Latest Movie :

MY FAVOURITE 5 TV SERIES..!!

                 ஹாலிவுட்ல இப்பெல்லாம் படத்துக்கு இருக்குற எதிர்ப்பார்போட டிவி சீரீஸ்க்கு இருக்குற எதிர்ப்பார்ப்பு தான் அதிகமா இருக்கு... நம்ம தமிழ் சீரியல் மாதிரி 1000 எபிசொட்லாம் இல்லைங்க... ஆனா சீசன் சீசனா வெளியுடுவாங்க.. ஒரு சினிமாவ விட அதிகம் செலவு பண்ணி தான் எடுக்குறாங்க...
                அப்படி உங்களுக்கு டிவி சீரீஸ் பாக்கணும்னு ஆச பட்டிங்கனா..எத தேர்ந்து எடுக்கணும்ன்ற பிரச்சன வரும்.. நான் பாத்த வரைக்கும் இருக்குற டிவி சீரீஸ்ல என்னுடைய டாப் 5 டிவி சீரீஸ் பத்தி தான் நான் இங்க எழுத போறேன்...
               என் பா நீ எத்தன டிவி சீரீஸ் பார்த்து இருக்கணு டாப் 5 போட வந்துட்டனு நினைக்கிறிங்களா.. நான் பார்த்த டிவி சீரீஸ் எல்லாத்தையும் போட்டோவா கீழ போட்டு இருக்கேன்.. அத பார்த்து  தெரிஞ்சிகோங்க..



                  இதுல  எனக்கு புடிச்ச 5 டிவி சீரீஸ் பத்தி பார்க்கலாம்..
                  இப்பதிக்கு டாப் 5 சீரீஸ் பத்தி பார்ப்போம்... வருகிற நாட்களில் தனி தனியா அந்த அந்த சீரீஸ் பத்தி நல்ல டீடயிலா பேசலாம்...
                  டாப் 5-ல கடைசியிலிர்ந்து முதலுக்கு போலாம்.. ( டாப் 5 போஸ்ட் போடுற எல்லாருமே அப்படி தான் போடுறாங்க அதுனால தான் )...

5. Dexter

             
                    சீரீஸ் ஓட பேரு தான் நம்ம ஹீரோ பேரு.. நம்ம ஹீரோ மியாமி போலீஸ் டிபார்ட்மென்ட்ல ( MIAMI POLICE ) - தடயவியல் ( Forensic ) டிபார்ட்மென்ட்ல வேல செய்யுற Blood Spatter Analyst ( இதுக்கு தமிழ்ல என்ன பேருன்னு எவ்ளோ தேடியும் கிடைக்கில.).. ஆனா இவரு சின்ன வயசுல இருந்தே கொலைவெறி உள்ளவர் ( அதுக்கு காரணமும் இருக்கு ) ,ஹீரோ ஓட அப்பா இவரு தப்பான வழில போய்ட கூடாதுன்னு , தப்பு செஞ்சிட்டு தப்பிகிரவங்கள எப்படி கொலை செய்யனும்னு சொல்லிக்குடுக்குறாரு.. அதுக்குனு சில கட்டளைகளும் அமைக்கிறாரு.. நம்ம ஹீரோக்கு ஒரு தங்கச்சி அவங்க அதே டிபார்ட்மென்ட்ல டீடெக்ட்டிவ்.. Dexter சட்டத்துல இருந்து தப்பிக்கிற குற்றவாளிய தடயமே இல்லாம கொன்னுட்டு உடல கடல்ல தூக்கி எரிஞ்சிடுவாரு....இப்படி பட்டவோரோட காதல், சந்தோசம்,துக்கம்,குடும்பம் அப்புறம் கொலை வாழ்க்க தான் இந்த சீரீஸ்..ஹீரோவா பண்ணி இருப்பது மைகேல்.C.ஹால் (Michael C. Hall).. யப்பா சீரீஸ் முழுக்க ரத்தம், கொலை , கஜகஜா தான்.. அதுனால 18+ உள்ளவர்கள் மட்டும் பார்த்தால் நல்லது..  மொத்தம் 8 சீசன் .. ஒரு ஒரு சீசன்லையும் 12 எபிசொட்.. ஒரு எபிசொட் ஓடும் நேரம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்.. சீரீஸ் பத்தி விரிவா அப்பால பார்ப்போம்...

4. True Detective 


                 இந்த வருஷத்தோட சிறந்த டிவி சீரீஸ்னு நிறைய பேர் சொன்னாங்க.. உண்மை தான்.. கதையோட ஆரம்பம் என்னதுனா 2012-ல ரெண்டு போலீஸ் டீடெக்ட்டிவ்ஸ் ஒரு கொலை வழக்க விசாருக்கிறாங்க , இதே மாதிரி ஒரு சம்பவம் 1995ல நடந்து இருக்குதுன்னு கேள்வி பட்டு.. அப்போ அந்த கொலை வழக்க விசாரிச்சு, அந்த கொலைக்காரண சுட்டு கொன்ன , அந்த ரெண்டு போலீஸ்காரங்கள கூப்பிட்டு அவங்க வழக்க பத்தி விசாரிக்குறாங்க.. அவங்க தான் நம்ம ரெண்டு ஹீரோஸ்.. ஒருத்தரோட பேரு ஹார்ட் ( Hart ).. இன்னொருத்தரோட பேரு கோஹ்ல் ( Cohle )... 1995-ல ஒரு பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுரா.. அந்த பொண்ணோட கொலைய விசாரிக்கும் போதுதான்..அந்த கொலைகாரன் இதுக்கு முன்னாடி நிறைய பேர கொன்னு இருக்கான்னு அவங்களுக்கு புரியுது..  அவன கண்டுபிடிச்சி சுட்டு கொல்றாங்க.. அவன் அப்பவே செத்து இருந்தானா இப்போ கொல்றது யாரு..?? விடைக்கு சீரீஸ்-ah பாருங்க.. ஹார்ட் ரோல் பண்ணி இருக்குறது  வுடி ஹர்றேல்சொன் ( Woody Harrelson ).. கோஹ்ல் ரோல் பண்ணி இருக்குறது நம்ம டல்லஸ் பய்யேர்ஸ் கிளப் ( Dallas Buyers Club ) ஆஸ்கார் புகழ் Matthew McConaughey.... த்ரில்லிங்கா போற இந்த சீறீச நீங்க மறக்காம பாக்குறது நல்லது.. இப்பத்திக்கு ஒரு சீசன் தான் வந்து இருக்கு.. மொத்தம் 8 எபிசொட்.. ஒரு எபிசொட் ஒரு மணி நேரம்.. மறக்காம பாருங்க வருத்த பட மாட்டிங்க....கூடிய விரைவில் இன்னொரு சீசன் வர போகுது.. ஆனா அதுல இவங்க ரெண்டு பேர் கிடையாது.. வேற ரெண்டு ஹீரோ.... வேற கதை..இத பத்தியும் விரிவா கூடிய சீக்கிரம் பாக்கலாம்..

3.Sherlock 


                உலகத்துலேயே அதிக பேரால ரசிக்க படுற துப்பறியும் புலி... நம்ம Sir Arthun Conan Dyle உருவாக்கிய Sherlock Holmes தான்..  ஷெர்லாக் உருவாக்கும் பொது நம்ம Sir Arthun Conan Dyle கூட இவ்ளோ பெரிய புகழ் அடையும்னு எதிர்பாத்து இருக்க மாட்டாரு.. ஷெர்லாக்கை அவரு உருவாக்கனது 1880களில்.. ஆனா இன்னிக்கு வரைக்கும் ஷெர்லாக்கை மிஞ்சின துப்பறியும் நிபுணர் வரவே இல்லை.. அந்த ஷெர்லாக் இப்போ நம்ம கூட இருந்தா.. அது தான் இந்த ஷெர்லாக் டிவி சீரீஸ் ஓட கதை.. ..கதை நடக்குற களம் , கதை ஓட கேரக்டர் எல்லாமே Sir Arthun Conan Dyle உருவாக்கியது தான்.. கதையும் , கதை நடக்கும் காலமும் மட்டும் தான் மாறி இருக்கு.. Sir Arthun Conan Dyle உருவாக்கிய கதைல இந்த காலத்துக்கு ஏத்த மாதிரி மிக அழகா இந்த சீரீஸ்-ah உருவாக்கி இருக்காங்க.. சீரீஸ் நிஜமாவே சம ஸ்பீடா போகும்.. ரொம்ப ரசிச்சி பார்பிங்க.. ஷெர்லாக்கா நடிச்சி இருப்பது பெனெடிக்ட் கும்பர்பேட்ச் ( Benedict Cumberbatch ).. யப்பா என்ன நடிப்பு , அவரோட body language , mannerism .. ஷெர்லாக் உண்மையாவே இருந்து இருந்தா இப்படி தான் இருந்து இருப்பாருன்னு நினைக்கிற அளவுக்கு மனிஷன் பிண்றாரு..  வாட்செனா நடிச்சி இருப்பது  மார்டின் ப்ரீமேன் (  Martin Freeman ).. இவரும் பெனெடிக்ட் அளவுக்கு நடிக்கிறாரு.. நீங்க ஷெர்லாக் ஓட பெரிய ரசிகரா இருந்தா இது உங்களுக்கு ஒரு சரியான விருந்து... ஒரு வேல நீங்க இதுவரைக்கும் ஷெர்லாக் பத்தி படிச்சதோ கேள்விப்பட்டதோ இல்லைனா இது உங்களுக்கு பெரிய விருந்து.. இப்பதிக்கு மொத்தம் 3 சீசன் வந்து இருக்கு.. ஒரு சீசன்க்கு 3 எபிசொட்... ஒரு எபிசொட் ஒன்றை மணி நேரம்... 4 சீசன் வரத்துக்கு லேட் ஆகும்னு கேள்வி பட்டேன்... சீரீஸ் ஓட முக்கிய வில்லனான ஜேம்ஸ் மொரியார்ட்டி ( Jim Moriarty ) மறுபடியும் இந்த 4th சீசன்ல வர இருப்பதுனால.. இப்பவே இதுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகம்..  இந்த சீரீஸ் பத்தியும் கூடிய விரைவில் விரிவா பாக்கலாம்..

2.Breaking Bad 


                    நம்ம தலைவர் சொன்ன மாதிரி "சாக போற நாள் தெரிஞ்சிட்டா வாழுற நாள் நரகமாய்டும்.."
ஒரு வேல அப்படி சாகப்போறவனுக்கு ஒரு குடும்பம் இருந்தா..அதுவும் கடனோட ஒரு மிடில்-கிளாஸ் குடும்பம் இருந்தா...அவன் சாகறதுக்குள்ள அவன் குடும்பத்துக்கு எப்படியாது பணம் சம்பாதிக்கணும்னு நினைப்பான்.. அது வரைக்கும் அவன் ரூல்ஸ் ராமானுஜமா இருந்தாலும் சரி , அதுக்கு அப்புறம் எவ்ளோ கெட்ட வழியா இருந்தாலும் சரின்னு பணம் சம்பாதிக்க இறங்கிடுவன்... ஏன் கொலைக்கூட பண்ண தயார் ஆயிடுவான்.. அது தான் நம்ம ப்ரேகிங் பேட் ( Breaking Bad ).. நம்ம ஹீரோ வால்ட்டர் வைட் ( Walter White ) ஒரு சாதாரண மிடில் கிளாஸ் கெமிஸ்ட்ரி வாத்தியார்.. அவருக்கு ஒரு கர்ப்பமான மனைவி , ஒரு பையன் , பொண்டாட்டியோட தங்கச்சி , அவளோட போதை ஒழிப்புத்துறை போலீஸ் புருஷன் , இவங்கலாம் தான் அவரோட குடும்பம்... திடிரென ஒருநாள் ஹீரோக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவருது.. கூடிய சீக்கிரம் இறந்திடுவாருனு டாக்டர் சொல்லுறாரு.. சாக போறார்னு தெரிய வரும் போது.. அவரு குடும்பத்துக்கு இருக்குற கடனலாம் யோசிச்சி பாக்குறாரு.. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி தான் அவருடைய மச்சான் methamphetamine-ன்னு ஒரு போதைப்பொருள் தயாரிச்சவங்கள புடிக்கிறாரு... அப்போ அதுல நிறைய பணம் கிடைக்குறத நம்ம ஹீரோ பார்க்குறாரு.. அவருடைய பழைய மாணவன் ஒருவன் போதைபொருள் தயாரிக்கிறவன் என்பத தெரிஞ்சிக்கிராறு.. அப்போ அவன் கிட்ட போய் அவனோட சேர்ந்து methamphetamine போதைப்பொருள் தயாரிக்க ஆரம்பிக்கிறாரு... அதுக்கு அப்புறம் அவருடைய வாழ்கைல நடக்குற மாற்றங்கள் , பிரச்சனைகள் தான் மீதி கதை.. இந்த கதையோட ஒரு வரி கதையே எனக்கு ரொம்ப புடிச்சி இருந்திச்சி... அதவிட முழு சீரீஸ் பாக்கும் போது இன்னும் நல்லா இருக்கும்... கதைல ஏகப்பட்ட திருப்பங்கள் , ஏகப்பட்ட கேரக்டர்கல் இருக்கும் .. எல்லாமே சூப்பரா இருக்கும்... சீரீஸ் பார்த்து முடிக்கும் போது.. ஏன்டா முடிஞ்சிச்சினு இருக்கும்.. முடிவும் கதையோட ஒன்றி இருக்கும்.. பார்க்கும் எல்லாருக்குமே கண்டிப்பா இந்த சீரீஸ் புடிக்கும்.. சீரீஸ் ஓட ஹீரோ வால்ட்டர் வைட் ( Walter White ) ரோல் பண்ணி இருப்பது பரயன் கிரான்ஸ்டன் ( Bryan Cranston ).. சீரீஸ் ஓட அடுத்த முக்கியமான கேரக்டர் ஜெஸ்ஸி பிங்க்மேன் ( Jesse Pinkman ) ரோல் பண்ணி இருப்பது ஆரோன் பால் ( Aaron Paul ).. ரெண்டு பெரும் சும்மா கிழி கிழின்னு கிழிச்சி இருப்பாங்க அவங்க அவங்க ரோல.. அதுவும் ஹீரோ அந்த மொட்ட getup-ல வரும் சீன் தெறி மாஸ்-ah இருக்கும்...சீரீஸ்ல மொத்தம் 5 சீசன்.. 1 சீசன்ல 7 எபிசொட் 2 , 3, 4 சீசன்ல மொத்தம் 13 எபிசொட்...கடைசியான  5 சீசன்ல 15 எபிசொட்.. ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம்.. ஒவ்வொரு எபிசோடும் பயங்கர விறுவிறுப்பா போகும்.. பாக்க தவறி இருந்திங்கனா மறக்காம பாருங்க..
                    

1.Game Of Thrones 


                  7 ராஜ்ஜியத்த கொண்ட ஒரு நாட்டோட கதை தான் இந்த சீரீஸ்... அந்த நாட்டோட  ராஜா இறக்கும் போது.. அதுல நிறைய பிரச்சனை வருகிறது.. அந்த பிரச்சனைனால இருக்குற எல்லா ராஜ்ஜியமும் நாட்ட ஆளனும்னு கிளம்புறாங்க.. அது தான் இந்த சீரீஸ் ஓட கதை.. பாக்குற எல்லாருக்குமே கண்டிப்பா இந்த டிவி சீரீஸ் தான் முதல புடிக்கும்.. அந்த அளவுக்கு இந்த டிவி சீரீஸ் எல்லாரையும் கவர்ந்திடும்... கதைல ஏகப்பட்ட கேரக்டர் , ஏகப்பட்ட திருப்பங்கள் , ஒரு ஒருத்தங்களுக்கும் தனி தனி கதை... கதையில எல்லாருமே வெறுக்குற கேரக்டர் King Joffrey-ah  தான் இருக்கும்... கதையில எல்லாருக்குமே புடிச்ச கேரக்டர் Tyrion Lannister-ah தான் இருக்கும்..யப்பா ஒரு படத்துக்கு ஆகுற செலவ விட இந்த சீரீஸ்க்கு அதிகமா ஆகும் போல இருக்கு.. சீரீஸ்-ah கண்டிப்பா 18+ இருக்குறவங்க மட்டும் தான் கண்டிப்பா பாக்கணும்.. Violence & Nudity இந்த சீரீஸ்ல கொஞ்சம் அதிகமா இருக்கும்... ஆனா அதோட கதையோட விறுவிறுப்பு இன்னும் அதிகமா இருக்கும்.. கொஞ்சம் மெதுவா போற மாதிரி இருக்கும் , ஆனா முடிவுல பயங்கர சூப்பரா இருக்கும்.. இப்பதிக்கு 3 சீசன் முடிஞ்சி இருக்கு.. ஒவ்வொரு சீசன்க்கும் 10 எபிசோடு.. ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம்... இந்த சீரீஸ்லையே எனக்கு புடிச்ச கேரக்டர் Tyrion Lannister , அந்த ரோல் பண்ணி இருப்பது பீட்டர் டின்க்லாஜ் ( Peter Dinklage ).. என்னா நடிப்பு.. சீரீஸ்ல அவரு பேசற ஒவ்வொரு வசனமும் தீயா இருக்கும்... Game Of Thrones நான் விரும்பி பாக்குறதே இவரால தான்... வாழ்ந்த Tyrion மாதிரி வாழனும் பா ( பார்த்தவங்களுக்கு புரியும் , பார்க்காதவங்க பார்த்து தெரிஞ்சிகோங்க ).. இப்ப 4 சீசன் ஓடிட்டு இருக்கு.. இப்ப வரைக்கும் நல்லா அருமையா தான் போய்ட்டு இருக்கு.. ஆனா ஒரு சீரீஸ் ஓட வெற்றியோ தோல்வியோ அது ஓட முடிவுல தான் இருக்கு.. ஆனா GOTக்கு இப்பதிக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஏன்னா எப்படியும் GOT முடியறதுக்கு இன்னும் சில வருஷங்கள் ஆகும்.. அது வரைக்கும் என்ன பொறுத்த வரைக்கும் அது தான் முதல் இடத்துல இருக்கும்..


     
பி.கு : இத தவிர நீங்க வேற எதுனா டிவி சீரீஸ் பார்க்கணும்னு ஆச பட்டிங்கனா... Prison Break அப்புறம் The Walking Dead ரொம்ப நல்லா இருக்கும்... அதுவும் Prison Break ஓட சீசன் 1 ரொம்ப அற்புதமா இருக்கும்... தவறாம பாருங்க... The Walking Dead சீரீஸ்-உம் ரொம்ப நல்லா இருக்கும்.. இப்ப சீசன் 4 கொஞ்சம் மெதுவா போகுது.. மத்தப்படி சீரீஸ் ரொம்ப நல்லா இருக்கும்.. 
        
Share this article :

+ comments + 1 comments

16 August 2014 at 00:46

இந்த அஞ்சு சீரிசுமே எனக்கும் ரொம்ப புடிச்ச சீரிஸ்கள்.. :) நல்லா தொகுத்துருக்கீங்க.. சூப்பர்..!!

Post a Comment