சொன்ன மாதிரி தயாரிப்பாளர் மேல இருந்த நம்பிக்கைல எல்லாரையும் கூட்டிட்டு தெகிடி பாக்க போனேன்.. நம்பிக்கை வீண் போகல..
                   நம்ம ஹீரோ வெற்றி ஒரு criminology படிக்கும் மாணவர்.. அவருடைய professor சொல்றதுனால பிரைவேட் detective ஆகலாம்னு முடிவு பண்றாரு ..ரேடிகல் solutions கம்பெனில வேலைக்கு சேர்றாரு..கம்பெனி ஓட பாஸ் சடகோப்பன்..அவருக்கு கீழ ஷைலேஷ் , ஷைலேஷ்க்கு கீழ தான் நம்ம ஹீரோ வேல செய்யுறாரு... கம்பெனி ஓட ரூல்ஸ் என்னன்னா Subject -ah எக்காரணம் கொண்டும் நெருங்க கூடாது....கம்பெனி சொல்ற ஆளுங்கள ( Subject ) அவங்களுக்கு தெரியாம follow பண்ணி..  ...அவங்கள பத்தின முழு விபரங்களையும் தெரிஞ்சிக்கிட்டு, அத கம்பெனி கிட்ட submit பண்ற வேலை.. அதாவது சுருக்கமா சொல்லனும்னா Shadowing And Surveillance...  அப்படி ஒருத்தர பத்தி follow பண்ணும் போது.. அவரோட வீட்டுக்குல வெச்ச ஒட்டு கேக்குற machine-ah எடுக்கறதுக்காக , பூட்ட உடச்சி உள்ள போலாம்னு முயற்சி செய்யும் போது.. நம்ம heroine பாத்துடுறாங்க.... அவங்க திருடன்னு நினைச்சி ஆள் கூட்டிட்டு வரதுக்குள்ள நம்ம ஹீரோ எஸ்கேப் ஆகிடுறாரு.. அதுக்கு அப்புறம் நம்ம ஹீரோக்கு இன்னொரு assignment வருது... அது யாருன்னு பாத்த நம்ம heroine மது .. Subject-ah நெருங்ககூடாது விதிய தூரம் வெச்சிட்டு நம்ம ஹீரோ அவர பத்தின உண்மையா சொல்லாம அவங்களோட பழக ஆரம்பிச்சிடுறாரு.. மது ஓட நம்ம வெற்றி ஒரு beauty parlor-க்கு போறாரு..அப்போ அங்க newspaper-ல அவருடைய Subject ல ஒருத்தர் கார் விபத்துல மரணம்னு செய்தி படிக்கிறாரு.. வேற ஒரு Subject வீட்டுக்கு போய் அவரு இருக்காரானு பாக்கும் போது.. அவரு போன வாரமே இறந்துட்டார்னு கேள்வி படுறாரு... மத்த subjects-ah காப்பத்தலம்னு அவங்க கிட்ட போறாரு.. ஆன ரெண்டு பேரும் அவரு கண் முன்னாடியே சாகுறாங்க.. மீதி இருக்கும் Subject மது மட்டும் தான்.. மது தப்பிச்சாலா இல்லையா..? இந்த கொலைகள் எல்லாம் எதுக்கு நடந்திச்சி..? இதுக்கு பின்னாடி யாரு இருக்கா..? எல்லாத்தையும் நானே சொல்லிட்டேனா எப்படி..? விடைகளை  படத்த பாத்து தெரிஞ்சிகோங்க. படம் முடியும் போது வரும் ட்விஸ்ட் நிஜமாவே சூப்பரா இருந்திச்சி.. அட  யாருப்பா அந்த வல்லபா..?.. எனக்கும் என் நண்பர்களுக்கும் அன்னிக்கு அது தான் விவாதமே..
                      கதைய விறுவிறுப்பா கொண்டு போய் இருக்காறு டைரக்டர்... படம் சரியாய் 2 மணி நேரம் தான்.. அது தான் படத்துக்கு பிளஸ்.. நீளமா இருந்து இருந்தா விருவிருப்ப்பு குறைஞ்சி இருக்கும்.. எதுக்காக கொலை நடக்கத்துன்ற காரணம் வித்தியாசமா இருந்திச்சி.. தமிழ் சினிமால கண்டிப்பா இது ஒரு புதமையான முயற்சி.. படம் ஸ்டார்டிங்ல அண்ட்ரியா வாய்ஸ் ஓட வரும் பாட்டு.. பின்னாடி ஓடும் visuals ..சூப்பர்-ah இருந்திச்சி பா.. படத்துல கொஞ்சம் லாஜிக் மீறல்கள் இருக்கு.. ஆனா படம் பாக்கும் போது அது எதுவுமே உங்களுக்கு தெரியாது.. அதுக்கு டைரக்டர்க்கு ஒரு பெரிய பாராட்டுகள்..
                       ஹீரோ நம்ம அசோக் செல்வன் ( Ashok Selvan ).. அதான் பா நம்ம பீட்சா 2 ஹீரோ.. heroine ஜனனி இயர் ( Janani Iyer ).. இவங்க நம்ம அவன் இவன் படத்துல விஷால்க்கு ஜோடியா நடிச்சாங்களே அவங்க தான்.. ஜெயப்ரகாஷ் ( ஜெயப்ரகாஷ் ) போலீஸ் இன்ஸ்பெக்டர் ரோல் பண்ணி இருக்காரு.. ஷைலேஷா பண்ணி இருக்குறது நம்ம ஜெயகுமார் ( Jayakumar ).. படத்துல எல்லாருமே அவங்க அவங்க கேரக்டர்-ah நல்லா பண்ணி இருக்காங்க.. ஹீரோ இன்னும் கொஞ்சம் பெட்டரா நடிச்சா நல்லா இருக்கும்..
                        படத்தோட டைரக்டர் P.ரமேஷ் ( P. Ramesh ).. மியூசிக் டைரக்டர் நிவாஸ்.K .பிரசன்னா ( Nivas K. Prasanna ).. படத்துல எல்லா பாட்டுமே சூப்பர்.. அதுவும் ஹீரோ heroine லவ் பாட்டு visualum நல்லா இருந்திச்சி பாட்டும் சூப்பர்-ah இருந்திச்சி.. படத்தோட ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ( Dinesh Krishnan ).. நிஜமாவே ஒளிப்பதிவு சூப்பரா இருந்திச்சி..
                        மொத்ததுல இந்த படம் கண்டிப்பா உங்கள ஏமாத்தாது ... இந்த படத்த பாக்காம இருந்திங்கனா தவறாம பாருங்க.

MY RATING - 3.5/5

பி.கு : தெகிடி 2 எடுக்க போறதா கேள்வி பட்டேன் .. அதுலையாது இந்த வல்லபா யாருன்னு சொல்லுங்க பா.. 

OH MY SUPERMAN ..!! ( 2012 )

அட என்னப்பா நீ .. உன் ப்ளாக்-ah படிக்க ஆளே இல்ல.. நீ எழுதிட்டே இருக்கியே பா அப்படின்னு நினைக்கிறிங்க போல..! உண்மை தான்.. ஆனா எழுதுறதுல எதோ ஒரு சந்தோசம்.. புடிச்சி இருக்கு.. நான் எழுதுனத நானே நெறைய முறை படிச்சி இருப்பேன்.. ஒரு ஒரு வாட்டி படிக்கும் போதும் எதோ ஒரு சந்தோசம்.. இத்தனை நாளா வெறும் வாய் பேச்சா இருந்ததை இப்போ தான்  எழுத்து வடிவம் ஆக்கி இருக்கிறேன்.. முடிஞ்சவரை எழுதுவோம்..
சரி இன்னிக்கு topic என்னன்னா சினிமா தான் . ஆனா இன்னிக்கு ஒரு ஹிந்தி படத்த பத்தி பாக்கலாம்.. வித்தியாசமான படத்துக்கு ரசிகரா நீங்க ..ஹிந்தில இருக்குற 15 BEST OFFBEAT படங்கள்பத்தி தெரிஞ்சிக்கணும்னா அத கிளிக் பண்ணுங்க.!!
                    இதுல எனக்கு ரொம்ப புடிச்ச படமான OH MY GOD பத்தி இன்னைக்கு பார்க்கலாம்..

                 
                       நம்ம ஹீரோ காஞ்சி பாய் ஒரு மிடில் கிளாஸ் ஆளு..அவரு ஒரு பயங்கரமான நாத்திகவாதி.. ஆனா அவரு கடவுள் சிலைய விக்கிற கடை ஒன்ன நடத்திட்டு இருக்காறு.. அவருக்கு ஒரு அசசிச்டன்ட்.. நம்ம ஹீரோவோட மனைவி பயங்கரமான கடவுள் பக்தி உடையவங்க..எந்த அளவுக்குனா காஞ்சி பாய் கடவுள பத்தி நக்கலடிக்கிரதுக்கு அவங்க விரதம் இருந்து மன்னிப்பு கேப்பாங்க.. நம்ம காஞ்சி பாய் 250 ரூபா கடவுள் சிலைய பொய் சொல்லி 15000 ரூபாக்கு விக்கிறவரு.. ஒரு நாள் ஒரு திருவிழாவ பொய் சொல்லி கலச்சிடுறாரு...அன்னிக்கு இரவு பாத்தா பஜார்ல அவருடைய கடை மட்டும் இடிஞ்சி கிடக்குது.. எல்லாரும் இது கடவுள் ஓட செயல்னு சொல்ல , நம்ம காஞ்சி பாய் கொஞ்சம் கூட கவலை படாம இன்சூரன்ஸ் கிளைம் பண்றாரு.. இன்சூரன்ஸ்காரங்க ACT OF GOD (கடவுளுடைய செயலுக்கு) இன்சூரன்ஸ் தர முடியாதுன்னு சொல்லிடுறாங்க... அப்போ நம்ம காஞ்சி பாய் கடவுள் மேல கேஸ் போடுறாரு.. கடவுள் உடைய பிரதிநிதியா நம்ம மடத்தோட குருக்கள் கோர்ட்க்கு வராங்க.. கோர்ட் காஞ்சி பாய் ஓட கேஸ்-ah ஒத்துக்குது.. வெளிய மக்கள் எல்லாரும் காஞ்சி பாய்க்கு எதிரா கிளம்புராங்க.. அவர அடிக்க துரத்தும் போது நம்ம அக்ஷய் குமார் வந்து காப்பாத்துறாரு ... நம்ம காஞ்சி பாய் கேஸ்ல ஜெய்ச்சாரா இல்லையா..? அக்ஷய் குமார் எதுனால வந்தாரு..? அவரு யாருன்றத படத்த பார்த்து தெரிந்து கொள்ளவும்..
                 
காஞ்சி பாயா நடிச்சி இருப்பது பத்மஸ்ரீ பரேஷ் ராவால்... அதாவது படத்துல இவுரு பேசுற ஒவ்வொரு வசனுமும் சம சீன்-ah இருக்கும்.. கடவுள நக்கலடிப்பதும் , சாமியாருங்கள கிண்டலடிப்பதும் ,, அடடா மனிஷன் கலக்குறாரு..




அடுத்து இந்த படத்துல நீங்க விரும்பி பாக்கும் கேரக்டர் கண்டிப்பா மிதுன்
சக்ரபோர்ட்டி பண்ணி இருக்கும் கேரக்டர்.. சாமியாரா அவரு பண்ற ஒவ்வொரு பாவனையும் , சூப்பர் ஜி சொல்ல வைக்கும் .. வாய் மேல கை வெச்சு பேசுவதாகட்டும் , கடைசில மக்களை என்னிக்குமே கடவுள் பயத்துல இருந்து பிரிக்க முடியாதுன்னு சொல்வது ஆகட்டும் .. உண்மையாவே இவர படத்துல ரசிக்கலாம்.. அடுத்து படத்தோட முக்கியமான கேரக்டர் நம்ம அக்ஷய் குமார்.. அவருடைய ரோல படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ... படத்தோட தயாரிப்பாளரும் நம்ம அக்ஷய் குமார் தாங்க..
                    படத்தோட டைரக்டர் உமேஷ் ஷுக்லா (Umesh Shukla).. மியூசிக் டைரக்டர் மூணு பேரு(குரூப் ) ஹிமேஷ் ரேஷம்மியா (Himesh Reshammiya) , சச்சின் - ஜிகர் (Sachin - Jigar), மீட் பரோஸ் அஞ்சன் (Meet Bros Anjjan).. படத்துல உண்மையாவே background score சூப்பரா இருந்திச்சி அதுக்கு காரணமானவர் அமர் மொஹிலே(Amar Mohile).. படத்தோட ஒளிபதிவாளர் சேது ஸ்ரீராம்(Sethu Sriram).. ஒரு fantasy படத்துல லாஜிக்லாம் பாக்க முடியாத காரணத்துனால நெகடிவ்னு எதும் பாக்க வேணாம்.. படத்த ஜாலியா பாருங்க ரொம்ப ரசிப்பிங்க..
                 
MY RATING  - 3.5/5

பி.கு : படத்துல நம்ம பிரபு தேவாவும் , சோனாக்ஷி சின்ஹவும் ஒரு பாட்டுக்கு கெஸ்ட் ரோல் பண்ணி இருகாங்க..

Malegaon ka Superman (Superman Of Malegaon)


                           இந்த படத்தையும் முடிஞ்சா தவறாம பாருங்க.. ஒரு சின்ன கிராமத்துல இருக்குற ஏழை மக்கள்ள ஒருத்தர் அவங்க ஊர் மக்கள் டைம் பாஸ்காக ஹிந்தி படங்களின் spoof (அதாங்க நம்ம சிவா நடிச்ச தமிழ்படம் மாதிரி)படங்களை எடுத்து கொண்டு இருந்தார்..திடிர்னு நம்ம டைரக்டர்க்கு holywood படத்தோட spoof எடுக்கணும் ஆச வந்துடிச்சி போல.. அப்போ superman படத்த அவங்க ஊர் ஆளுங்கள வெச்சி எடுக்க ஆரம்பிச்சார்.. எடுத்தும் அவங்க ஊர்ல ரிலீஸ் பண்ணிட்டார்..
                           
அந்த படத்தோட documentary தான் நாம பாக்க போற படம்.. அவங்க எப்படி படம் எடுத்தாங்க, அவங்க ஒளிப்பதிவு , அவங்க மியூசிக் .. இதெல்லாம் எப்படி பண்ணாங்கன்னு பாருங்க அசந்து போய்டுவிங்க.. சும்மா எவ்ளோ மொக்க படம் பார்க்கிறோம் (நான் மான் கராத்தேவ சொல்லலைங்க..) அதுக்கு பதிலா சும்மா ஒரு வாட்டி இந்த படத்தையும் பாருங்க.. கண்டிப்பா ரசிப்பிங்க..முடிஞ்சா அளவுக்கு இந்த லிஸ்ட்ல இருக்குற எல்லா படத்தையும் பாக்க ட்ரை பண்ணுங்க..!! ஏன்டா பார்த்தோம்னு கண்டிப்பா பீல் பண்ண மாட்டிங்க (நான் guarantee)

                    இந்த படத்தை பாக்கணும்னு நினைக்கிறவங்க ... கீழ இருக்குற வீடியோவ பாருங்க.. இங்கிலீஷ் சப்டைட்டிலும் இருக்கு..


MY RATING - இந்த படத்துக்கு ratingலாம் வேணாம்.. சும்மா ஜாலியா பாருங்க..

NORTH 24 KAATHAM ( NORTH 24 MILES )..!! ( 2013 )

                            சரி முதல்ல எந்த படத்த பத்தி எழுதலாம் ... தமிழ் படத்த பத்தி எழுதலாம்னா , ஏற்கனவே நம்ம ஆளுங்க அலசி ஆராயஞ்சிடுறாங்க.. இப்பலாம் நம்ம ஆளுங்க சம ஸ்பீடா இருக்காங்க.. ஹாலிவுட் கோலிவுட் டோலிவுட் கொரியன் எந்த படத்தையும் விட்டு வைக்கிறது இல்ல .. அதுனால நா எத பத்தி எழுதுறதுன்னு யோசிக்கும் போது .. சரி கடைசியா பாத்த படத்த பத்தியே எழுதலாம்னு ஒரு முடிவுக்கு வந்தேன் .
                            Facebook -ல சினிமாவ அலசி ஆராய்ஞ்சி சொல்ற எனக்கு மிகவும் பிடிச்ச குரூப் ஆன THIRST FOR CINEMA-ல இருக்குற ஒரு நண்பர் என்கிட்ட இந்த படத்த பார்க்க சொன்னார்.. அந்த படம் NORTH 24 KAATHAM .

 
                         படத்த பாக்கலாம்னு முடிவு பண்ணின நேரம்... அந்த படத்துக்கு சிறந்த மலையாள படத்துக்கான தேசிய விருது கிடைச்சிடிச்சி.. சமீப காலமா தேசிய விருது மேல அவ்ளோவா நமக்கு நம்பிக்கை இல்லைங்க.. தேசிய விருதுன்னு சொன்ன உடனே படத்த அப்புறம் பார்கலாம்னு விட்டுட்டேன்.. சரி நேத்து இரவு பயங்கர போர் .. முக்கியமான வேலைகளெல்லாம் முடிச்சிட்டு படத்த பாக்க ஆரம்பிச்சேன்..
                             ஹீரோ Fahadh Faasil .. நம்ம ஹீரோ ஒரு சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் (மென்பொருள் அமைப்பு கட்டுமாணர்)..அவருக்கு ஒரு விசித்திரமான நோய்... அதாவது அவரு எல்லாமே சுத்தமா, ஒழுங்கா இருக்கனும்னு நினைப்பார்.. என்னது சுத்தமா , ஒழுங்கா இருக்குறது ஒரு நோயானு நீங்க நினைக்கிறது புரியுது.. நாம ஒன்னுக்கு போறோம் , கை கழுவலாம்னு வாஷ் பேசின் கிட்ட போறோம் தண்ணி வருல .. அட விடுயானு நாம பாட்டுக்கு போய்டுவோம்.. அது நார்மல்.. சில பேர் வெளிய போய் பேப்பர்லையோ துணிலையோ கையை துடச்சிபாங்க அதுவும் நார்மல் தான்.. ஆனா இதுக்காக 20 நிமிஷம் நடந்து போய் தண்ணி பாட்டில் வாங்கி கையை கழிவிட்டு வந்தா அது கொஞ்சம் அப்நார்மல் தானே.. அதுதான் நம்ம ஹீரோ.. அந்த நோய்க்கு பேர் தன் Obsessive–compulsive personality disorder..(மேலும் விபரங்களுக்கு GOOGLE பார்த்து தெரிந்து கொள்ளவும்).. இந்த நோய் பத்தாதுனு நம்ம ஹீரோக்கு ஏரோபோபியா (பறக்கறதுக்கு பயம் ). trivandram-ல நடக்குற ஒரு செமினார்க்கு நம்ம ஹீரோ போய் ஆக வேண்டிய கட்டாயம்.. train-ல போக நம்ம ஹீரோ கிளம்புறார்.. அவரு சீட்ல போய் உட்கறாரு.. train கிளம்புது .. அப்போ எதிர் சீட்ல உட்காந்து இருக்குற பெரியவருக்கு ஒரு கால் வருது ( போன் கால் ).. அதுல தன்னுடைய மனைவி மருத்துவமனையில் சேர்த்து இருப்பதை கேட்டு அதிர்ச்சி ஆகி நெஞ்ச புடிச்சிகிறாரு..அங்க தான் நம்ம ஹீரோயின் (Swati - அதான் பா நம்ம சுப்ரமணியபுரம் ஹீரோயின்) என்ட்ரி... அப்பர் பெர்த்ல இருந்து குதுச்சி நம்ம பெரியவர தாங்கி புடிக்கிறாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல அந்த பெரியவரோட சேர்ந்து இறங்குறாங்க.. இறங்கும் போது செல்போன்-ah மறந்து இறங்கிடுறாங்க..அப்போ நம்ம ஹீரோ அந்த செல்போன்-ah குடுக்கறதுக்காக கீழ இறங்கும் போது train கிளம்பிடிது.. இதுல அந்த ஊர்ல அப்போ strike வேற.. அதுல இருந்து அந்த பெரியவர் வீட்டுக்கு போற வரைக்கும் அவங்க மூணு பேர் சந்திக்கிற விஷயங்கள் தான் மத்த கதை...அவங்க போய் சேரும் போது என்னாச்சு..நம்ம ஹீரோ அவரு நோய்ல இருந்து வெளிய வந்தாரா இல்லையா .. படத்த பார்த்து தெரிஞ்சிகோங்க ..

                            பெரியவர நடிச்சி இருக்குறவரு நம்ம நெடுமுடி வேணு (அதுதாங்க நம்ம இந்தியன் படத்துல சி.பி.ஐ ஆபிசரா வருவாரு , நம்ம அந்நியன்ல கூட அம்பி ஓட அப்பா..) மனுஷன் நடிப்பு பட்டய கிளப்புறாரு.. கிளைமாக்ஸ்ல அவரு அழும் போது கூட சேந்து நானும் அழுதுட்டேன் பா.. அவருக்கும் அவர் மனைவிக்கும் இருக்குற காதல ரொம்ப அழகா சொல்லுவாரு..அவங்க மனைவிய கடைசி வரைக்கும் காமிக்கவே இல்ல, போங்கப்பா ...

                           ஹீரோயின் swati சும்மா சொல்ல கூடாது ரொம்ப அழகா இருக்குறா பா.. தெலங்கு படத்துலயும் சரி மலையாள படத்தலையும் சரி ரொம்ப அழகா இருக்குறாளுங்க.. தமிழ்ல மட்டும் என் சுமாராவே இருக்குறாளுங்கனு தெரில டா சாமி..
                         
நம்ம nazriya இந்த fahadh faasil -ah கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லும் போது.. என்கிட்ட இல்லாதது அப்படி அவன் கிட்ட என்னம்மா இருக்குனு கேக்க தோனுச்சி.. ஆனா அவரு நடிப்ப பாத்த அப்புறம் எங்கு இருந்தாலும் நல்லா இருமா தங்கச்சினு சொல்ற மாதிரி ஆய்டிச்சி.. மனுஷன் எந்த ரோல் குடுத்தாலும் சமயா நடிக்கிறாரு.. ஒரு ஒரு படத்துல ஒரு ஒரு கேரக்டர் .. வேற வேற டைப் ரோல் .. வித்தியாசமான கதை ... கூடிய சீக்கிரம் அவுர தமிழ் படத்துல பார்க்கணும்னு ஆசையோட இருக்கேன்..அதுவும் நம்ம விஜய் சேதுபதி ஓட சேந்து நடிக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு யா..                                    

                       



                            படத்தோட கதைன்னு பாத்த நம்ம அன்பே சிவம் டைப் கதை தான். ஒரு எடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு போறதுக்குள்ள சந்திக்கிற மனிஷங்க, தடைகள் நம்ம வாழ்கைய மாத்திடுமின்ற சிம்பிள் கான்செப்ட் ஆனா அழகா செதுக்கி இருக்காங்க..
                            மியூசிக் (Govind menon,rex vijayan ) படத்தோட ஒன்றி இருந்திச்சி.... ஒளிப்பதிவு (Jayesh Nair ) தான் உண்மையாவே படத்துக்கு உயிரா இருந்திச்சி... படத்தோட டைரக்டர் (anil radhakrishnan menon ) இது தான் முதல் படம்.. முதல் படத்துலையே தேசிய விருது..படத்துல எந்த நெகடிவும் எனக்கு தெரில.. படம் நடுவுல கொஞ்சம் மெதுவா போன மாதிரி இருந்திச்சி.. மத்தபடி படம் பாருங்க கண்டிப்பா உங்க எல்லாருக்கும் ரொம்ப புடிக்கும்..என்ன கேட்டா MUST WATCH FILM .

MY RATING - 4/5

பி.கு : இந்த படத்துல நம்ம கோலிவுட்ல இருந்து ஒரு பெரிய ஸ்டார் guest ரோல் பண்ணி இருக்குறாப்ல.. படம் பாக்கும் போது யாருன்னு உங்களுக்கு தெரியும்.. அவருடைய ரோல் - ah நிஜமாவே நல்லா பண்ணி இருக்குறாரு... எவ்வளவோ பண்ணி இருக்குறாரு இத பண்ண மாட்டாரா..