Latest Movie :
Recent Movies

"WATCHMEN" மாறுபட்ட சூப்பர் ஹீரோ படம்!

"Watchmen (2009)" 

         Zack snyder இயக்குனர் அவர்களின் படங்களில் ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருக்கும்! உதாரணமாக "300"ஐ சொல்லாம்! பின்னர் ஒரு நாள் அவரின் "Sucker punch" படத்தைப் பார்த்தேன், காட்சிகைளக் கண்டு அசந்து போனேன்! படம் அவ்வளவு நன்றாக இல்லாவிட்டாலும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்காகவே அப்படத்தைக் காணலாம். நேற்று அவரின் மற்றொரு படைப்பான "Watchmen" படத்தைப் பார்த்தேன். அவருக்கே உரித்தான அந்த vfx, மற்றும் ஸ்லோ-மோ காட்சிகள் இந்தப் படத்திலும் நம் கண்கைளக் கவரும்! அவர் படத்தில் இசைக்கும் மிக முக்கியத்துவம் கொடுப்பார். அதே போல் இப்படத்திலும் டைலர் பேட்ஸ் தன் திறமையை நிரூபித்துள்ளார்! படத்தின் கதை கூறப்படும் விதமும் அருமையாக இருக்கும். 3 மணி நேரம் போகிறதே தெரியாத அளவுக்கு நம்மை படத்தினுள் மூழ்கடிக்கும் படம் இது!


     படத்தின் கதை என்னவென்றால் வழக்கமான பல சூப்பர் ஹீரோ படங்கைளப் போல் அணு ஆயத்தால் உலகு அழிவதை தவிர்ப்பதே! ஆனால் கைளமேக்ஸ் வழக்கத்திற்க்கு மாறாக இருக்கும்! ஏன்?? படமே சூப்பர் ஹீரே் வின் வழக்கத்திற்க்கு மாறாக தான் இருக்கும்! ஏனோ தெரியவில்லை இவர்கள் சூப்பர் மேன், பேட் மேன் போல் பிரபலமடையவில்லை. படத்தில் எனக்கு மிக பிடித்த கதாபாத்திரம் "Roarschach" என்னும் கதா பாத்திரம் ஆகும். அவனை பார்க்கும் போது இன்னொரு பேட் மேனைப் பார்த்த உணர்வு! படம் பார்த்தால் உங்களுக்கே புரியும். இது ஒரு புத்தகத்தைத் தழுவி எடுத்த படம் என நம் குழுவில் யாரோ சொல்லி கேள்விபட்ட ஞாபகம்! எனவே அப்புத்தகத்தைப் படித்துவிட்டு பார்த்தால் வேறு அனுபவமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படத்தை அழிக்காமல் வைத்திருக்கிறேன். எனினும் மாறுபட்ட ஒரு சூப்பர் ஹீரோ படம் பார்க்க வேண்டுமானால் தாராளமாக இதை தேர்வு செய்யலாம்!!!

ADUVENTS FORTUNA JUVAT - THE DARK KNIGHT RISES..!!

     In this evil struck world to deliver justice is not a easy job. Crime warlords stop us,  threaten us and use their power and their ability to inject fear in our heart stop us from delivering justice to the right people. Most of the times it falls in the opposite hands. As a family man who has a loving wife and two children won't be able to stop this crisis situation. As there are more chances of risking their life. But as a symbol anyone can defend justice. The symbol should be delivered in the form of hope. The hope that a country or city can have so that they could defend themselves from any warming situation. People sometimes need something more than justice. 'will' is the need of the hour. The courage to stand against inglorious criminals. The will to fight for the truth and stand against the evil in the name of the truth.


     When we fight against the evil most of the time we should be ready to sacrifice our souls. Sometimes we should sacrifice more than the souls, something which is eternal so that we could hoist the flag called hope in the disaster struck events which happens around us. If Hiroshima and Nagasaki were able to recover from one of the intolerable disasters that ever happened in the history. Then we are quite sure that any city could recover from the mercy-less killers with which it is filled with.



     Just because a few people choose the wrong path,we have no right to antagonise a whole community. Just like how a whole religion cannot be blamed because of few pity terrorists. Our city where we live in is our domicile. We cant afford to give up or lose hope of our city at any cost. We even cannot allow a whole city to rip off its foundation inch by inch and destroy itself as a whole just because of the majority of crimes which happen around us. Crime can be stopped from provoking but hope cannot be done so. It blasts like a nuclear bomb no matter how long we control it.



     Today my blog will be about Christopher Nolan's biopic 'The Dark Knight Rises'. This is the conclusion rather I could describe it as an epic conclusion to the Batman Trilogy. One of my personal all time favorites.To read the review of this Movies Prequels Batman Begins And The Dark Knight click on it..


    Eight years after the death of Harvey Dent, the Dent act helps to evade most of the criminals in the fear struck Gotham city. James Gordon was about to confess the truth many times but his conscience stops him in doing so. Batman has been away from the city for sometime. Bruce Wayne has prefers to be isolated from the society. Selina Kyle(Anne Hathaway) steals Bruce's finger prints and hands it to his business counter part John Daggett so that he could own Wayne enterprises. Later, we come to know that all these things were a part of a plan by Bane(Tom Hardy) which was projected perfectly by his men. Bane is a militant revolutionary originated and trained by the League of Shadows but later was excommunicated because Ra's Al Ghul only recognized evilness in his heart. His strike at the stock marked of Gotham paved way for the Batman to return after eight years. When Bruce Wayne was concentrating only for the goodness of the city Alfred revealed the truth that Rachel had preferred Harvey Dent over Wayne and Alfred was hiding the truth so long. This made Wayne dejected with disappointment and asked Alfred to leave. At the same time Wayne enterprises was at jeopardy and Bruce was at the verge of becoming a pauper. He decides to change over the nuclear reactor to Miranda Tate(Marion Cotillard). Selina agrees to make Batman fall in Bane's trap because Bane threatened to kill her. Bane after destroying Batman by several lusty blows then revealed he was about to complete Ra's Al Ghul's mission. Bane further imprisons him to a well like prison and asks him to watch his city die. The inmates informs Wayne that nobody has escaped the prison except the child. Bruce assumes the child to be Bane.



    Bane with the help of Dr pavel has converted the nuclear reactor into nuclear bomb. He breaks the Gotham prison and sets the inmates free and starts the revolution and even keeps the police isolated at a underground tunnel.  John Blake(Levitt) was the only one to escape from it. As Bane terrorizes Gotham and was about to blow up the city completely. Bruce with all his mental abilities and with his strength somehow escapes the prison and was about to return to save the Gotham city. Did he succeed in saving his city? or what was the sacrifice he did to save Gotham? forms the rest of the plot.

      Performance wise Christian Bale was at his  pioneer best much like how he performed in the first two installments. Bane was physically and mentally strong and was disturbing as the antagonist. John Blake was a treat to watch.

      Christopher Nolan always known for his screen play has risen up high and delivered a punch and gave a right ending to the engaging trilogy. Hans Zimmer once again delivers his usual best with his timing back ground scores. Cinematography and Editing was the best among the trilogy.

     One interest fact is that The Joker(Heath Ledger) was part of the original script but his sudden demise forced Christopher Nolan to remove him from the script.

    The movie was both critically and commercially acclaimed making it the third highest grossing superhero movie ever.

MY RATING- 4.75/5.

P.S-  The movie is my favorite of the trilogy and one of the world class movies not be missed for both cinematic lovers and Batman fans around the globe.To read the review of Batman Begins And The Dark Knight click on it..


BIG BAD WOLVES..!! ( 2013 )

                 Dhrishyam பார்த்த நேரமோ என்னமோ வரிசையா நான் பார்குற படங்கள்லாம் Thriller ஆகவே இருக்குது.. ஒரு மனிதன் தனக்கு ரொம்ப புடிச்ச விஷயத்த இழக்கும் போது..  அத கண்டுபுடிக்க என்ன வேணும்னாலும் செய்வான்.. ஒரு வேல அவன் இழந்த விஷயம் ,அவனுடைய சொந்த மகனாகவோ ,இல்லை மகளாகவோ இருந்தா.. அவங்கள கண்டுபுடிக்கிற வரைக்கும் ஓயமாட்டான்.. ஒரு வேல அவனுடைய மகளோ மகனோ கொடூரமா கொலை செய்யப்பட்டு இருந்தா ,மிருகமா மாறுவதுக்கு கூட தயங்க மாட்டான்..
                  இன்னிக்கி நாம பார்க்க போற படம் 2013-ல வெளியான BIG BAD WOLVES..!! Thriller ,Genre -ஐ சேர்ந்த இந்த படம் ஒரு Israeli மொழிப்படம்.. குழந்தைகள கடத்தி கற்பழிக்கிற ஒரு மிருகத்த ,வேட்டையாட நினைக்கும் இரண்டு பேரோட கதை தான் இந்த படம்..


                    படத்தோட ஆரம்பத்துல 3 சின்ன பசங்க ஒளிஞ்சு விளையாடிட்டு இருக்காங்க.. அதுல ஒரு பொண்ணு காணாம போய்டுரா.. அதுக்கு அடுத்த சீன்ல ஒரு ஆள , 3 பேரு சேர்ந்து பொண்ண எங்க வெச்சி இருக்கன்னு கேட்டு அடிக்கிறாங்க.. அவன் அத பத்தி தனுக்கும் எதும் தெரியாதுன்னு சொல்லுறான்.. ஆனா 3 பேரும் நல்லா அடிச்சி கேக்குறாங்க.. இத ஒரு பையன் யாருக்கும் தெரியாம ,அவன் cellphone-ல வீடியோ எடுத்திடுறான்... அடிக்கிறவங்கள நிறுத்த சொல்லி அவங்களுக்கு ஒரு அழைப்பு வருது.. அடிவாங்குனவன அவன் வீட்ல கொண்டு போய் விட சொல்லியும் அந்த போன்ல சொல்லுறாங்க.. வேற வழி இல்லாததுனால அவன கொண்டு போய் அவன் வீட்ல விட்டு ,அவன் கிட்ட மன்னிப்பு கேட்டு ,பணமும் குடுத்து அனுப்புறாங்க..
அடிவாங்குனவன் ஒரு ஸ்கூல்ல வாத்தியார்..  அவன் பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருப்பான்.. அந்த அடிச்சவன்ல ஒருத்தன் தான் நம்ம ஹீரோ.. ஒரு போலீஸ் ஆபீசர்.. கொஞ்ச நேரத்துல போலீஸ் ஸ்டேஷன்க்கு ஒரு அழைப்பு வருது.. அதுல அந்த கடத்தப்பட்ட பொண்ணு இருக்குற இடத்த சொல்லிட்டு.. அழைப்பு துண்டிக்க படுத்து.. அந்த இடத்துக்கு நம்ம ஹீரோவும் மத்த போலீஸ் ஆபீஸரும் விரைவா போறாங்க.. அங்க ஒரு பொண்ணு தலை துண்டிக்கப்பட்டு இருக்குறா.. அவ உடம்பு மட்டும் தான் அங்க இருக்கு.. அவ தலை அங்க இல்ல..அந்த பொண்ணு கற்பழிக்கப்பட்டு வேற இருக்கா.. தாமதமான விசாரணை தான் அந்த பொண்ணு இறந்ததுக்கான காரணம்னு சொல்லி ,மேலதிகாரி நம்ம ஹீரோவ டிராபிக் departmentக்கு மாத்திடுராறு.. நம்ம ஹீரோக்கு ஆனா முழு சந்தேகமும் அந்த வாத்தியார் மேலதான்..  அதுனால நம்ம ஹீரோ ,வாத்தியாருக்கே தெரியாம பின்தொடர்ந்திட்டே இருக்காரு.. இது போதாதுன்னு நம்ம ஹீரோ அந்த வாத்தியார அடிச்ச வீடியோ வேற Youtube-ல வந்திடுது..இதுனால நம்ம ஹீரோவ தற்காலிக பணிநீக்கம் வேற செஞ்சிடுறாங்க... நம்ம ஹீரோ அந்த வாத்தியார் வாய்ல இருந்து உண்மைய வரவழைக்க அவன கடத்திட்டு போய் மிரட்டுறாரு..
அங்க யாரோ ஒருத்தர் நம்ம ஹீரோவ அடிச்சி மயக்கம் போட வெச்சிடுறாரு.. அந்த வாத்தியாரையும் அடிச்சி மயக்கம் போட வெச்சிடுறாரு.. யாருமே இல்லாத ஒரு வீட்டுக்கு ரெண்டு பேரையும் கூட்டிட்டு போறாரு.. அந்த கடத்திட்டு வந்தவர் தான் ,அந்த இறந்த பொண்ணோட அப்பா..  அந்த வாத்தியார கட்டி போட்டுட்டு நம்ம ஹீரோக்கிட்ட வாத்தியார சித்திரவதை செஞ்சி உண்மையை வரவைக்க உதவி கேக்குறாரு.. நம்ம ஹீரோவும் அவருடைய வேல திருப்பி கிடைக்கணும் என்பதுக்காக உதவி செய்ய ஒத்துக்குராறு..ரெண்டு பெரும் அந்த வாத்தியார சித்திரவத செய்யுறாங்க ,உண்மைக்காக.. ஆனா அந்த வாத்தியார் தான் எந்த பொண்ணையும் கொலை பண்ணலன்னு சொல்லுறாரு.. இறந்த பொண்ணோட அப்பா ,வாத்தியார் கிட்ட தன் பொண்ணோட தலைய எங்க வெச்சி இருக்கன்னு கேக்குறாரு..ஆனா வாத்தியார் தனக்கு எதுமே தெரியாதுன்னு சொல்லுறாரு.. அந்த பொண்ணோட அப்பா போன் பேசறதுக்காக போகும் பொது.. வாத்தியார் நம்ம ஹீரோகிட்ட பேசுறான்.. தான் எதுமே செய்யலனும் ,ஹீரோ மாதிரியே அவனுக்கும் ஒரு குழந்தை இருக்குதுன்னும் சொல்லுறான்.. திரும்பவும் நம்ம பொண்ணோட அப்பா வந்து சித்திரவத செய்ய ஆரம்பிக்க பொது ,நம்ம ஹீரோ தடுக்குராறு.. அதன்னால அந்த பொண்ணோட அப்பா நம்ம ஹீரோவையும் அடிச்சி ஒரு ஓரமா கட்டி போடுறாரு.. கொஞ்ச நேரம் கழிச்சி நம்ம இறந்த பொண்ணோட தாத்தாவும் வந்திடுராறு.. ரெண்டு பெரும் சேர்ந்து அந்த வாத்தியார சித்திரவத செய்யுறாங்க.. இப்போ அந்த வாத்தியார் அந்த பொண்ணோட தல இருக்குற இடத்த சொல்லுறான்.. நம்ம பொண்ணோட அப்பா அத எடுக்க கிளம்பிடுராறு.. போன கொஞ்ச நேரத்துல பொண்ணோட தாத்தா.. மயக்கமருந்து Cake சாப்பிட்டு மயக்கம் ஆயிடுறாரு.. இந்த நேரத்த use பண்ணி நம்ம ஹீரோ அங்க இருந்து தப்பிக்கிராறு..ஆனா வாத்தியார் மேல நம்பிக்க இல்லாத காரணத்துனால ,அவன அங்கேயே விட்டுட்டு போறாரு.. போன இடத்துல தலை கிடைக்கததுனால பயங்கர வெறியோட அந்த பொண்ணோட அப்பா வராரு.. தப்பிச்சு போன நம்ம ஹீரோ போலீஸ் ஸ்டேஷன்க்கு போன் பண்ணும் போது.. தன்னுடைய பொண்ணு கடத்த பட்ட விஷயத்த கேள்விப்படுராறு.. அப்ப தான் அவருக்கு ஞாபகம் வருது..நம்ம ஹீரோக்கு குழந்தை இருக்குறத பத்தி வாத்தியார் முன்னாடியே பேசி இருப்பான்.. வேகமா அவன் இருக்குற இடத்துக்கு போவார்.. நம்ம ஹீரோவோட பொண்ணு கிடைச்சால இல்லையா..?? அந்த வாத்தியார் தான் உண்மையான கொலைக்காரனா ..?? இந்த விடைகள படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க..

              படத்தோட CLIMAX உண்மையாவே நல்ல இருக்கும்.. படத்தோட 40 நிமிடத்துல இருந்து.. படம் ஒரே இடத்துல தான் நடக்கும்.. ஆனா ஒரு நிமிஷம் கூட படம் bore அடிக்கல.. அடுத்தது என்னன்னு பதட்டதோட பார்க்க வெச்சது.. படத்துல நடிச்ச எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சி இருப்பாங்க.. ஒரு நல்ல Thriller படம்..





                     படத்தோட டைரக்டர் Aharon Keshales மற்றும் Navot Papushado .. திரைக்கதைய ரொம்ப நல்லா அமைச்சி இருப்பாங்க.. படம் முழுக்க அடுத்தது என்னன்னு யோசிக்க வைக்கும்.. படம் நிறைய விருதுகள் வாங்கி இருக்கு..!
                     ஒரு அருமையான thriller படம் ,அதிகமான ரத்தம் ,violence இல்லாம பார்க்கணும்னு ஆச பட்டிங்கனா.. இந்த படம் ஒரு அருமையான சாய்ஸ்.. என்ன பொறுத்த வரைக்கும் MUST WATCH FOR ALL THRILLER LOVERS ..!!

MY RATING - 4/5


பி.கு : இந்த படத்த தான் 2013-ன் சிறந்த படமா என் தலைவர்  Quentin Tarantino அறிவிச்சி  இருந்தாரு..!! என்ன பொறுத்த வரைக்கும் படத்துக்கு அது தான் மிக பெரிய விருது..!

WHY SO SERIOUS ? - THE DARK KNIGHT

              When we go to circus on any auspicious occasion we tend to watch Joker with lot of interest than any other any other artist because it will be really fun to watch the clown, the reason is the clown attracts a lot of audiences with his hilarious voice. When we leave the circus its the joker's face that strikes us many times even after we leave the place. As I already mentioned in my previous blog life changes in a drastic way depending upon how we are brought up in our early ages. Good people and bad people are both made depending upon how we are brought up. A third category is newly created and I will name it as psychopaths. A psychopath is one who seriously doesn't have any motive, he just wants to do something because he wants to. He likes to swim in the pool of blood instead of water. Money won't be his motive at all. He just wants to see the world burn at any cost. To witness it he sheds a lot of effort to achieve the unthinkable and to land the most terrifying force in this world. Something the normal human being wouldn't even think off.

      So what is the only way to stop these kinds of petrifying characters. The answer is simple! Take him to the ground, burn him into ashes so that he won't rise above again literally KILL HIM. But without killing him is there any way to stop him?. The answer is certainly NO. But only one person who could really do the impossible and could bring down a ferocious barbarian down to ground without killing him by peeling his skin inch by inch ,by controlling the necessity to kill him with all his sense can be only one and he is THE BATMAN.
       
        I am going to reveal about the epic-award winning super hero movie 'The Dark Knight'  today.This movie is a sequel to THE BATMAN BEGINS.. Most of us would be very fond of this movie because everybody would be having a DVD of it. The reason is it will be the pioneer among each and everyone's favorite movie list.



       The joker is known for being funny and entertaining the crowd. But in this blog we gonna see a joker who wants to struck chord with the crowd by spreading fear and to blow up tall buildings, shake the Government with his dark thinking and also destroy the society day by day by reducing the faith among people each and every second not for the sake of money but for his own personal happiness. He couldn't be called as a joker but according him the destructive things which I mentioned above seems funny to him and there fore he considers himself as 'THE JOKER'(Heath Ledger)
   









      The plot is so simple after The Batman's encounter with Ra's Al Ghul ( in the prequel Batman Begins ) the Gotham city is struck by a new psychopath killing machine named The joker.Harvey Dent (Aaron Eckhart) after being elected as the new District attorney plans to eradicate the mugs in the Gotham city to the fullest and then with no one expectations The joker enters Gotham city by robbing a famous bank and his atrocities gets increased day by day on regular basis. The mob bosses holds a meeting with Lau, an accountant who has hidden their funds and moved to Hong Kong. The joker disturbs the meeting and orders them to kill Batman but the mobs refuses to his task and Gambol threatens joker. So The joker kills Gambol and takes control over the him mob. He threatens Gotham that each and every day people will die if Batman doesn't reveal his true identity But Dent as a twist in the plot reveals himself as Dent in order to safe guard Gotham. Joker when he was about to kill Dent is intervened by The Batman and decides to stop him. Whether Batman was success full in safeguarding Gotham before falling in to the hands of The Joker or did he fail?. What was the reason behind Harvey Dent turning into two-face and whether Bruce Wayne succeeded in his love life forms the rest of the plot.


       Christian Bale as The Batman was his usual best. Aaron Eckhart as Harvey Dent has done his role to perfection. The one character who outperformed Christian Bale and The Batman was Heath Ledger as The Joker. What a performer he is. As years pass by this movie would be remembered only for the character disguised by Heath Ledger more than The Batman. It would take at least three decades for us witness such a perfection in an antagonist role. He has undergone months of training so that he could underplay this role to mere perfection. Heath Ledger even spent six months alone in a hotel so that he could get the thinking of Joker and the way through which Joker communicates through his own mind. Indeed its an hard work. That's the reason why he was awarded the academy award for the best actor. It was unfortunate that he could not witness his name spellbound all over the world.
   





     In the technical side Christopher Nolan will be the key reason behind why this movie would be spoken so proudly in the coming future. No one could match up his reputations in his film making skills. Someone who is so pioneer in it. Hans Zimmer once again proves why he is the king of back ground scores. His works collaborating with Christopher Nolan will be remembered always like the sea with waves. Such a sort of dedication was showed by them in the making of this epic movie.

     Totally a movie which shouldn't be given a miss at all. If you miss it surely you would be missing something in life both literally and mentally.

MY RATING - 5/5.

P.S- A sure shot movie for all Batman fans and compulsory watch for all cinema buffs. On the whole this movie should be watched by mentally active human being in this planet.This movie had a Prequel and a Sequel ( to read about it click on it.. )

CHILDREN OF HEAVEN..!! ( 1997 )

                    நம்ம எல்லாருடைய வாழ்க்கைலையுமே நாம எந்த கவலை இல்லாம சந்தோஷமா இருந்த நாட்கள்னா ,அது கண்டிப்பா நம்முடைய குழந்தை காலமா தான் இருக்கும்.. அது மறுக்கமுடியாத உண்மை.. அதுனால தான் பொதுவாவே இந்த சின்ன பசங்கள மையமா வெச்சி வர படம் எல்லாமே நமக்கு ரொம்ப புடிக்கும்.. காரணம் திரைல காண்பது எல்லாமே நாம கண்டிப்பா செஞ்சி இருப்போம்.. அப்படி பட்ட படம் பார்க்கும் போது ,நம்மையே அறியாம நம்ம அந்த படத்தோட ஒன்றி போய்டுவோம்..
                     இன்னிக்கி நாம பாக்க போற படம் ,ஒரு Iranian திரைப்படம் ,படத்தோட பேரு CHILDREN OF HEAVEN..1997-ல வந்த இந்த படம் Family Drama ,Genre வகையை சேர்ந்தது.. ஒரு குழந்தைங்க படம்.. அன்பு அதிகமா இருக்குறது குழந்தைங்க உள்ளத்துல தான்னு சொல்லுவாங்க.. அத ரொம்ப அழகா வெளிப்படுத்துற படம்...படம் முழுக்க அன்பால நிறஞ்சி இருக்கும்.. படம் பார்த்து முடிக்கும் போது ,அந்த உணர்வ வார்த்தைல சொல்ல முடியாது.. படம் பார்த்து உணர்ந்து கொள்க..! ரொம்ப ரொம்ப ரொம்ப அழகான ,அன்பான படம்..


                           படத்தோட ஆரம்பத்துல நம்ம ஹீரோ Ali ( 9 வயசு பையன் ) , அவன் தங்கச்சி Zahra shoe-வ தெச்சி எடுத்திட்டு வீட்டுக்கு போறான்.. போற வழில வீட்டுக்கு தேவையான சாமான்கள் வாங்கும் போது.. அவன் தங்கச்சி Shoe-வ தவற விடுறான்.. எவ்ளவோ தேடி பார்த்தும் கிடைக்கல.. வீட்டுக்கு போனா அவன் தங்கச்சி அந்த Shoeக்காக காத்திட்டு இருக்கா.. அவ கிட்ட அழுதிட்டே அவ shoe தொலைஞ்சி போனத பத்தி சொல்றான்.. அவங்க அம்மா கிட்ட சொல்ல வேணாம்னு சொல்றான்.. திரும்பவும் தொலைச்ச எடத்துல தேட போறான்.. ஆனா Shoe கிடைக்கல.. அவன் குடும்பம் ஒரு ஏழ்மையான குடும்பம்.. அவன் குடும்பத்துல மொத்தம் 5 பேரு .. அவன் ,அவங்க அப்பா அம்மா தங்கச்சி Zahra அப்புறம் ஒரு கைக்கொழந்தை..அவங்க அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தான் சம்பாதிக்கிறாரு.. இதுல பணத்துக்காக வீட்டுக்கு வந்து சில வேலைகளும் செய்வார்.. அவங்கனால கண்டிப்பா இன்னொரு shoe வாங்கி தர முடியாது.. அதுனால Ali அவன் தங்கச்சி கிட்ட வீட்ல சொல்ல வேணாம்ன்னு கெஞ்சுறான்.. அவன் தங்கச்சி அவன் கிட்ட ஸ்கூல்க்கு shoe இல்லாம எப்படி போறதுன்னு கேக்குறா..? அதுக்கு நம்ம ali அவனோட shoe-வ போட்டுட்டு போக சொல்றான்.. தங்கச்சியும் வேற வழி இல்லாத காரணத்துனால ஒத்துக்குறா..
தங்கச்சி காலைல shoe-வ போட்டுட்டு போவா.. மத்தியானம் அவ ஸ்கூல் முடிஞ்ச உடனே ஓடி வந்து.. தெரு முனையில நிக்கிற அண்ணன் கிட்ட Shoe-வ குடுப்பா.. அதுக்கு அப்புறம் அவன் அவசர அவசரமா ஸ்கூல்க்கு ஓடுவான்.. ஆனா இந்த நேர பிரச்சனைனால Ali ஸ்கூல் ஆரம்பிச்ச அப்புறம் தான் போவான்.. இதனால அவன் ஸ்கூல் ஆசிரியர் கிட்ட திட்ட வாங்குறான்... அவங்க அப்பா தோட்டவேலை செய்றதுக்காக பணக்காரங்க இருக்குற பகுதிக்கு Aliயையும் கூட்டிட்டு போறாரு .. ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டுறாங்க.. ஆனா எல்லாரும் துரத்தி அனுப்புறாங்க.. அப்போ ஒரு பணக்கார தாத்தா.. இவங்க ரெண்டு பேரையும் அவங்க தோட்டத்த சீர் அமைக்க சொல்லுறாரு.. அவருக்கு ஒரு பேரன்.. Ali-ய அவரு பேரன் கூட போய் விளையாட சொல்றாரு.. Ali-யும் போய் விளையாடுறான்.. ali ஓட அப்பா எல்லா வேலையும் முடிச்சிட்ட அப்புறம் ,அந்த தாத்தா பணம் தந்து அனுப்புறாரு..ரெண்டு பேரும் சந்தோஷமா சைக்கிள்ல அவங்க வீட்டுக்கு கிளம்புறாங்க.. ali அவங்க அப்பா கிட்ட அவன் தங்கச்சிக்கு Shoe வாங்கி தர சொல்றான்.. ஆனா அதுக்குள்ள ஒரு விபத்துல ரெண்டு பேருக்கும் அடிபடுது.. அதுக்கு அப்புறம் Ali எப்பவுமே போல ஸ்கூல்க்கு போறான்.. அங்க 4km marathon போட்டி இருக்குன்னும் ,அதுக்கு 3rd prize ஒரு shoeன்னும் கேள்விப்படுறான்.. அவன் தங்கச்சி கிட்ட எப்படியாவது போட்டில ஜெய்ச்சி அந்த Shoe-வ அவளுக்கு தரேன்னு சொல்லுறான்.. போட்டி ஆரம்பம் ஆகுது.. நம்ம Ali தான் முதல்ல ஓடி வரான்.. ஆனா 3rd prize தான் வேணும் என்பதால , கொஞ்ச பேர முன்னாடி விடுறான்.. ஆனா அவன் மெதுவான சமயம் நிறைய பேர் அவன முந்திடுறாங்க.. அதுக்கு அப்புறம் நம்ம Ali ஜெய்ச்சான இல்லையா..?? அவன் தங்கச்சிக்கு அந்த Shoe கிடைச்சிச்சா இல்லையா..? படத்த பார்த்து தெரிஞ்சிகோங்க..

                 படத்துலையே எனக்கு ரொம்ப புடிச்ச கேரக்டர்.. அந்த தங்கச்சி கேரக்டர் தான்.. அந்த குட்டி பொண்ணு அவ்ளோ அழகா நடிச்சி இருக்கும்.. அவங்க அண்ணன் shoe-வ தொலசிட்டான்னு கேள்வி படும் போது அழுவுறதும்.. அதுக்கு அப்புறம் அவங்க அண்ணன வீட்ல மாட்டி விடாம காப்பத்துறதும்.. இந்த பொண்ணுக்காகவே படத்த நிறைய வாட்டி பார்க்கலாம்.. இந்த charcter பண்ணி இருக்குறது Bahare Seddiqi .. நம்ம Ali கேரக்டர் பண்ணி இருக்குறது Amir Farrokh Hashemian ..படத்தோட ஹீரோ.. ரொம்ப நல்லா நடிச்சி இருப்பான்.. கிளைமாக்ஸ்ல அந்த போட்டி முடிஞ்சதும் வர சீன்ல சமயா நடிச்சி இருப்பான்..  ஒரு அண்ணன் தங்கச்சியோட அன்ப ,பாசத்த இந்த படம் ரொம்ப அழகா சொல்லி இருக்கும்..
                     
                    படம் வெறும் 89 நிமிடங்கள் மட்டும் தான்.. படத்தோட டைரக்டர் Majid Majidi ... ரொம்ப திறமையான டைரக்டர்.. அதுக்கு இந்த படம் மிக பெரிய சான்று.. நிறைய Awards வாங்கி இருக்காரு.. கடவுள் மேல ரொம்ப நம்பிக்க உள்ளவர்.. தன் படத்துலயும்.. கடவுளுடைய அன்ப வெளிக்காட்டனும்னு நினைக்கிறவர்.. இந்த படத்துக்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார்..
                   









                      குழந்தைங்களோட கதை , அதுவும் ஒரு அண்ணனுக்கும் தங்கிச்சிக்குமான கதை.. இதுல முக்கியமான விஷயம் என்னன்னா ஒரு Shoe தன் படத்தோட மொத்த தீம்... ஆனா படத்த அவ்ளோ அழகா நமக்கு காமிச்சி இருப்பாங்க.. சில படங்கள் பார்க்கும் போது தான்.. படம் முடியும் போது நம்ம மனசு இளகுன மாதிரி இருக்கும்.. அப்படி பட்ட படங்களில் முக்கியமான ஒன்று.. MUST WATCH FOR ALL ...!!

MY RATING - 4.5/5

பி.கு : சில படங்கள் நாம காரணமே இல்லாம அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுடுவோம்.. இந்த படத்த அப்படி விட்டுடிங்கனா .. உங்க வாழ்க்கைல ஒரு முக்கியமான படத்த விட்டுடிங்கன்னு அர்த்தம்.. தவறாம பாருங்க..!! 

THE HARDENED VIGILANTE - BATMAN BEGINS

               Everyone wants to be a super hero in this world. Super heroes are literally not born they are moulded into one. Most of us have a wonderful childhood. A childhood with sun rays beaming into our eyes hoping for a bright future, pleasant memories, photographs etc all leading us into the formation of an unadulterated pure human being in the near future. Since I am  part of an atheist side someone who doesn't believe in fate nor someone who believes in super natural powers but a strong believer in destiny. Destiny where our life should lead into. So many children are born in good environment with lovable father and mother and someone are born orphans due to various circumstances. I don't call this as fate, but as destiny. Destiny wants us to make our own self stronger and better by learning from the outside world. These sorts of people are bound to be stronger than the normal spoon feeding child who normally depends too much on their parents. But there is another section in our society were children are moulded in to criminals because of their rough child hood. The agony they face at a very young age. The fear which strikes their eyes each and every day. These type of children who live with their family to certain extend and when they are estranged suddenly problems arises there. Baring they are rich or poor, each and every child needs someone to guide them and that someone would be mostly their parents. When a mother or father dies or both leave this world imagine what happens to that innocent heart which pumps so calmly. First the child becomes pathetic, then sorrow strikes then the most important of all the child decides to show frustration to the outside world. This is the point were our child hood gets ruined and our society gets damaged. I always believe that humans don't kill society. society always kills society.

                Only few kids have the unfortunate fortune to see their parents get killed in front of  their own blooming eyes. Every city have criminals flooded with. The criminals kill people just for the sake of money, they don't care about other people's responsibility. They only have the urge to satisfy themselves not to satisfy others leaving many roots in the need of water. These roots either die or grow with the help of water. What I am trying to imply is the dying roots are the violence struck children who turn in to hard mercy less culprits and the watered roots either grow in to vigilante or have a peaceful life.

                Fear is the worst enemy one can have in their life. One should learn to overcome fear. One should have the strong will to fight the bitterness and overcome it with skillful acts. The real reason one who falls in their life is because at certain point we should learn to pick ourselves up. After all 'its not about who we are underneath, its about what we do to define ourselves'.

              Today we are going to talk about one of the cult super hero movies ever made in the history of world cinema. A super hero generally provokes small children but this superhero sets an example how each and every soul in this world should lead their life. Superheroes always have a dark or rough childhood i.e they always have a bitter flashback to explain why they turn in to a superhero. But super hero's depends on the necessity kills some violent people depending on the needs but this person is a hardened vigilante someone who likes to clean the society with his intellectual and provoking ideas with a dark heart. Someone who has adapted darkness like the bat which is active only during the night. Yes I am talking about the evergreen vigilante cum superhero 'THE BATMAN'



      Many movies were made based on this fictional character but Christopher Nolan's directorial work on Batman seems to be the best superhero movie made ever till date.  Christopher Nolan the talented and pioneer director of our times wrote the script into a huge one and later filmed into three parts. BATMAN BEGINS(2005) is the first part of this epic trilogy.


                 The plot is this Bruce Wayne(Christian Bale) who has a high fear towards bats falls into a well  were he is attacked by a swarm of bats and so he develops a fear towards bats and his father Thomas Wayne rescues him and utters these words 'why do we fall Bruce?'' ' so that we could pick ourselves up'. These golden words strikes him daily. After some days he witness his parents murdered in front of his own eyes outside opera house by a petty thief for the sake of money. He is struck deeply in his heart by his parents death and as a child he meets Commissioner Gordon(Gary Oldman) advice him to be strong and later Bruce was brought up by Wayne family's trustee Alfred Pennyworth(Michael Caine). As a grown up he decides to take revenge on the mug who killed his parents with a gun but his efforts goes in vain. After his child hood friend and District Attorney Rachel Dawes comes to know about this he slaps Bruce Wayne saying his father won't be happy about his act and tells him that the law cannot be taken by anyone in  their own hands. After that he decides to meet Carmine Falcone in a night club. Falcone intimidates him saying that fear is the real power that one could have to dominate and rule others. Struck by his speech Wayne decides to travel around the world and learn the techniques of a criminal and he himself becomes a criminal. He is caught red handed one day for criminal activities and imprisoned to Bhutanese prison. Henri Ducard(Liam Neeson) offers him to teach the art of adopting to darkness and to join him as a member of league of shadows. After learning the way to overcome fears when he was about to league of shadows but then he realizes that the main motive of league of shadows is to destroy Gotham  city. As Gotham city was beyond saying the only way to restore balance is to destroy Gotham but Bruce Wayne refuses to be an executioner and escapes from the prison some how killing Ra's al Ghul. Sooner or later Bruce Wayne returns to Gotham he takes charge over his family's company Wayne Enterprises. Bruce meets Lucius Fox (Morgan Freeman) who shows his various prototype technologies like tumbler and body suit. Taking these and with the prolonged training on splunking  he builds a cave in his well confronts his fear towards bats and disguising himself as 'THE BATMAN'. As the Batman his first priority was empowering Gordon and to stop the drug dealing and providing enough evidence to Rachel helping her to arrest Falcone. Then he confronts Dr Crane(Cillian Murphy) and how he stops scarecrow and the forthcoming encounter he faces forms the rest of the plot.

           Performance wise Christian Bale was at his psychological best. At some scenes you would really believe batman really existed. The way he overcomes his fear and how he adopted darkness as his ally is quite really amusing. Gary Oldman as Commissioner Gordon is so stylish and really unpredictable in the crime struck Gotham city. Catie Holmes as Rachel was perfect. Liam Neeson was so impressive in his dual characters as I wont reveal what are the characters are.

     




             In the technical side Christopher Nolan is the ultimate best person to have on board. The way he handled the script is so amazing and amusing. His perfectly planned shots and dialogues needs a special mention. Hans Zimmer, this lad is on fire with a script like this he sets the screen on fire with his scintillating back ground score. Cinematography by Wally Pfister was genius. His camera angles was so picture perfect. For his fantastic work he was even nominated for the academy awards.

             I assure you that ten years from now on Christian Bale will be our only Batman and Christopher Nolan would be remembered as the only director known for showing Batman in a fantastic way even though how many Batman movies we come cross. Its my personal view.

           One unknown fact about the movie is Cillian Murphy who played Dr crane once came to attend the audition to play Batman but Christopher Nolan had other plans for him.

MY RATING - 4.75/5.

P.S - Many superhero movies may come and go but this movie(trilogy) will always remain the pioneer among it. You can count on me regarding this...!! To read the reviews of the following sequels The Dark Knight and The Dark Knight Rises click on it..

DRISHYAM..!! ( 2013 )

                 பொதுவாவே Thriller வகை படங்கள்னா எனக்கு ரொம்ப புடிக்கும்.. அதுக்கு முக்கியமான காரணம் அந்த படம் கொடுக்கிற த்ரில்.. ஒரு வெற்றிகரமான thriller படம் கொடுக்கணும்னா , ரசிகர்கள படம் இறுதி வரைக்கும் படத்தோட ஒன்ற வைக்கணும்.. ஒரு thriller படத்துக்கு ரொம்ப  முக்கியமான விஷயம் என்னன்னா , படம் முழுக்க நிறைய முடிச்சி போடணும்.. அப்புறம் இறுதியில எல்லா முடிச்சிகளையும் தெளிவா அவுக்கணும்.. அதுல முக்கியமான விஷயம் என்னன்னா மக்களுக்கு அது தெளிவா புரியணும் ,அதுக்கான காரணங்கள் நம்புற மாதிரி இருக்கணும்.. ஒரு சாதாரண படம் எடுக்குறத விட இந்த Thriller வகை படங்கள் எடுக்கிற டைரக்டர்க்கு தான் ,இன்னும் கஷ்டம்.. ஏன்னா ஒரு thriller படம் எடுக்கும் போது ,அடுத்து நடக்க போறத யாரும் கண்டுபிடிச்சுட கூடாது.. முக்கியமான விஷயம் அது எல்லாமே எதுக்கு நடக்குதுன்ற காரணத்த கண்டுபுடிக்க கூடாது..
                    இன்னிக்கு நாம பாக்க போற படம் "DRISHYAM".. இந்த படம் ஒரு மலையாள மொழி படம்.. Drishyam என்பதுக்கு Visual ( பார்க்குற காட்சி ) என்பது பொருள்..இந்த படம் thriller ,genre வகையை சேர்ந்தது...போன வருஷம் ரிலீஸ் ஆன இந்த படம் தான் மலையாளத்துலையே அதிகம் வசூல் செஞ்ச திரைப்படம்.. ஏன் Mollywood-ல இந்த படம் வசூல்ல பெரிய புரட்சி உண்டு பண்ணி இருக்குன்னு கூட சொல்லலாம்.. படம் ரொம்ப பெரிய ஹிட்.. படம் ரிலீஸ் ஆன நேரத்துல இருந்து இந்த படத்த பார்க்கணும்னு நான் ரொம்ப ஆச பட்டேன்..ஆன முடியல.. ரொம்ப நாளைக்கு படம் நெட்லயும் வரல.. ஒரு வழியா நேத்து என் Facebook நண்பர், இந்த படத்தோட torrent-ah facebook க்ரூப்ல போட்டார்.. அவசர அவசரமா படத்த டவுன்லோட் பண்ணி பார்த்தேன்...பார்த்துட்டேன்..
                     

                     நம்ம ஹீரோ பேரு ஜார்ஜ் குட்டி.. அவர் ஒரு கேபிள் டிவி operator .. அவருக்கு ஒரு மனைவி , 2 மகள்.. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம்.. நம்ம ஜார்ஜ் வெறும் 4ஆம் கிளாஸ் வரைக்கும் தான் படிச்சி இருக்காரு.. ஆனா உலக நடப்புகள் எல்லாமே தெரிஞ்சி வெச்சி இருப்பாரு.. அதுக்கு காரணம் சினிமா.. ஆமாங்க நம்ம ஜார்ஜ்க்கு சினிமா தான் எல்லாம்.. படம் பார்க்கிறதுக்காக வீட்டுக்கு கூட போகாம ஆபீஸ்லையே இரவு தங்குற அளவுக்கு சினிமா மேல பைத்தியம்.. அவர சுத்தி இருக்குறவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா சினிமால இருந்து அவங்களுக்கு அந்த பிரச்சனைய தீர்க்க வழி சொல்லுவாரு.. ரொம்ப அழகான குடும்பம் அவருது ,அந்த குடும்பத்துக்கு ஒரு பெரிய பிரச்சனை வருது.. அத நம்ம ஜார்ஜ் எப்படி  புத்திசாலித்தனமா தீர்க்குறார் என்பது தான் மீதி கதை..

                       படத்தோட டைரக்டர் பேரு Jeethu Joseph..முதல்ல ஒரு thriller படத்த இவ்ளோ thrilling-ah குடுத்ததுக்கு முதல்ல படத்தோட டைரக்டர் ஒரு பெரிய பாராட்டுகள்.. இவ்ளோ புத்திசாலித்தனமா ஒரு படத்த உருவாக்கனதுக்கு டைரக்டர்க்கு ரெண்டாவது பெரிய பாராட்டுகள்.. கண்டிப்பா இந்தியாவோட சிறந்த டைரக்டர்கள்ல இவருக்கு கண்டிப்பா ஒரு முக்கியமான இடம் இருக்கும்..படத்துல 'அந்த பிரச்சனை' ஆரம்பிச்சிட்ட அப்புறம் நடக்குற ஒவ்வொரு சீனும் ரொம்ப அபாரம்.. நாம எதிர்ப்பார்க்காத திரைக்கதை.. அதுவும் கிளைமாக்ஸ்ல ஜார்ஜ் போலீஸ் கிட்ட "இந்த போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸும் தான் என்ன காப்பாதுரவங்கன்னு" சொல்லிட்டு போகும் போது , அதுல ஒரு காரணம் இருக்குனு காமிக்கிற சீன்லாம் அபாரம்..இந்த டைரக்டரோட இன்னொரு சிறந்த thriller படம் Memories .. அதையும் மறக்காம பாருங்க..

                      நம்ம ஜார்ஜ் குட்டியா நடிச்சி இருக்குறது நம்ம மோகன்லால்.. ரொம்ப நாளைக்கு அப்புறம் மலையாளத்துல அவரோட ஹிட் படம்.. சில வருடங்களா அவருடைய படங்கள் எல்லாமே சுமார் ,படு சுமார் ,சுத்த போர் இந்த மாதிரி தான் இருந்திச்சி.. மோகன்லால் ஓட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிச்சி.. ஆனா இந்த படத்து மூல்யமா ஒட்டு மொத்த மலையாள திரையுலகமே இப்ப அவர தூக்கி வெச்சி கொண்டாடிட்டு இருக்காங்க.. லால் சேட்டன் படத்துல பட்டய கிளப்பி இருப்பாரு.. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் ஆள் .. தன் குடும்பத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யுற அந்த கேரக்டர்க்கு அப்படியே பொருந்தி இருக்காரு.. இப்ப இந்த கேரக்டர்ல வேற யார் நடிச்சாலும் இவ்ளோ சிறப்பா இருக்குமான்னு எனக்கு தோனல.. தெரியல..


                      படத்துல ஹீரோயின் கேரக்டர்ல நடிச்சி இருப்பது நம்ம தில்லான தில்லான 'மீனா'.. வெகுளியான மனைவி கேரக்டர்ல ரொம்ப நல்ல நடிச்சி இருப்பாங்க.. ரெண்டு பொண்ணுங்களா நடிச்சி இருக்குறது அன்சீபா மற்றும் எஸ்தர்... அதுல அந்த சின்ன பொண்ணு எஸ்தர் ரொம்ப நல்லா  நடிச்சி இருக்கும்.. கடைசி வரைக்கும் அவங்க அப்பா சொன்னத வைராக்கியமா காப்பாத்த நினைக்குறதும் ,கடைசியில அடிவாங்குறதுக்கு பயந்து உண்மைய சொல்லுவதாகட்டும்.. பாப்பா ரொம்ப நல்ல நடிச்சி இருக்கும்.. படத்தோட முக்கிய கேரக்டர் அன்சீபா.. அந்த பொண்ணும் ரொம்ப நல்லா நடிச்சி இருப்பா.. இவங்கள தவிர படத்துல 2 முக்கியமான கேரக்டர் இருக்கு.. ஒன்னு constable சஹாதேவன் (சஹாதேவனா நடிச்சி இருக்குறது Kalabhavan Shajon ).. இன்னொன்று IG கீதா ( கீதாவா நடிச்சி இருக்குறது Asha Sarath )... படத்துல எல்லாருமே அவங்கவங்க கேரக்டர்-ah ரொம்ப சிறப்பா செஞ்சி இருப்பாங்க..
                        படத்துல ஒரு வசனம் வரும் "ஒரு Visuals ( கண்ணால பார்க்கும் காட்சி ) நம்ம மூலையில பதியிர அளவுக்கு வேற எந்த விஷயமும் நமக்கு அவ்ளோ நல்லா பதியாது " , அந்த விதத்துல இந்த படத்தோட டைரக்டர் அவோரோட Visual-ah ( த்ரிஷியத்த ) நம்ம மனசுலையும் சரி மூலையிலையும் சரி நல்லா பதிச்சிட்டாறு...
                       முதல் வேலையா மத்த எல்லா படத்தையும் ஏறக்கட்டி வெச்சிட்டு.. இந்த படத்த பாருங்க...MUST WATCH FOR ALL...!!

MY RATING -4/5


பி.கு : இந்த படத்த Jeethu Joseph ,தமிழ்ல நம்ம உலகநாயகன வெச்சி எடுக்குறாரு.. கூடிய விரைவில் ,த்ரிஷியத்த தமிழ்ல எதிர்பார்க்கலாம்.. இப்பதிக்கு இந்த படத்த தெலுகுலையும் , கன்னடத்தலையும் வேற டைரக்டர்ஸ் ரீமேக் பண்ண ஆரம்பிச்சிடாங்க..!


FAVOURITE CULT MOVIES IN TAMIL..!!

                      இன்னிக்கி தமிழ் movies-ல எனக்கு புடிச்ச 'Cult Movies' பத்தி பார்க்கலாம்.. 'Cult Movies'னா என்னன்னு இதுக்கு முன்னாடி போஸ்ட்லையே நான் எனக்கு தெரிஞ்சத வெச்சி சொல்லிட்டேன்.. பரவால அத பத்தி திரும்பவும் சொல்றேன்..
                      'Cult' - இந்த வார்த்தைக்கான பொதுவான அர்த்தம் என்னன்னா ஒரு விஷயத்த பயங்கரமா ( வெறியா ) வழிபடுறது..
                       சரி இப்ப Cult Movies-ன என்னன்னு பாப்போம்.. ஒரு படத்த அது ரிலீஸ் ஆகி பல வருஷங்கள் கழிச்சியும்.. அந்த படத்துல வர காட்சியை ,வசனத்தை ,இசையை ரசிகர்கள் கொண்டாடி ரசிச்சிட்டே இருந்தாங்கனா ,அந்த படத்த Cult Movieன்னு சொல்லுவாங்க.. அந்த படங்கள் வெளியான நேரத்துல ,அந்த படங்கள் பொருளாதரத்தில் பெரிய புரட்சி உண்டு பண்ணாமல் இருந்து இருக்கலாம்.. ஆனா மக்கள் மனதுல பயங்கரமான புரட்சி உண்டு பண்ணி இருக்கும்.. அப்போ ஏன் படம் ஹிட் ஆகலன்னு யோசிக்கிரிங்களா..?? இதற்கான பதில தான் நானும் தேடிட்டு இருக்கேன்.. 'மான் கராத்தே' மாதிரி படம் ஹிட் ஆகும் போது ஏன் 'ஆயிரத்தில் ஒருவன்' மாதிரி படம் ஹிட் ஆகுல..? இது என்ன மாத்திரம் உறுத்துற கேள்வி இல்ல.. எல்லா சினிமா வெறியர்களுக்குமே இருக்குற ஒரு ஆதங்கம்.. ஆனா அதுக்கு நிறைய காரணங்கள் சொல்லுவாங்க.. படம் மக்களுக்கு புரியல ,பெண்கள் பார்க்க முடியாது , குடும்பங்களுக்கான படம் கிடையாது ,சரியான நேரத்துல ரிலீஸ் ஆகல.. இதுமாதிரி என்னனவோ காரணங்கள் சொல்லுவாங்க.. எனக்கு எதுமே சரியாய் படல.. அதுக்கான விடையை தேடிட்டே தான் இருக்கேன்.. என்னிக்குமே தேடிட்டே தான் இருப்பேன்.. ஏன்னா அந்த விடையை பெரிய பெரிய டைரக்டர்ஸ் ,தயாரிப்பாளர்கள்னாலயே கண்டுபுடிக்க முடில.. நாம எங்க..? அட Cult பத்தி பேச ஆரம்பிச்சு ,topic எங்கங்கயோ போகுது.. சரி மறுபடியும் Cultக்கு வருவோம்.. இந்த படங்கள் ரிலீஸானா சமயத்துல ,இந்த படங்கள் பெரிய சர்ச்சையை உண்டு பண்ணி இருக்கும்.. காரணங்கள் நிறைய இருக்கலாம்.. வன்முறை ,மதம் ,பாலியல் பிரச்சனை ,gore ,nudity இதுல எது வேணும்னாலும் இருக்கலாம்.. இந்த மாதிரி சர்ச்சையான படங்களும் Cult வகையில சேரும்.. சரி இந்த மாதிரி Cult படங்களில் எனக்கு புடிச்ச 10 படங்கள் பத்தி பார்க்கலாம்... இந்த படங்களில் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சது.. என்னால இந்த படங்கள Top 10-ah வரிசை படுத்த முடியல..
                       தமிழ் படங்களுல 'Cult Movies'-ah கண்டுப்புடிக்கிறது ரொம்ப சுலபம்.. உங்களுக்கு ஒரு படம் புடிச்சி இருந்து அந்த படம் ஹிட் ஆகலைன்னு வெய்ங்க.. அந்த படம் கண்டிப்பா 'Cult Movie' தான்.. எனக்கு தெரிஞ்சி தமிழ்ல Cult Moviesன்னு சொல்ற ஒருசில படங்கள தவிர எல்லாமே பொருளாதாரத்துல பெரிய வெற்றியடையில..



10.Kattradhu Thamizh - Ram


                      தியேட்டர்ல இந்த படம் சரியாய் போகலைனாலும்.. Facebookல படம் ரொம்ப நல்லா போச்சு.. ரொம்ப நல்லா பேச்சு.. படத்தோட ஒவ்வொரு வசனமும் ,ரொம்ப நல்லா இருக்கும்.. மனசாட்சிய தட்டி கேக்குற மாதிரி இருக்கும்.. படம் பிரபாகருக்கும் ,ஆனந்திக்கும் இருக்குற அழகான காதல சொல்லும்... சின்ன வயசுல ஆரம்பிச்சி ,இருதி காட்சி வரைக்கும் அவங்களுடைய காதல் ரொம்ப அழகா இருக்கும்..படம் முடியும் போது.. கண்டிப்பா உங்க கண்ணு கலங்கும்..


9.Virumaandi - Kamal Haasan


                      கமல் ஓட நிறைய படங்கள் கண்டிப்பா தமிழ் 'Cult Movies'-ல சேரும்.. என்னதான் அவரு இங்கிலீஷ் படங்கள பார்த்து காப்பி அடிக்கிறாரு என்ற வாதங்கள் இருந்தாலும். தமிழ் சினிமாவ அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லுற ஆட்களில் முதல் நாயகன் நம் உலக நாயகன்.. இந்த படத்த Rashomon effect  ( இதைப்பற்றி தெரிந்து கொள்ள அதை கிளிக் செய்யவும் ) அப்படின்னு சொல்ற கான்செப்ட் வெச்சி எடுத்து இருப்பாங்க.. இந்த படத்தோட மெயின் தீம் தூக்கு தண்டனையா நம்முடைய நாட்டுல இருந்து நீக்கணும் என்பது தான்.. அதுக்கு ஒரு அற்புதமான கதை அமைச்சி.. அந்த ஒரே கதைய ரெண்டு பேரோட கோணத்துல ரொம்ப நல்லா காமிச்சி இருப்பாங்க.. இந்த படம் சரியாய் ஓடல.. ஆனா நிறைய பேருக்கு புடிச்சி இருந்திச்சி.. இது போதும் ,இந்த படத்த Cult வகையில சேக்குறதுக்கு..


8.Aadukalam - Vetrimaran


                     பொல்லாதவனுக்கு அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படம்னால , இந்த படத்துக்கு சம எதிர்பார்ப்பு இருந்திச்சி.. கோழி சண்டைய மையமா வெச்சி வந்த இந்த படம்.. மனுஷங்களோட சண்டைய ரொம்ப வெளிப்படையா காமிச்சி இருக்கும்.. ஒரு குருவுக்கும் சிஷ்யனுக்குமான சண்ட தான் படம்.. படத்துல அந்த கோழி சண்ட Graphicsனாலும் ரொம்ப தத்ரூபமா இருக்கும்.. இந்த படத்த நிறைய வாட்டி டிவி-ல போட்டுடாங்க.. பார்க்க தவறி இருந்திங்கனா.. மறக்காம அடுத்த வாட்டி பாருங்க.. இந்த படத்துக்கு நம்ம தனுஷ் நடிப்புக்கு தேசிய விருது வாங்குனாரு..அதோடு சேர்ந்து படம் மொத்தம் 6 தேசிய விருது வாங்கிச்சி.. இந்த படத்துக்கு வெற்றிமாறன் 3 கிளைமாக்ஸ் எடுத்து வெச்சி இருந்தாருன்னு கேள்விப்பட்டேன்...


7.Anbe Sivam - Sundar.C


                        எனக்கு மிகவும் புடிச்ச படங்களுள் இதுவும் ஒன்று ,ஏன் ஒரு முக்கியமான ஒன்று.. முன்னப்பின்ன தெரியாத ரெண்டு பேர் ,ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையினால ஒன்னா சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தம்.. அதுனால அவங்க ரெண்டு பேர் வாழ்கைலயும் நடக்குற விஷயங்கள் தான் கதை.. இந்த படம் ஏன் தோல்வி அடஞ்சிச்சின்னு இன்னிக்கு வரைக்கும் தெரில.. அப்படி என்ன அந்த படத்துல நல்லா இல்லைன்னு தெரிஞ்சிக்க  நானும் ஒரு 30 முறை பார்த்து இருப்பேன்.. ஆனால் ஒவ்வொரு வாட்டியும் அந்த படத்து மேல இருந்த ஈடுப்பாடு தான் அதிகம் ஆச்சு.. ரொம்ப சிறந்த படம்.. என்ன பொறுத்த வரைக்கும் தமிழ் சினிமால வந்த சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று..!!


6.Moodar Koodam - Naveen 


                என்னுடைய நண்பர்கள் இந்த படத்துக்கு போய்ட்டு வந்து ,யாரும் போய்டாதீங்கன்னு சொன்னங்க ,ஆனா படத்தோட trailer-ah முன்னாடியே பார்த்த காரணத்துனால நான் அவங்க பேச்சை மீறி அந்த படத்துக்கு போனேன்.. படம் என்ன ஒரு நிமிஷம் கூட ஏமாத்துல.. அப்புறம் தான் உணர்ந்தேன்.. நம்ம மக்கள்ள நிறைய பேர் இன்னும் மாறவே இல்லைன்னு.. இன்னும் அவங்களுக்கு 5 பாட்டு ,8 சண்ட கொண்ட படங்கள் தான் பிடிக்குது.. இது என்னிக்கு மாறுமோ..? சரி அத விடுவோம்.. ஒரு 4 பேரு போலீஸ் ஸ்டேஷன்ல சந்திக்கிறாங்க.. அதுல ஒருத்தனோட மாமா வீட்டுல கொள்ளை அடிக்க போறாங்க.. அங்க இருந்து ஆரம்பிக்குதுங்க comedy.. படத்த ரொம்ப ரசிச்சி ரசிச்சி பார்த்தேன்.. படத்துல நாய்ல இருந்து பொம்மை வரைக்கும் எல்லாருக்குமே ஒரு அருமையான flashback.. படத்தோட type Guy Ritchie படம் மாதிரி இருந்தாலும்.. ஒரே வீட்டுல நடக்குற கதைய போர் அடிக்காம சொன்னதுக்கு நவீன்க்கு பெரிய பாராட்டுகள்..       


5.Heyram - Kamal Haasan


                    இந்த படம் ரிலீஸ் ஆன நேரத்துல படம் படுதோல்வி அடஞ்சிச்சி.. அப்போ நான் சின்ன பையன்.. இந்த படம் நீ பாக்க கூடாதுடான்னு என் வீட்டுல சொல்லிட்டாங்க.. படத்துல ஏதோ தப்பான விஷயம் இருக்குது போல ,அதுனால தான் இப்படி சொல்ராங்கன்னு நினைச்சிக்கிட்டேன்.. எல்லாம் புரியுற வயசு வந்த அப்புறம் ,இந்த படத்த உட்கார்ந்து பார்த்த தான் புரியுது படத்துல வர அந்த முத்தகாட்சிகாக என்ன படத்தையே பார்க்க வேணாம்னு சொல்லிட்டாங்கன்னு.. அப்படியே படத்த பார்த்து இருந்தாலும்.. ஒன்னும் புரிஞ்சி இருக்காது அந்த வயசுல..,இந்த படத்த semi-Fictionalன்னு  சொல்லுவாங்க.. ஏன்ன படம் உண்மை சம்பவங்கள அடிப்படையா கொண்டு உருவாக்கப்பட்டது.. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிஞ்ச சமயத்துல ஏற்படுற கலவரத்துனால பாதிகப்படுற ஒரு மனிதனுடைய பார்வையும் வலியும் தான் இந்த படம்.. இந்திய சினிமால ரொம்ப முக்கியமான படம்.. அறிவுக்கும் சரி ,மனசுக்கும் சரி...


4.Aayirathil Oruvan - Selvaraghavan


                    இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ரொம்ப அதிகமா இருந்திச்சி.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. இந்த படத்துக்கு அடிச்சி புடிச்சி FDFS டிக்கெட் வாங்கிட்டு படத்த பார்த்தேன்.. 1st half முடிஞ்சா அப்புறம் வேற உலகத்துல இருந்திட்டு வந்த மாதிரி இருந்திச்சி... கண்டிப்பா இதுதான் selva ஓட masterpiece என்ன பொறுத்தவரைக்கும்.. ஒரு சோழர்கள் வாந்த இடத்த கண்டுபுடிக்க சென்ற  ஆராய்ச்சியாளர தேடி போற பயணம் ,7 தடைகள தாண்டி, சோழர்கள் வாழ்ந்த இடத்த கண்டுபுடிக்கிறாங்க.. அதுக்கு அப்புறம் தான் அவங்களுக்கு தெரியுது சோழ  வம்சம் இன்னும் இருக்காங்கனு .. அதுக்கு அப்புறம் என்ன நடந்துது என்பத Fantasy-ah சொல்லி இருப்பாரு.. இந்த மாதிரி படத்த செலவானால மட்டும் தான் எடுக்க முடியும்... தமிழ் சினிமால இருக்குற சிறந்த Cult Movieல இந்த படம் கண்டிப்பா முக்கியமானதா இருக்கும்..


3.Pudhupettai - Selvaraghavan


                    என்ன பொறுத்த வரைக்கும் செல்வராகவன் genius என்பதுக்கு ஆயிரத்தில் ஒருவன் அப்புறம் புதுபேட்டை.. இந்த ரெண்டு படமே போதும் .. இது வரைக்கும் நான் பார்த்த gangster சினிமாலையே.. ஒரு உண்மையான முயற்சி இந்த படம் தான்.. படத்துல ஒவ்வொரு வசனமும் ரொம்ப அற்புதமா இருக்கும்.."நெருப்பு மாதிரி வேல செய்யணும் குமாரு" , "தியாகம் தான் உன்னை உயர்த்தும்" , "உயிரோடிருக்கணும் கண்ணு" , ஒவ்வொரு வசனமும் எனக்கு மனப்பாடமா தெரியும்.. ஒரு சாதாரண பையன் எப்படி பெரிய தாதா ஆகுறான்றது தான் கதை.. ஆனா அத ரொம்ப தத்ரூபமா காமிச்சி இருப்பாரு.. இந்த படத்தோட பெரிய சறுக்கலா சொன்னது தனுஷ் ஹீரோவா நடிச்சததான்.. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் குமார் கேரக்டர்ல தனுஷ தவிர வேற யாரு நடிச்சி இருந்தாலும் ,இந்த அளவுக்கு நல்லா இருந்து இருக்குமான்னு எனக்கு தெரில.. படத்தோட BGM அதுக்காகவே படத்த இன்னும் சில வாட்டி சேர்த்து பார்க்கலாம்..அதுவும் கிளைமாக்ஸ்ல மூர்த்திய வெட்டும் போது ஒரு BGM வரும் பாருங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.. ஒரு வேல இந்த படத்த தவற விட்டு இருந்திங்கனா.. தயவு செய்து முதல் வேலையா இந்த படத்த பாருங்க..!! 


2.Aaranya Kaandam - Thiagarajan Kumararaja


                 தமிழ் சினிமாவோட முதல் neo-noir ,Genre வகையை சார்ந்த படம் இதுதான்.. சில நல்ல படங்கள் தோல்வி அடைஞ்சி இருக்கு.. ஆனா அது கொஞ்ச நாளாவது தியேட்டர்ல ஓடி பார்த்து இருக்கேன்..ஆனா இந்த படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆன ஞாபகம் நிஜமா எனக்கு இல்ல.. இந்த படத்த பத்தி நான் கேள்வி பட்டேன்.. அதுனால மொக்க பிரிண்ட் ஆகுது டவுன்லோட் பண்ணி பார்த்தேன்.. ஆனா நிறைய பேருக்கு விஜய் அவார்ட்ஸ்ல இந்த படம் நிறைய விருது  வாங்குன அப்புறம் தான் ,இப்படி ஒரு படம் இருக்குனே நிறைய பேருக்கு தெரிஞ்சிச்சி.. ஒரு வேல இந்த படத்துக்கு சரியான விளம்பரம் குடுத்து இருந்த படம் நல்ல ஓடி இருக்குமோ என்னவோ..? எப்படி இருந்தாலும் இந்திய சினிமாலையே இந்த படம் ஒரு மைல் கல்.. படத்தோட திரைக்கதை ரொம்ப அற்புதமா இருக்கும்.. 6 பேரோட வாழ்க்கைல நடக்குற கதை தான் இந்த படம்.. படத்துல ஒவ்வொரு கேரக்டரும் ரொம்ப தனித்துவமா இருக்கும்.. எல்லாரும் படத்துல ரொம்ப நல்லா நடிச்சி இருப்பாங்க.. தமிழ் சினிமாவ உலக அரங்குல தலை நிமிர செய்த படம்.. படத்தோட BGM படத்துக்கு பெரிய பிளஸ்.. படத்துல பாட்டுலாம் கிடையாது.. படம் போறதே தெரியாது.. அவ்ளோ ஸ்பீடா போகும்.. தவறாம பார்க்க வேண்டிய படங்களுள் இதுவும் ஒன்று..!!


1.Onaayum Aattukkuttiyum - Myskkin       


                     தமிழ் சினிமால அடுத்து நான் ரொம்ப ரசிக்கிற டைரக்டர் ,மிஸ்கின்.. மனிதர்கள் உணர்வ ,அவங்க பயத்த ,அவங்களுடைய கோவத்த ரொம்ப நுட்பமா வெளிப்படுத்துற டைரக்டர்.. சித்திரம் பேசுதடில இருந்து இந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வரை அவருடைய எல்லா படங்களும் எனக்கு ரொம்ப புடிக்கும் ( முகமூடி தவிர ).. தமிழ் சினிமால Crime/Thriller படம் எடுக்குறவங்க ரொம்ப கம்மி.. பொதுவாவே எனக்கு அந்த Genre படங்கள்னா ரொம்ப புடிக்கும்.. அதுனால இவர ரொம்ப புடிக்கும்.. இந்த படத்தோட கதை என்னன்னா ஒரு மருத்துவ கல்லூரி பையன் ,ரோட்ல குண்டடி பட்டு இருக்குற ஒருத்தர ,வேற வழி இல்லாத காரணத்துனால அவனே operation பண்ணி காப்பாதுறான்.. அடுத்த நாள் காலைல அந்த குண்டடி பட்டவன் எஸ்கேப் ஆய்டுறான்... அதுக்கு அப்புறம் அந்த பையன போலீஸ் கைது பண்ண வருது .. அப்புறம் தான் தெரியுது ,அவன் காப்பாத்துனது ஒரு மிகபெரிய கொலை குற்றவாளியன்னு.. போலீஸ் அந்த பையன் தான் அந்த குற்றவாளிய சுட்டு கொல்லணும்னு சொல்றாங்க.. அதுல இருந்து படம் பயங்கர ஸ்பீடா போகும்.. படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச சீன் அந்த கல்லறைல கதை சொல்ற சீன்.. அந்த சீனுக்காகவே படத்த 3 தடவ நான் தியேட்டர்ல பார்த்தேன்.. தமிழ் 'Cult Movies'னு யாரு போஸ்ட் போட்டாலும் முதல் 10 இடங்களில் இந்த படம் கண்டிப்பா வந்துரும்.. அதுனால படத்த பார்க்கலைனா , தவறாம பாருங்க.. ரொம்ப அருமையான படம்.. 

OTHER MOVIES

                       எனக்கு புடிச்ச வேற சில tamil Cult Movies ஓட போட்டோஸ்ஸ கீழ போட்டு இருக்கேன்.. பார்த்து தெரிந்து கொள்ளவும்.. இதுல சில படங்கள் வசூல் ரீதியா பெரிய சாதனையும் பண்ணி இருக்கு.. சில படங்கள் சுத்தமா ஓடாமையும் இருந்து இருக்கு.. ஆனா என்ன பொறுத்த வரைக்கும் ,இது எல்லாமே எனக்கு புடிச்ச cult movies  



 பி.கு :எனக்கு புடிச்ச English Cult Movies பத்தி படிக்கணும்னா அதை கிளிக் செய்யவும்....

Minimalistic Photo Courtesy : Arun Prasad ( Bro Once Again Thanks Fa letting me use your works..!! )