Latest Movie :

"WATCHMEN" மாறுபட்ட சூப்பர் ஹீரோ படம்!

"Watchmen (2009)" 

         Zack snyder இயக்குனர் அவர்களின் படங்களில் ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருக்கும்! உதாரணமாக "300"ஐ சொல்லாம்! பின்னர் ஒரு நாள் அவரின் "Sucker punch" படத்தைப் பார்த்தேன், காட்சிகைளக் கண்டு அசந்து போனேன்! படம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்காகவே அப்படத்தைக் காணலாம். நேற்று அவரின் மற்றொரு படைப்பான "Watchmen" படத்தைப் பார்த்தேன். அவருக்கே உரித்தான அந்த vfx, மற்றும் ஸ்லோ-மோ காட்சிகள் இந்தப் படத்திலும் நம் கண்கைளக் கவரும்! அவர் படத்தில் இசைக்கும் மிக முக்கியத்துவம் கொடுப்பார். அதே போல் இப்படத்திலும் டைலர் பேட்ஸ் தன் திறமையை நிரூபித்துள்ளார்! படத்தின் கதை கூறப்படும் விதமும் அருமையாக இருக்கும். 3 மணி நேரம் போகிறதே தெரியாத அளவுக்கு நம்மை படத்தினுள் மூழ்கடிக்கும் படம் இது!


     படத்தின் கதை என்னவென்றால் வழக்கமான பல சூப்பர் ஹீரோ படங்கைளப் போல் அணு ஆயத்தால் உலகு அழிவதை தவிர்ப்பதே! ஆனால் கைளமேக்ஸ் வழக்கத்திற்க்கு மாறாக இருக்கும்! ஏன்?? படமே சூப்பர் ஹீரே் வின் வழக்கத்திற்க்கு மாறாக தான் இருக்கும்! ஏனோ தெரியவில்லை இவர்கள் சூப்பர் மேன், பேட் மேன் போல் பிரபலமடையவில்லை. படத்தில் எனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் "Roarschach" என்னும் கதா பாத்திரம் ஆகும். அவனை பார்க்கும் போது இன்னொரு பேட் மேனைப் பார்த்த உணர்வு! படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இது ஒரு புத்தகத்தைத் தழுவி எடுத்த படம் என நம் குழுவில் யாரோ சொல்லி கேள்விபட்ட ஞாபகம்! எனவே அப்புத்தகத்தைப் படித்துவிட்டு பார்த்தால் வேறு அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை அழிக்காமல் வைத்திருக்கிறேன். எனினும் மாறுபட்ட ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்க்க வேண்டுமானால் தாராளமாக இதை தேர்வு செய்யலாம்!!!

Share this article :

Post a Comment