Latest Movie :

CITY OF GOD..!! ( 2002 )

                    நம்ம ஊர்ல "கடவுளோட சொந்த நாடுன்னு ( God s Own Country )" கேரளாவ சொல்லுவாங்க.. அதே மாதிரி "கடவுளின் நகரம்னு ( City Of God )" பிரேசில்ல இருக்குற ரியோ டி ஜெனிரோவ சொல்லுவாங்க.. கேரளாவ அப்படி சொல்றதுக்கான காரணம் , அங்க இருக்குற செழுமையான இயற்கை வளம்..  ஆனா ரியோவ சொல்றதுக்கும் அதுதான் காரணம்னு நினைச்சிங்கனா.. சத்தியமா கிடையாது.. அந்த ஊர்ல இருக்குற "மீட்பளிக்கும் கிறிஸ்து ( Christ The Redeemer ) சிலை அந்த ஊர்ல இருக்குறதுனால தான் ரியோக்கு அந்த பேரு..  இந்த சிலை 2007 வரைக்கும் 7 அதிசயங்களுள் ஒன்றா இருந்திச்சி..
                  எதுக்கு இப்ப நான் ஹிஸ்ட்ரி கிளாஸ் எடுக்கறேன்னு நினைக்கிறிங்களா.. ஒரு ஒரு படத்துக்கும் முன்னரை குடுக்கணும்.. இந்த படத்துக்கு என்ன முன்னரை தரர்துன்னு யோசிச்சேன்.. அட படத்தோட தலைப்ப பத்தியே பேசலாம்னு தோனுச்சி அதான்.. So , நாம இன்னிக்கி பாக்க போற படம் CITY OF GOD ..!!


                  இந்த City Of God ஒரு பிரேசில்லியன் ( Brazillian ) படம்... க்ரைம் டிராமா ( Crime Drama ) Genre வகைய சார்ந்தது.. இந்த படம் நடக்குறது ரியோல இருக்குற குப்பத்துல.. அத அவங்க ஊர்ல Favelaனு சொல்லுவாங்க..அந்த குப்பத்தோட பேரு Cidade de Deus ( City Of God )... இந்த ஊர பத்தி சொல்லணும்னா.. நம்ம அயன் படத்துல ஜகன் சொல்லுவாரு " என்னடா foreign foreignனு சொன்ன.. ஊரே urine போன மாறி இருக்குனு".. அந்த வகையறாவ சேர்ந்தது இந்த ஊரு..

                 படத்தோட ஆரம்பத்துல வெட்டுறதுக்காக தயாரா இருக்குற ஒரு கோழி... தப்பிச்சி ஓடுது... அத தொரத்திட்டு ஒரு கும்பல் ஓடுது.. அதுல ஒருத்தன் கோழிய புடிக்கிரவங்களுக்கு நான் பணம் தரேன்னு வேற சொல்லுறான்..அந்த கோழி ஓடி போய் இன்னொருத்தனுக்கு முன்னாடி நிக்குது..இப்ப துரத்திட்டு வந்த கும்பல் ஒரு பக்கம்.. அந்த இன்னொருத்தன் இன்னொரு பக்கம்.. அந்த இன்னொருத்தன் தான் நம்ம ஹீரோ Rocket...


                      இப்ப நம்ம Rocket சொல்ற மாதிரி Flashback ஆரம்பிக்குது.. 1960'ல "இளமையான மூவர்னு ( Tender Trio )" கூப்புடுற 3 இளைஞர்கள் இருக்காங்க.. அவங்க பேர் Shaggy ,Goose மற்றும் Clipper... பணத்துக்காக கொல்லையடிக்கிரவங்க..

             


                      அதுல Shaggyக்கு ஒரு தம்பி அவன் பேரு Benny.. அப்புறம் Gooseக்கு ஒரு தம்பி அவன் தான் நம்ம ஹீரோ Rocket... இந்த Tender Trio ஓட எப்பவுமே Lil'Ze ஒரு சின்ன பையன் எப்பவுமே இருப்பான்... ஒரு நாள் இந்த 4 பேரும் ஒரு lodge-ah ( புரியும்னு நினைக்கிறேன் ) கொள்ளையடிக்க போகும் போது.. Lil'Ze-ய மட்டும் வெளிய காவலுக்கு வெச்சிட்டு போறாங்க...  உள்ள போய் கொள்ளையடிக்கும் போது Lil'Ze குடுக்குற அபாய அறிகுறி கேட்டு.. அவசர அவசரமா ஓடுறாங்க.. அடுத்து சின்ன பையன் Lil'Ze உள்ள போய் எல்லாரையும் சுட்டு கொன்னுடுறான்.. இந்த படுகொலைக்கு காரணமானவங்கள போலீஸ் தேடிட்டு இருக்கும் போது.. Shaggy அவன் காதலியோட தப்பிக்கும் போது போலீஸால சுட்டு கொல்லப்படுரான்...Clipper திருந்தி ஒரு ஆன்மீகவாதியா ஆகிடுறான்.. Goose-ah Lil'Ze கொன்னுடுறான்..1980'ல இருந்து நம்ம Lil'Ze ஓட ஆட்டம் ஆரம்பிக்குது.. இவனுக்கு ஒரு பெஸ்ட் ப்ரெண்ட்.. அவன் பேரு benny.. இதுக்கு நடுவுல நம்ம ஹீரோ பத்தி பாப்போம்...Rocketக்கு நல்லா போட்டோ எடுக்குற திறமை இருக்கு.. அவனுக்கு ஒரு காதலியும் கிடைக்கிறா.. அவ பேரு Angelica.. அவளுக்கு அடிக்கடி cocaine வாங்கி தருவது தான் அவன் வேல...

இப்ப மறுபடியும் Lil'Ze ஓட கதைக்கு வருவோம்.. Lil'Ze இப்போ ஒரு cocaine dealer...அவனுக்குன்னு ஒரு கூட்டம் , அவனுக்குன்னு ஒரு சங்கம்... ( எப்படி தலைவன் ஆனான்னு ஒரு கதை இருக்கு..) இவனோட எதிரி dealer பேரு Carrot ( அட பேரு தான் பா..) ஆனா Carrot , Bennyக்கு நல்லா ப்ரெண்ட்..ஒரு நாள் Benny அவன் நடை உட பாவனைலாம் மாத்திட்டு வந்து நிக்கிறான்..

                      நிறைய பேரோட பழக ஆரம்பிக்குறான்.. அப்போ Rocket ஓட காதலி Angelica , Benny-ah லவ் ஆரம்பிக்குறா... ரெண்டு பேரும் லவ்வோ லவ்வுன்னு லவ் பண்றாங்க... Angelica , பென்னி கிட்ட எல்லாத்தையும் விட்டுட்டு வேற எங்கயாது போலாம்னு சொல்றா.. Bennyயும் சரின்னு சொல்லுறான்.. கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் ஒரு பெரிய பார்ட்டி குடுக்குறான்.. அப்போ Rocketக்கு ஒரு கேமராவ  பரிசா குடுக்குறான்.. கொஞ்ச நேரத்துல பார்ட்டில திடிர்னு ஒரு துப்பாக்கி சத்தம்.. என்னனு பார்த்தா ,Benny-ய யாரோ சுட்டு கொன்னுடுறாங்க.. Benny இறந்திடுறான்.. சுட்டது Carrot ஓட ஆளு.. இத கேள்வி பட்டதும் Carrot கோவத்துல சுட்டவன கொன்னுடுராறு.. Lil'Ze ஒரு நாள் ரோட்ல நடந்து போற Knockout Nedயும் அவன் காதலியையும் நிறுத்தி.. அவன் கண்ணு முன்னாடியே அவன் காதலிய கற்பழிக்கிறான்.. அதுக்கு அப்புறம் Knockout Ned ஓட முழு குடும்பத்தையும் கொன்னுடுறான்..இந்த வெறில Knockout Ned ,Carrot ஓட கூட்டத்தோட போய் சேருறான்..ரெண்டு கூட்டத்துக்கும் நடுவுல சண்டை போய்டே இருக்கு.. கொஞ்ச நாள் கழிச்சி ,Lil'Ze ,அவனையும் அவனோட கூட்டத்தையும் போட்டோ எடுக்க Rocket கிட்ட சொல்றான்.. அந்த போட்டோஸ்னால Rocketக்கு நிருபர் வேலை கிடைக்குது.. அந்த போட்டோஸ்லாம் நியூஸ்பேப்பர்ல வருது.. இதுனால Rocket பயந்திடுரான்... எங்க Lil'Ze அவன கொன்னுடுவான்னு ,அதனால பயந்து வாழுறான்... இதோட Flashback முடியுது.. இப்ப படத்தோட ஆரம்பத்துக்கு வந்துட்டோம்.. இந்த பக்கம் Lil'Ze ஓட கும்பல் ,இந்த பக்கம் Rocket ,நடுவுல அந்த கோழி... Lil'Ze இப்ப கோழிய மறந்திட்டு Rocket-ah போட்டோ எடுக்க சொல்றான்.. அதுக்குள்ள போலீஸ் வந்திடுது.. போலீஸ்லாம் சுட தயாராகும் போது... Carrot ,Knockout Ned மற்றும் அவனோட கூட்டாளிக வந்திடுறாங்க.. அவங்கள பார்த்த உடனே போலீஸ்லாம் கிளம்பி போய்டுறாங்க.. இப்போ Lil'Ze ஓட கும்பல் ஒரு பக்கம் ,Carrot ஓட கும்பல் ஒரு பக்கம் ,நடுவுல நம்ம Rocket.. இதுக்கு அப்புறம் என்ன ஆகி இருக்கும்னு படத்த பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

                 
                      இந்த படம் 1997-ல Paulo Lins எழுதிய City Of Godன்னு ஒரு நாவல்ல இருந்து தழுவி எடுக்கப்பட்டது...
                 









                     படத்தோட டைரக்டர் Fernando Meirelles.. படத்துல எல்லாருமே புதுமுகமா இருக்கணும்னு டைரக்டர் ரொம்ப திட்டவட்டமா இருந்தாராம்..ஆனா படத்துல Carrot-ah நடிச்ச Matheus Nachtergaele மட்டும்.. இந்த படம் நடிக்கும் போதே.. வேற படத்துல நடிச்சி.. அது ரிலீஸ் ஆகி.. ரொம்ப famous ஆகிட்டார்.. இதனால நம்ம டைரக்டர் ரொம்ப வருத்தப்பட்டாராம்.. அப்புறம் நம்ம Matheus ,டைரக்டர் கிட்ட மன்னிப்பு கேட்டு , நான் படத்துல இனிமே Carrot-ahவே மாறிடுறேன்னு சத்தியம் பண்ணாராம்...அது வரைக்கும் வேற படத்துல நடிக்க மாட்டேன்னும் சத்தியம் பண்ணாராம்.. இந்த படம் உலகம் முழுக்க பரவலா பேசப்படுற படம்.. இந்த படத்தோட tagline என்னனா "If you run, the buck catches; if you stay, the buck eats".. படத்துக்கு இது சரியான tagline , அத இந்த படம் பார்க்கும் போது உணருவிங்க..
                     படத்துல கிளைமாக்ஸ் சீன் எனக்கு ரொம்ப புடிக்கும்.. ரொம்ப நல்லா இருக்கும்.. இந்த படம் உண்மையையும் , கொஞ்சம் கற்பனையையும் சேர்ந்து உருவாக்கப்பட்ட கதை ( படம் ).. படத்தோட Visuals ( ஒளிப்பதிவு ) அழகா இருக்கும்.. அந்த அழுக்கு ஊர கூட ரொம்ப அழகா காமிச்சி இருப்பாங்க.. படத்துல ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப நல்லா இருக்கும்..

                       அதுவும் இந்த Lil'Zeயா நடிச்சி இருக்குறவன்.. ரொம்ப நல்லா நடிச்சி இருப்பான்.. அவன் குழந்த வயது கேரக்டர் பண்ணவனும் சமயா பண்ணி இருப்பான்..
                     
                         அது மாதிரி படத்துல சின்ன சின்ன விஷயங்கள் கூட ரொம்ப நல்லா இருக்கும்.. ஆரம்பத்துல கோழிய வெட்டுற சீன் ஒன்னு இருக்கும்.. சின்ன சின்ன detail-ah அத காமிச்சி இருப்பாங்க.. சூப்பரா இருக்கும்..
                      ஒரு வேல இந்த படத்த நீங்க பார்க்க தவறி இருந்திங்கனா.. மறக்காம பாருங்க.. ஒரு அற்புதமான படத்த பார்த்த உணர்வ தரும்.. ஒரு வேல நீங்க இங்கிலீஷ் தவிர வேற மொழி படம் பார்த்தது இல்லன்னு சொல்லுரவங்களா இருந்தா.. அத முதல மாத்திக்கோங்க.. ஏன்னா சிறந்த படங்கள் நிறைய மத்த மொழிகள்ல தான் இருக்கு...

MY RATING - 4.5/5

பி.கு : இந்த படம் 4 பிரிவுல Oscarக்கு போட்டியிட்டது.. ஆனா எதுலையுமே கிடைக்குல.. ஆனா படம் பெரிய புகழ் அடஞ்சிது.. முக்கியமான விஷயம் என்னனா இந்த படம் வந்ததுக்கு அப்புறம் ரியோவோட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாயிடுச்சாம்...
Share this article :

Post a Comment