Latest Movie :

FORREST GUMP..!! ( 1997 )

                  நம்ம எல்லாருக்குமே எதாவது சில படங்கள் ரொம்ப புடிக்கும்.. அந்த படங்கள திரும்ப திரும்ப பார்ப்போம் , நம்ம friends எல்லாரையுமே பாக்க சொல்வோம் , அந்த படங்கள்ல இருக்குற எல்லா வசனத்தையும் மனப்பாடமா சொல்வோம் , அந்த படங்கள பத்தி நிறைய விஷயங்கள் தெரிஞ்சி வெச்சிப்போம்... ஆனா அதுல எதாவது ஒரு படம் உங்க மனசுக்கு ரொம்ப புடிச்சதா இருக்கும்.. ஏன் அதுக்கு காரணம் கூட இல்லாம இருக்கலாம்.. ஆனா அந்த படம் உங்களுக்கு ரொம்ப புடிச்சி இருக்கும்.. எனக்கு அப்படி ரொம்ப புடிச்ச படம் FORREST GUMP...


                  கதை ஆரம்பிக்கிற காலம் 1981 , நம்ம ஹீரோ forrest gump ஒரு பஸ் ஸ்டாப்ல பஸ்க்காக காத்திட்டு இருக்கும் போது.. பக்கத்துல உக்காந்திட்டு இருக்குறவங்க கிட்ட அவர பத்தி சொல்ல ஆரம்பிக்கிறாரு.. நம்ம Forrest ஒரு மனவளர்ச்சி குன்றியவர்.. சின்ன வயசுல நம்ம Forrest முடம் வேற.. அவருனால எந்த பொருள் துணையின்றி  நடக்க முடியாது.. அதுனால கால்ல braces கட்டி தான் நடக்கணும்.. அவருக்கு ஜென்னினு ( ஜெஸ்ஸி இல்ல..) ஒரு நண்பி.. ( அதாங்க பொண்ணு friend ).. அவரு முடம்னால சின்ன வயசுல , பக்கத்துல இருக்குற பெரிய பசங்க அவர அடிக்கடி கிண்டல் பண்ணி துரத்துவாங்க.. ஒரு நாள் அப்படி துரத்தும் போது நம்ம ஜென்னி " run forrest run" கத்துறாங்க.. அப்ப ஓட ஆரம்பிப்பாருங்க நம்ம ஹீரோ.. bracesலாம் ஒடஞ்சி விழும்... சும்மா மின்னல் வேகத்துல ஓடுவாரு.. இந்த ஓடுற திறமைனால அவருக்கு scholarship கிடைச்சி காலேஜ் முடிச்சிடுறாரு.. ( ஆமாங்க நீங்க நினைக்கறது கரெக்ட் தான் அவர் மனவளர்ச்சி குன்றியவர் தான்.. படிப்புலாம் அவருக்கு வராது..)இந்த ஓடுற திறமைனால அவருக்கு அவங்க national football team-ல விளையாடுற வாய்ப்பு கிடைக்குது.. ( நம்ம Rugbyனு சொல்றதுதான் அவங்களுக்கு Football.. நம்ம Footballனு சொல்றத அவங்க Soccerனு சொல்லுவாங்க..) national team-ல விளையாடுரதுனால அவங்க நாட்டோட President-ah சந்திகிறாரு.. அதுக்கு அப்புறம் நம்ம Forrest அவங்க நாட்டோட Army-ல சேருறாரு... Vietnam-ல அவருக்கு போஸ்டிங் குடுக்குறாங்க..அங்க அவருக்கு ஒரு நண்பன் கிடைக்கிறான் அவன் பேரு Bubba .. ஒரு நாள் ரோந்து போகும் போது.. எதிரிங்க திடிர்னு தாக்க ஆரம்பிச்சிடுறாங்க.. அப்போ forrest ஓட ட்ரூப்ல இருக்குறவங்களுக்கு அடிப்படுது.. நம்ம forrest தான் எல்லாரையுமே காப்பதறாரு... அப்போ அவருடைய friend bubba இறந்திடுறாரு.. அவருடைய ட்ரூப் தலைவர் Lt.Dan காலுல அடிப்பட்டதுனால ரெண்டு காலையும் எழந்திடுராரு...4 பேர காப்பதுனதுக்காக Forrestக்கு மறுபடியும் President கிட்ட இருந்து  விருது கிடைக்குது.. மறுபடியும் அவருடைய வாழ்க்கைல ஜென்னிய சந்திக்கிறாரு.. ஆனா ஜென்னி வேற ஒருத்தன காதலிக்குறாங்க..அவனோட கிளம்பி போய்டுறா..Army-ல இருந்து வந்த அப்புறம் நம்ம Forrest , Ping-Pong விளையாட ஆரம்பிக்கிறாரு.. ரொம்ப நல்லா விளையாட ஆரம்பிக்கிறாரு.... மறுபடியும் அவங்க நாட்டுக்காக விளையாட ஆரம்பிக்கிறாரு.. மறுபடியும் விருதுக்காக President -ah சந்திக்கிராறு...அதுக்கு அப்புறம் army-ல இருந்து retire ஆகி ... ஒரு மீன் பிடிக்கும் படகு வாங்கி நம்ம Lt.Dan ஓட இறால் பிடிக்க கிளம்புராறு... இறால் புடிக்க அவங்க போற நேரம் அவங்க வலைல எதுமே சிக்க மாட்டேங்கிது.. இவங்க கடல்ல இருக்கும் போது பயங்கரமான புயல் தாக்குனதுனால.. கரைல இருக்குற எல்லா படகும் ஒடஞ்சிடிது... இவங்க படகு மட்டும் தப்பிகிது... போட்டியே இல்லாத காரணத்துனால இவங்க வலைல எக்கச்சக்க இறால் மாட்டுது...அதனால Bubba-Gump Shrimp Companyனு ஒன்னு ஆரம்பிக்கிறாரு... எக்கச்சக்க பணம் வருது... நடுவுல திரும்ப ஜென்னிய சந்திக்கிராறு.. சுகமான இரவு கழிஞ்ச பிறகு ( :P ) காலைல எந்திரிச்சி பாத்தா மறுபடியும் ஜென்னி கிளம்பிடுறா.. அத யோசிச்சிட்டே இருக்கும் போது திடிர்னு எந்திரிச்சி ஓட ஆரம்பிக்கிறாரு..தொடர்ந்து 3 வருஷம் ஓடுறாரு.. நாடு முழுக்க Forrest ஓட புகழ் பரவுது... அவரு பின்னாடி ஒரு கூட்டமே ஓட ஆரம்பிக்குது.. 3 வருஷம் கழிச்சி திடிர்னு ஓடுறத நிறுத்தி வீட்டுக்கு நடக்க ஆரம்பிக்கிறாரு.. கொஞ்ச நாள் கழிச்சி அவருக்கு ஜென்னி கிட்ட இருந்து அவருக்கு ஒரு கடிதம் வருது.. அந்த கடிதத்துல Forrest-ah வீட்டுக்கு வர சொல்லி , ஜென்னி சொல்லுறாங்க.. அங்க ஓட flashback முடியுது.. ஜென்னி ஓட வீட்டுக்கு போறதுக்காக தான் Forrest பஸ் ஸ்டாப்ல உக்காந்திட்டு இருக்காரு... Forrest போய் ஜென்னிய சந்திச்சாரா இல்லையா..? அதுக்கு அப்புறம் அவங்க சந்தோஷமா வாழ்ந்தாங்களா இல்லையா ..?? அத நீங்க படத்த பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

             
                   சில படங்கள் தான் பார்த்து முடிக்கும் போது... அந்த படத்துல நாமளும் கூட சேர்ந்து வாழ்ந்த மாதிரி ஒரு feel குடுக்கும்.. இந்த படம் எனக்கு அப்படி ஒரு feel குடுத்திச்சி.. ஒரு படம் முழுக்க Positive vibration இருக்குற படம்...

                Forrest Gump ரோல் நடிச்சி இருக்குறது நம்ம Tom Hanks ( Captain Philips ஹீரோ.. அந்த படத்தோட review படிக்கணும்னா CLICK HERE..) சத்தியமா இவரோட நடிப்ப பத்தி நான் சொல்லணும்னு இல்ல.. அவ்ளோ அற்புதமான நடிகர்.. எந்த ரோல் குடுத்தாலும் அவர தவிர வேற யாருனாலையும் அந்த ரோல அவ்ளோ கச்சிதமா பண்ண முடியாதுன்னு சொல்லுற அளவுக்கு நடிக்குறவர்..  ரெண்டு தடவ சிறந்த நடிகருக்கான Oscar Award வாங்கினவர்.. Forrest Gump படத்துக்காக சிறந்த நடிகருக்கான Oscar Award வாங்குனார்.. ( இன்னொன்று Philadelphia படத்துக்கான சிறந்த நடிகருக்காக வாங்குனார்..) Tom Hanks பத்தி கூடிய விரைவில் நாம விரிவா பார்க்கலாம்...

                Forrest Gump ஓட டைரக்டர் ராபர்ட் செமேக்கிஸ் ( Robert Zemeckis )...அதாங்க Back To The Future Trilogy ஓட டைரக்டர் ( இந்த படத்த Vijay TV-ல அடிக்கடி போடுவாங்க..)

                இந்த படம் ஒரு novel-ஐ தழுவி எடுக்கப்பட்டது.. அந்த Novel ஓட பேரும் Forrest Gump தான்.. அதை எழுதியவர் வின்ஸ்டன் க்ரூம் ( Winston Groom ).. இந்த novel-ஐ படிக்க விரும்பினால் CLICK HERE ...

             











               
                 படத்துல உண்மையான விஷயங்கள , கதைக்கு ஏத்த மாதிரி மாத்தி இருக்குறது ரொம்ப நல்லா இருக்கும்.. உதாரணத்துக்கு , Elvis Presley ஓட பிரபலமான நடனத்துக்கு காரணம் சின்ன வயசு Forrest Gump தான்னு காமிக்கிறது ரொம்ப சூப்பரா இருந்திச்சி.. அது மாதிரி படத்துல சின்ன சின்ன ரசிக்கிற விஷயங்கள் நிறைய இருக்கு..
                 இந்த படத்த நீங்க பாக்க தவறி இருந்திங்கனா , முதல் வேலையா மத்த எல்லா படத்தையும் மூட்டைக்கட்டி வெச்சிட்டு இந்த படத்த முதல பாருங்க... படம் பாத்து முடிக்கும் போது.. உடம்பு full-ah ஒரு positive energy பாஞ்ச மாதிரி இருக்கும்.. படத்தோட கடைசி சீன்ல கண்டிப்பா நீங்க அழுவீங்க..
                 ஒரு மனம் வளர்ச்சி குன்றிய ஒருத்தரோட கதைய , எப்பவுமே நாம சோக கதையா இல்லனா படத்துல அழ வைக்கறதுக்கான கேரக்டர்-ah தான் பார்த்து இருக்கோம்.. ஆனா முதல் முறைய அப்படி பட்டவரோட Positive வாழ்க்கை தான் இந்த கதை...அதனால படத்த தவறாம பாருங்க...

MY RATING - 4.5/5

பி.கு : இந்த படத்த நீங்க பார்த்த அப்புறம் கண்டிப்பா Tom Hanks ஓட ரசிகரா ஆகிடுவிங்க.. அப்ப அவரோட வேற படங்கள பாக்கணும்னு தோணும்.. அப்போ Philadelphia , You've got a mail , The Terminal , The Green Mile அப்புறம் Cast Away .. இந்த படங்கள்லாம் ரொம்ப நல்லா இருக்கும்..
Share this article :

Post a Comment