Latest Movie :

CHILDREN OF HEAVEN..!! ( 1997 )

                    நம்ம எல்லாருடைய வாழ்க்கைலையுமே நாம எந்த கவலை இல்லாம சந்தோஷமா இருந்த நாட்கள்னா ,அது கண்டிப்பா நம்முடைய குழந்தை காலமா தான் இருக்கும்.. அது மறுக்கமுடியாத உண்மை.. அதுனால தான் பொதுவாவே இந்த சின்ன பசங்கள மையமா வெச்சி வர படம் எல்லாமே நமக்கு ரொம்ப புடிக்கும்.. காரணம் திரைல காண்பது எல்லாமே நாம கண்டிப்பா செஞ்சி இருப்போம்.. அப்படி பட்ட படம் பார்க்கும் போது ,நம்மையே அறியாம நம்ம அந்த படத்தோட ஒன்றி போய்டுவோம்..
                     இன்னிக்கி நாம பாக்க போற படம் ,ஒரு Iranian திரைப்படம் ,படத்தோட பேரு CHILDREN OF HEAVEN..1997-ல வந்த இந்த படம் Family Drama ,Genre வகையை சேர்ந்தது.. ஒரு குழந்தைங்க படம்.. அன்பு அதிகமா இருக்குறது குழந்தைங்க உள்ளத்துல தான்னு சொல்லுவாங்க.. அத ரொம்ப அழகா வெளிப்படுத்துற படம்...படம் முழுக்க அன்பால நிறஞ்சி இருக்கும்.. படம் பார்த்து முடிக்கும் போது ,அந்த உணர்வ வார்த்தைல சொல்ல முடியாது.. படம் பார்த்து உணர்ந்து கொள்க..! ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான ,அன்பான படம்..


                           படத்தோட ஆரம்பத்துல நம்ம ஹீரோ Ali ( 9 வயசு பையன் ) , அவன் தங்கச்சி Zahra shoe-வ தெச்சி எடுத்திட்டு வீட்டுக்கு போறான்.. போற வழில வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கும் போது.. அவன் தங்கச்சி Shoe-வ தவற விடுறான்.. எவ்ளவோ தேடி பார்த்தும் கிடைக்கல.. வீட்டுக்கு போனா அவன் தங்கச்சி அந்த Shoeக்காக காத்திட்டு இருக்கா.. அவ கிட்ட அழுதிட்டே அவ shoe தொலைஞ்சி போனத பத்தி சொல்றான்.. அவங்க அம்மா கிட்ட சொல்ல வேணாம்னு சொல்றான்.. திரும்பவும் தொலைச்ச எடத்துல தேட போறான்.. ஆனா Shoe கிடைக்கல.. அவன் குடும்பம் ஒரு ஏழ்மையான குடும்பம்.. அவன் குடும்பத்துல மொத்தம் 5 பேரு .. அவன் ,அவங்க அப்பா அம்மா தங்கச்சி Zahra அப்புறம் ஒரு கைக்கொழந்தை..அவங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறாரு.. இதுல பணத்துக்காக வீட்டுக்கு வந்து சில வேலைகளும் செய்வார்.. அவங்கனால கண்டிப்பா இன்னொரு shoe வாங்கி தர முடியாது.. அதுனால Ali அவன் தங்கச்சி கிட்ட வீட்ல சொல்ல வேணாம்ன்னு கெஞ்சுறான்.. அவன் தங்கச்சி அவன் கிட்ட ஸ்கூல்க்கு shoe இல்லாம எப்படி போறதுன்னு கேக்குறா..? அதுக்கு நம்ம ali அவனோட shoe-வ போட்டுட்டு போக சொல்றான்.. தங்கச்சியும் வேற வழி இல்லாத காரணத்துனால ஒத்துக்குறா..
தங்கச்சி காலைல shoe-வ போட்டுட்டு போவா.. மத்தியானம் அவ ஸ்கூல் முடிஞ்ச உடனே ஓடி வந்து.. தெரு முனையில நிக்கிற அண்ணன் கிட்ட Shoe-வ குடுப்பா.. அதுக்கு அப்புறம் அவன் அவசர அவசரமா ஸ்கூல்க்கு ஓடுவான்.. ஆனா இந்த நேர பிரச்சனைனால Ali ஸ்கூல் ஆரம்பிச்ச அப்புறம் தான் போவான்.. இதனால அவன் ஸ்கூல் ஆசிரியர் கிட்ட திட்ட வாங்குறான்... அவங்க அப்பா தோட்டவேலை செய்றதுக்காக பணக்காரங்க இருக்குற பகுதிக்கு Aliயையும் கூட்டிட்டு போறாரு .. ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டுறாங்க.. ஆனா எல்லாரும் துரத்தி அனுப்புறாங்க.. அப்போ ஒரு பணக்கார தாத்தா.. இவங்க ரெண்டு பேரையும் அவங்க தோட்டத்த சீர் அமைக்க சொல்லுறாரு.. அவருக்கு ஒரு பேரன்.. Ali-ய அவரு பேரன் கூட போய் விளையாட சொல்றாரு.. Ali-யும் போய் விளையாடுறான்.. ali ஓட அப்பா எல்லா வேலையும் முடிச்சிட்ட அப்புறம் ,அந்த தாத்தா பணம் தந்து அனுப்புறாரு..ரெண்டு பேரும் சந்தோஷமா சைக்கிள்ல அவங்க வீட்டுக்கு கிளம்புறாங்க.. ali அவங்க அப்பா கிட்ட அவன் தங்கச்சிக்கு Shoe வாங்கி தர சொல்றான்.. ஆனா அதுக்குள்ள ஒரு விபத்துல ரெண்டு பேருக்கும் அடிபடுது.. அதுக்கு அப்புறம் Ali எப்பவுமே போல ஸ்கூல்க்கு போறான்.. அங்க 4km marathon போட்டி இருக்குன்னும் ,அதுக்கு 3rd prize ஒரு shoeன்னும் கேள்விப்படுறான்.. அவன் தங்கச்சி கிட்ட எப்படியாவது போட்டில ஜெய்ச்சி அந்த Shoe-வ அவளுக்கு தரேன்னு சொல்லுறான்.. போட்டி ஆரம்பம் ஆகுது.. நம்ம Ali தான் முதல்ல ஓடி வரான்.. ஆனா 3rd prize தான் வேணும் என்பதால , கொஞ்ச பேர முன்னாடி விடுறான்.. ஆனா அவன் மெதுவான சமயம் நிறைய பேர் அவன முந்திடுறாங்க.. அதுக்கு அப்புறம் நம்ம Ali ஜெய்ச்சான இல்லையா..?? அவன் தங்கச்சிக்கு அந்த Shoe கிடைச்சிச்சா இல்லையா..? படத்த பார்த்து தெரிஞ்சிகோங்க..

                 படத்துலையே எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர்.. அந்த தங்கச்சி கேரக்டர் தான்.. அந்த குட்டி பொண்ணு அவ்ளோ அழகா நடிச்சி இருக்கும்.. அவங்க அண்ணன் shoe-வ தொலசிட்டான்னு கேள்வி படும் போது அழுவுறதும்.. அதுக்கு அப்புறம் அவங்க அண்ணன வீட்ல மாட்டி விடாம காப்பத்துறதும்.. இந்த பொண்ணுக்காகவே படத்த நிறைய வாட்டி பார்க்கலாம்.. இந்த charcter பண்ணி இருக்குறது Bahare Seddiqi .. நம்ம Ali கேரக்டர் பண்ணி இருக்குறது Amir Farrokh Hashemian ..படத்தோட ஹீரோ.. ரொம்ப நல்லா நடிச்சி இருப்பான்.. கிளைமாக்ஸ்ல அந்த போட்டி முடிஞ்சதும் வர சீன்ல சமயா நடிச்சி இருப்பான்..  ஒரு அண்ணன் தங்கச்சியோட அன்ப ,பாசத்த இந்த படம் ரொம்ப அழகா சொல்லி இருக்கும்..
                     
                    படம் வெறும் 89 நிமிடங்கள் மட்டும் தான்.. படத்தோட டைரக்டர் Majid Majidi ... ரொம்ப திறமையான டைரக்டர்.. அதுக்கு இந்த படம் மிக பெரிய சான்று.. நிறைய Awards வாங்கி இருக்காரு.. கடவுள் மேல ரொம்ப நம்பிக்க உள்ளவர்.. தன் படத்துலயும்.. கடவுளுடைய அன்ப வெளிக்காட்டனும்னு நினைக்கிறவர்.. இந்த படத்துக்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார்..
                   









                      குழந்தைங்களோட கதை , அதுவும் ஒரு அண்ணனுக்கும் தங்கிச்சிக்குமான கதை.. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஒரு Shoe தன் படத்தோட மொத்த தீம்... ஆனா படத்த அவ்ளோ அழகா நமக்கு காமிச்சி இருப்பாங்க.. சில படங்கள் பார்க்கும் போது தான்.. படம் முடியும் போது நம்ம மனசு இளகுன மாதிரி இருக்கும்.. அப்படி பட்ட படங்களில் முக்கியமான ஒன்று.. MUST WATCH FOR ALL ...!!

MY RATING - 4.5/5

பி.கு : சில படங்கள் நாம காரணமே இல்லாம அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுடுவோம்.. இந்த படத்த அப்படி விட்டுடிங்கனா .. உங்க வாழ்க்கைல ஒரு முக்கியமான படத்த விட்டுடிங்கன்னு அர்த்தம்.. தவறாம பாருங்க..!! 
Share this article :

Post a Comment